For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

அவர் ஒரு துரதிர்ஷ்டசாலி.. இந்தியாவுக்காக நிறைய விளையாடி இருக்கனும்.. சோயிப் அக்தர் ஆதங்கம்

மும்பை: ஐபிஎல் தொடரை உலகம் முழுவதும் உள்ள கிரிக்கெட் ரீசிகர்கள் பார்த்து வரும் நிலையில், இளம் வீரர் ஒருவருக்காக பாகிஸ்தான் முன்னாள் வீரர் சோயிப் அக்தர் ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

ராஜஸ்தான் அணியின் கேப்டனாக செயல்படும் சோயிப் அக்தர், ஐபிஎல் மற்றம் உள்ளூர் கிரிக்கெட்டில் அசத்தி வருகிறார்.

இதுவரை 124 ஐபிஎல் போட்டியில் விளையாடி 3161 ரன்கள் விளாசியுள்ளார். இதில் 3 சதங்கள், 16 அரைசதங்களும் அடங்கும்.

யூடியூப்பில் ஐபிஎல் நேரலை..ரசிகர்களுக்கு மகிழ்ச்சி செய்தி..பிசிசிஐ ஏற்பாடு செய்தது எப்படி தெரியுமா??யூடியூப்பில் ஐபிஎல் நேரலை..ரசிகர்களுக்கு மகிழ்ச்சி செய்தி..பிசிசிஐ ஏற்பாடு செய்தது எப்படி தெரியுமா??

சோயிப் அக்தர்

சோயிப் அக்தர்

இந்த நிலையில், பாகிஸ்தான் அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் சோயிப் அக்தர் அளித்த பேட்டியில், இந்திய அணிக்காக சஞ்சு சாம்சன் அதிக போட்டியில் விளையாடி இருந்திருக்க வேண்டும் என்று தெரிவித்தார். இந்திய கிரிக்கெட்டிலேயே ஒரு சிறந்த வீரராக சஞ்சு சாம்சன் விளங்குவதாக பாராட்டு தெரிவித்த சோயிப் அக்தர்,

துரதிர்ஷ்டம்

துரதிர்ஷ்டம்

எனினும் அவரால் இந்திய அணியில் நிரந்தர இடம் பிடிக்க முடியாமல் போனது அவரின் துரதிர்ஷ்டம் தான் என்று கூறியுள்ளார். அவருக்கு நிறைய திறமை இருக்கிறது என்று சோயிப் அகத்ர் பாராட்டியுள்ளார். சஞ்சு சாம்சன் இது வரை இந்திய அணிக்காக ஒரு ஒருநாள் போட்டி மற்றும் 13 டி20 போட்டியில் மட்டுமே விளையாடி இருக்கிறார்.

ரோகித் ஆதரவு

ரோகித் ஆதரவு

சஞ்சு சாம்சன் கடைசியாக இலங்கைக்கு எதிரான டி20 தொடரில் களமிறங்கினார். அதில், 39 ரன்களும், 18 ரன்களும் அடித்திருந்தார். சஞ்சு சாம்சனிடம் அதீத திறமை இருக்கிறது. ஆனால் அவருக்கு போதிய வாய்ப்பு வழங்கப்படவில்லை. ஆஸ்திரேலியா போன்ற மைதானங்களில் சஞ்சு சாம்சன் போல் விளையாடக் கூடியவர் தேவை.

முதலிடம்

முதலிடம்

இதனால் சஞ்சு சாம்சனுக்கு இந்திய அணியில் தொடர்ந்து இடம் கொடுத்து நம்பிக்கை அளிக்க முயற்சி செய்வேன் என்று கேப்டன் ரோகித் சர்மா அன்மையில் கூறியிருந்தார். சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் அணி புள்ளி பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. சஞ்சு சாம்சனை பாகிஸ்தான் முன்னாள் வீரர் அக்தர் பாராட்டும் நிலையில், ரவி சாஸ்த்ரியும், கவாஸ்கரும் திட்டி வருகிறார்கள். அதனை பின் வரும் செய்தியில் பார்க்கலாம்.

Story first published: Wednesday, April 6, 2022, 15:02 [IST]
Other articles published on Apr 6, 2022
English summary
IPL –Shoaib Akhtar reveals that sanju Samson is an unlucky Player அவர் ஒரு துரதிர்ஷ்டசாலி.. இந்தியாவுக்காக நிறைய விளையாடி இருக்கனும்.. சோயிப் அக்தர் ஆதங்கம்
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X