ஆர்ஸ்தீப் புயலில் சிக்கிய இந்தியா.. கௌரவமான இலக்கை எட்ட உதவிய கேசவ் மகாராஜ்.. இந்தியாவுக்கு ஈஸி இல்ல

திருவனந்தப்புரம் : தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய அணிக்கு 107 ரன்களை இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான தொடரில் புவனேஸ்வர் குமார், ஹர்திக் பாண்டியா ஆகியோருக்கு ஓய்வு வழங்கப்பட்டது.

Recommended Video

IND vs SA 1st T20 போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி *Cricket

இந்த நிலையில், பும்ராவும் இல்லாத நிலையில், ஆர்ஸ்தீப் சிங் மற்றும் சிஎஸ்கே வீரர் தீபக் சாஹரும் புது பந்தில் ஓவர்களை இரு முனையிலும் வீசினர்.

தென்னாப்பிரிக்கா 9 ரன்களுக்கு 5 விக்கெட்.. ஒரே ஓவரில் 3 விக்கெட்.. அனல் பறந்த இந்திய பந்துவீச்சுதென்னாப்பிரிக்கா 9 ரன்களுக்கு 5 விக்கெட்.. ஒரே ஓவரில் 3 விக்கெட்.. அனல் பறந்த இந்திய பந்துவீச்சு

அபார பந்துவீச்சு

அபார பந்துவீச்சு

தீபக் சாஹர் வழக்கம் போல் பந்துகளை அவுட் ஸ்விங் செய்து தென்னாப்பிரிக்க வீரர்களுக்கு நெருக்கடி அளித்தார். இந்த நிலையில் கடைசி பந்தில் ஒரு இன் ஸ்விங் வீச, அது பெவுமா ஸ்டம்பை பதம் பார்த்தது.இதனையடுத்து ஆர்ஸ்தீப் சிங் 2வது ஓவரை வீசினார். 2வது பந்தில் குயின்டன் டி காக் பேந்தை அடிக்க முயன்ற போது அது பேட்டில் பட்டு ஸ்டம்பை பதம் பார்த்தது.

5 விக்கெட்

5 விக்கெட்

இதனையடுத்து ஆர்ஸ்தீப் சிங் அனல் பறக்க பந்துகளை வீச அதனை எதிர்கொள்ள முடியாமல் தென்னாப்பிரிக்க வீரர்கள் திணறினர். 2வது ஓவரின் 5வது பந்தில் ரூசோவ் ரிஷப் பண்டிடம் கேட்ச் ஆனார்.இதே போன்று கடைசி பந்தில் அதிரடி டேவிட் மில்லர் கிளின் போல்ட் ஆனார். இதனால் தென்னாப்பிரிக்க அணி 9 ரன்கள் சேர்ப்பதற்குள் அணியின் பாதி பேர் பெவிலியனுக்கு சென்றுவிட்டனர்.

கேசவ் மகாராஜ்

கேசவ் மகாராஜ்

முன்னணி பந்துவீச்சாளர்கள் யாரும் இல்லாத நிலையில், தென்னாப்பிரிக்க அணி அடுத்தடுத்து 5 விக்கெட்டுகளை இழந்தது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை தந்துள்ளது. தற்போது ஹர்சல் பட்டேல் தென்னாப்பிரிக்க அணியின் 6வது விக்கெட்டை கைப்பற்றினார்.இறுதியில் கேசவ் மகாராஜ் அபாரமாக விளையாடி 41 ரன்கள் சேர்த்தார்.

இந்தியாவுக்கும் ஆபத்து

இந்தியாவுக்கும் ஆபத்து

இறுதியில் தென்னாப்பிரிக்க அணி 20 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 106 ரன்களை எடுத்துள்ளது. தீபக் சாஹர் , ஹர்சல் பட்டேல் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். ஆடுகளமும் கொஞ்சம் பேட்டிங்கிற்கு சாதகமாக இல்லை. இதனால் தென்னாப்பிரிக்க பவுலர்களும் இந்தியாவுக்கு நெருக்கடி தரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
SSA set 107 runs as target for india in 1st t20iஆர்ஸ்தீப் புயலில் சிக்கிய இந்தியா.. கௌரவமான இலக்கை எட்ட உதவிய கேசவ் மகாராஜ்.. இந்தியாவுக்கு ஈஸி இல்ல
Story first published: Wednesday, September 28, 2022, 20:57 [IST]
Other articles published on Sep 28, 2022

Latest Videos

  + More
  POLLS
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Yes No
  Settings X