For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

சுயநலமான கேப்டன்சியா??.. ஹர்திக் பாண்ட்யா மீது எழும் பரபரப்பு குற்றச்சாட்டுகள்.. என்ன நடந்தது?

சென்னை: நியூசிலாந்து அணியுடனான டி20 கிரிக்கெட் தொடரில் ஹர்திக் பாண்ட்யா தனது கேப்டன்சியை தவறாக பயன்படுத்திக்கொண்டார் என்ற குற்றச்சாட்டுக்கள் எழுந்து வருகிறது.

இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நேற்றுடன் நிறைவடைந்தது. இதில் இந்தியா 3 - 1 என்ற புள்ளிக்கணக்கில் இந்தியா தொடரை கைப்பற்றியது.

அகமதாபாத்தில் நடந்த 3வது போட்டியில் இந்திய அணி 20 ஓவர்களில் 234 ரன்கள் என்ற இமாலய இலக்கை நிர்ணயித்த சூழலில் நியூசிலாந்து அணி வெறும் 66 ரன்களுக்குள் ஆல் அவுட்டானது.

99 ரன்களில் சுருண்ட நியூசிலாந்து.. செம பதிலடி கொடுத்த இந்தியா.. கொத்தாக விழுந்த விக்கெட்டுகள் 99 ரன்களில் சுருண்ட நியூசிலாந்து.. செம பதிலடி கொடுத்த இந்தியா.. கொத்தாக விழுந்த விக்கெட்டுகள்

டி20 கேப்டன்சி

டி20 கேப்டன்சி

இந்தாண்டு நடைபெறும் 50 ஓவர் உலகக்கோப்பை தொடருக்காக இந்திய அணியை ரோகித் சர்மா தயார் செய்து வருகிறார். மறுபுறம் 2024ல் வரவுள்ள டி20 உலகக்கோப்பை தொடருக்கு தயார் ஆகும் வகையில் தான் இளம் படையை ஹர்திக் பாண்ட்யாவின் கையில் ஒப்படைத்தனர். அதற்கேற்றார் போலவே இலங்கை, நியூசிலாந்து தொடர்களில் வெற்றியை தேடிக்கொடுத்துள்ளார்.

 பவுலிங் ஆசைகள்

பவுலிங் ஆசைகள்

இந்நிலையில் கேப்டன்சியை பயன்படுத்தி ஹர்திக் பாண்ட்யா சுயநலமாக செயல்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த குற்றச்சாட்டிற்கு முதல் காரணம் அவரின் பவுலிங் தான். வழக்கமாக மிடில் ஓவர்களில் வரும் பாண்ட்யா தற்போதெல்லாம் வீசினால், முதல் ஓவரை தான் வீசுவேன் என அடம்பிடிக்கிறார். உம்ரான் மாலிக், அர்ஷ்தீப் சிங், ஷிவம் மாவி போன்ற முழு நேர வேகப்பந்துவீச்சாளர்கள் உள்ள போதும் இவர் முன் சென்றுவிடுகிறார்.

பவுலர்கள் புறகணிப்பு

பவுலர்கள் புறகணிப்பு

இதே போல பிட்ச் சுழற்பந்துவீச்சுக்கு சாதகமாக இருந்தாலும் சரி, வேகப்பந்துவீச்சுக்கு சாதகமானாலும் சரி, பாண்ட்யா முழுமையாக 4 ஓவர்களை வீசியே தீருவேன் என இருக்கிறார். முழு நேரமாக பவுலிங்கிற்கு வந்தவர்களெல்லாம் ஒரு ஓவர், இரண்டு ஓவர்கள் என வீசிவிட்டு வேலையின்றி நிற்கின்றனர். குறிப்பாக லக்னோ களம் அதிகம் ஸ்பின் ஆன போதும் யுவேந்திர சாஹலுக்கு 2 ஓவர்கள் தான் தரப்பட்டன. ஆனால் பாண்ட்யா 4 ஓவர்களை போட்டுக்கொண்டார்.

பேட்டிங் ஆசை

பேட்டிங் ஆசை

பேட்டிங்கிலும் 6வது அல்லது 7வது வரிசையில் களமிறங்கி வந்த பாண்ட்யா தற்போதெல்லாம் 4வது அல்லது 5வது இடத்தில் விளையாடவே விரும்புகிறார். தீபக் ஹூடா போன்ற பேட்ஸ்மேன் டாப் ஆர்டரில் விளையாடக்கூடியவர். ஆனால் அவரை பின்னுக்கு தள்ளிவிட்டு, இவர் முன்கூட்டி விளையாடுகிறார். இது தான் முதல் டி20ல் தோல்வியடைந்ததற்கும் காரணமாக பார்க்கப்பட்டது.

தொடர் நாயகன் விருது

தொடர் நாயகன் விருது

பாண்ட்யாவின் இந்த செயல்களுக்கு விளைவு நியூசிலாந்து தொடரின் நயாகன் என்ற விருது வழங்கப்பட்டுள்ளது. மொத்தமாக 66 ரன்கள், 5 விக்கெட்கள், 2 கேட்ச்-களை பிடித்ததற்காக தொடர் நாயகன் விருதை கொடுத்தனர். ஒருவேளை மற்ற பவுலர்கள் மற்றும் பேட்ஸ்மேன்களை முழுமையாக பணி செய்யவிட்டிருந்தால், இந்த விருது கிடைத்திருக்குமா என்பது சந்தேகம் தான்.

Story first published: Thursday, February 2, 2023, 11:31 [IST]
Other articles published on Feb 2, 2023
English summary
Is hardik pandya act as a selfish captain of Team India in t20 format, fans raising a question over him
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X