For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

வந்தாச்சு புது "மேஸ்திரி"... இனி நல்லாவே தேறிடும் இந்திய அணி!

மும்பை: ராகுல் டிராவிட் மாதிரியான புலிகளை இந்திய அணிக்கு உபயோகப்படும்படியான வேலையில் அமர்த்துவார்கள் என்று பார்த்தால், ரவி சாஸ்திரியைப் பிடித்துக் கொண்டு வந்துள்ளார்கள்.

இது எப்படி இருக்கிறது என்றால் ரவி மேஸ்திரியைப் பிடித்து இன்று முதல் நீ ரவி சாஸ்திரி என்று சத்யராஜும், வடிவேலுவும் ஒரு படத்தில் காமெடி செய்வார்களே அது போல இருக்கிறது.

அதாவது, இங்கிலாந்தில் டெஸ்ட் தொடரில் படு அடி வாங்கிய இந்திய அணியைத் தேற்ற அதிரடியான மாற்றங்களைச் செய்துள்ளது இந்திய கிரிக்கெட் வாரியம். ஆனால் ரவி சாஸ்திரி போய் என்ன செய்யப் போகிறார் என்பதுதான் புரியவில்லை.

அதிலும், எப்படி மு.க.அழகிரிக்காக திமுகவில் தனியாக ஒரு பதவியை உருவாக்கிக் கொடுத்து உட்கார வைத்தார்களோ அதேபோல, ரவி சாஸ்திரியை புதிதாக இயக்குநர் என்ற பதவியில் உட்கார வைத்துள்ளனர்.

சினிமா டைரக்ஷனா கிரிக்கெட்...

சினிமா டைரக்ஷனா கிரிக்கெட்...

இதில் இயக்குநர் என்ற ஹோதாவில் என்ன செய்யப் போகிறார் ரவி சாஸ்திரி என்று தெரியவில்லை. அவரது வேலை என்ன என்பதையும் திட்டவட்டமாக தெளிவுபடுத்தவில்லை வாரியம். மாறாக, மொத்த அணியின் நிர்வாகத்தையும் பார்ப்பார் என்று கூறியுள்ளனர்.

பெரிய அளவில் எடுபடுமா

பெரிய அளவில் எடுபடுமா

ரவி சாஸ்திரி கவுண்டி கிரிக்கெட் போட்டிகளில் விளையாடிய அனுபவம் மிக்கவர்தான், இல்லை என்று சொல்லவில்லை. நல்ல பந்து வீச்சாளரும் கூட, பேட்டிங்கும் கூட ஓ.கேதான். ஆனால் தற்போதைய நிலையில் சாஸ்திரிக்குப் பதில் வேறு சில நிபுணர்களை சற்று இள ரத்தமாக பார்த்து அனுப்பியிருக்கலாம்.

டிராவிட் - லட்சுமண் - ஸ்ரீகாந்த் போதுமே

டிராவிட் - லட்சுமண் - ஸ்ரீகாந்த் போதுமே

சாஸ்திரியை அனுப்பியதற்குப் பதில் உண்மையிலேயே நிபுணத்துவம் பெற்ற பழைய கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த், ராகுல் டிராவிட், விவிஎஸ் லட்சுமண் ஆகியோரை அனுப்பியிருக்கலாம்.

தனித் தனி திறமையாளர்கள்

தனித் தனி திறமையாளர்கள்

ஸ்ரீகாந்த் பீல்டிங் வியூகம் வைப்பதில் கில்லாடி. மூக்கை உஸ் உஸ் என்று நெளித்தபடி திரிந்தாலும் கூட ஸ்ரீகாந்த் பெஸ்ட் பீல்டிங் வகுப்பாளர்.. அதில் யாருக்கும் சந்தேகம் இருக்க முடியாது. அதேபோல பேட்டிங் நுனுக்கங்களும் நன்கு அறிந்தவர் ஸ்ரீகாந்த். பந்து வீச்சிலும் ஆலோசனை கூறக் கூடியவர்.

பீல்டிங் - பேட்டிங்குக்கு டிராவிட்

பீல்டிங் - பேட்டிங்குக்கு டிராவிட்

அதேபோல பீல்டிங், பேட்டிங்கில் இங்கிலாந்தில் நல்ல அனுபவம் கொண்டவர் டிராவிட். அவரையும் உபயோகப்படுத்தியிருக்கலாம்.

பீல்டிங் கிங் லட்சுமண்

பீல்டிங் கிங் லட்சுமண்

பீல்டிங்கில் கிங் என்று பெயர் வாங்கியவர் லட்சுமண். பீல்டிங் மட்டுமல்லாமல், வெளிநாடுகளில் எப்படி ஆடுவது என்ற சூட்சுமதத்தை ஓரளவு நன்றாகவே கற்றுக் கொண்டவரும் கூட. இவர் நிறையவே உபயோகப்பட்டிருப்பார். ஸ்லிப் பீல்டிங் குறித்து இவரை விட்டு ஒரு இரண்டு கிளாஸ் எடுக்கவாச்சும் சொல்லியிருக்கலாம்.

பாங்கர் சொல்வதை டோணி கேட்பாரா

பாங்கர் சொல்வதை டோணி கேட்பாரா

அதை விட முக்கியமாக இப்போது புதியவர்களாக அங்கு போயுள்ள சஞ்சய் பாங்கர், பரத் அருண், ஸ்ரீதர் போன்றோரின் ஆலோசனைகளை, டிப்ஸ்களை தற்போதைய இந்திய அணி வீரர்களில் எத்தனை பேர் காது கொடுத்து கவனமாக கேட்பார்கள் என்பதை உறுதியாகச் சொல்ல முடியாது.

எப்படியோ புதிதாக ஒரு மேஸ்திரியை போட்டாச்சு... சாஸ்திரம், சடங்கு நல்லபடியா நடந்து ஜெயிச்சு வந்தால் சரி.. இல்லாட்டி சாஸ்திரியை மாத்திட்டாப் போச்சு...!

Story first published: Wednesday, August 20, 2014, 19:52 [IST]
Other articles published on Aug 20, 2014
English summary
The Board of Control for Cricket in India (BCCI) today appointed former India captain Ravi Shastri as Director of Cricket of Team India for the ODI series in England starting next week. But why not Dravid or VVS Laxman or some one except Ravi?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X