For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ஓயாமல் குரல் கொடுத்த ரசிகர்கள்.. எம்.எஸ்.தோனி செய்த விஷயம்.. முதல் டி20ல் சுவாரஸ்ய சம்பவம்!

ராஞ்சி: நியூசிலாந்துடனான முதல் டி20 போட்டியின் போது ஓயாமல் குரல் கொடுத்து வந்த ரசிகர்களுக்காக முன்னாள் கேப்டன் எம்.எஸ்.தோனி செய்த விஷயம் இணையத்தில் தீயாய் பரவி வருகிறது.

இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டி20 போட்டி ராஞ்சி மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் இந்திய அணி 21 ரன்கள் வித்தியாசத்தில் போராடி தோற்றது.

இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்கள் இழப்புக்கு 176 ரன்களை குவித்தது. இதன் பின்னர் ஆடிய இந்திய அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்களை இழந்து 155 ரன்களை மட்டுமே எடுத்தது.

தோனி வருகை

தோனி வருகை

இந்தியா தோல்வியடைந்த போதும், ரசிகர்களுக்கு தோனியை பார்த்தது பெரும் மகிழ்ச்சியை கொடுத்துள்ளது. போட்டி நடைபெற்ற ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சி, எம்.எஸ்.தோனியின் சொந்த ஊராகும். இதனால் முதல் டி20 போட்டியில் இந்திய வீரர்களுக்கு ஒரு ஆலோசகரை போல தோனி வந்துவிட்டார். பயிற்சியின் போதே வந்து ராஞ்சி மைதானத்தின் தன்மை எப்படி இருக்கும், அங்கு எப்படி பேட்டிங், பவுலிங் செய்ய வேண்டும் என இளம் வீரர்களுக்கு அறிவுரைகளை கூறினார். மேலும் போட்டியையும் மனைவியுடன் அமர்ந்து பார்த்து ரசித்தார்.

சுவாரஸ்ய சம்பவம்

சுவாரஸ்ய சம்பவம்

இந்நிலையில் ஆட்டத்தின்போது நடந்த சுவாரஸ்ய சம்பவம் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. நியூசிலாந்து இன்னிங்ஸின் போது, திடீரென கேமிரா தோனி அமர்ந்திருந்த பக்கம் திரும்பியது. தோனியை பெரிய திரையில் பார்த்த ரசிகர்கள், போட்டி ஒன்று நடப்பதையே ஒட்டுமொத்தமாக மறந்துவிட்டனர். மாறாக தோனி, தோனி, தோனி என ஓயாமல் குரல் கொடுத்தனர்.

தோனியின் ரியாக்‌ஷன்

தோனியின் ரியாக்‌ஷன்

ரசிகர்கள் விடாமல் அழைப்பதை பார்த்த தோனி, உடனடியாக சற்று எழுந்து கை அசைத்து அனைவருக்கும் வணக்கம் கூறினார். இதனை பார்த்த ரசிகர்களும் உற்சாக குரல் கொடுத்தனர். இதனால் ஒரு சில நிமிடங்களுக்கு மைதானம் தோனிக்கான சிறப்பு நிகழ்ச்சியை போல மாறியது. இதன் காட்சிகள் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

நிரந்தர பணி

நிரந்தர பணி

இது ஒருபுறம் இருக்க, இந்த போட்டியை போலவே நிரந்தரமாக இந்திய அணியுடன் தோனி பணியாற்றுவதற்கான வாய்ப்புகள் உருவாகி வருகின்றன. 2024ம் ஆண்டு டி20 உலகக்கோப்பையை மனதில் வைத்து தான் இளம் படை தயாராகி வருகிறது. இந்த அணியின் ஆலோகராக தோனியை நியமிக்க பிசிசிஐ ஆலோசனை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

Story first published: Saturday, January 28, 2023, 9:28 [IST]
Other articles published on Jan 28, 2023
English summary
Former Indian captain MS Dhoni's reaction leaves fans in happy on India vs new zealand 1s T20 match, here is the trending pictures
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X