For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

நான்காவது டெஸ்ட்.. இங்கிலாந்தை மீட்டெடுத்த சாம் கர்ரன்.. டாப் 5 நிகழ்வுகள்

சௌதாம்ப்டன் : இந்தியா இங்கிலாந்து அணிகளுக்கிடையேயான நான்காவது டெஸ்ட் போட்டி சௌதாம்ப்டனில் நடைபெற்று வருகிறது. போட்டியின் முதல் நாளில் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 246 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இந்திய அணி விக்கெட் இழப்பின்றி 19 ரன்களை எடுத்துள்ளது.

முதல் நாளில் நடந்த முக்கிய நிகழ்வுகள் இங்கே:

1 மாற்றப்படாத இந்திய அணி

கோஹ்லி தலைமையில் அடுத்தடுத்த இரண்டு போட்டிகளில் ஒரே வீரர்கள் கொண்ட இந்திய அணி பங்குபெறுவது இதுவே முதல் முறையாகும். கோஹ்லி தலைமையில் 38 போட்டிகளில் ஒரு முறை கூட இவ்வாறு நிகழ்ந்தது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

sam curran rescued england in first innings


2 இங்கிலாந்தின் ஓப்பனிங் சொதப்பல்

மற்ற போட்டிகளை போலவே இந்த போட்டியிலும் இங்கிலாந்து அணி மோசமான தொடக்கத்தையே அளித்தது. தொடக்க வீரர் ஜென்னிங்ஸ் ரன் ஏதும் எடுக்காமலும் ,அனுபவ வீரர் குக் 17 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.

3 மொயீன் அலி - சாம் கர்ரன் பார்ட்னெர்ஷிப்

இந்திய வீரர்களின் சிறப்பான பந்துவீச்சினால் இங்கிலாந்து அணி 86 ரன்களுக்கு 6 விக்கெட்களை இழந்து தடுமாறியது. அந்த நிலையில் ஏழாவது விக்கெட்டிற்கு ஜோடி சேர்ந்த மொயீன் அலி மற்றும் சாம் கர்ரன் சிறப்பாக விளையாடி 81 ரன்களை சேர்த்தனர். மொயீன் அலி 40 ரன்களில் ஆட்டமிழந்தார்.

4 சாம் கர்ரனின் அபார ஆட்டம்

இங்கிலாந்து அணியின் இளம் வீரர் சாம் கர்ரன் அபாரமாக விளையாடி 78 ரன்களை குவித்தார். முன்னணி வீரர்கள் அனைவரும் ஆட்டமிழந்த பின்னரும் அவர் பொறுப்பாக விளையாடி அணியின் எண்ணிக்கையை உயர்த்தினார். மேலும் அவர் இந்த தொடரில் அதிக ரன்களை குவித்துள்ள இங்கிலாந்து வீரர் என்பது குறிப்பிடத்தக்கது.

5 இஷாந்த் சர்மாவின் 250 விக்கெட்கள்

இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட்டின் விக்கெட்டை வீழ்த்திய போது டெஸ்ட் போட்டிகளில் 250 விக்கெட்கள் வீழ்த்திய இந்திய வீரர் என்ற பெருமையை பெற்றார். இந்த போட்டியில் அவர் 2 விக்கெட்களை வீழ்த்தியது குறிப்பிடத்தக்கது




Story first published: Friday, August 31, 2018, 11:12 [IST]
Other articles published on Aug 31, 2018
English summary
England lost all wickets for 246 runs and india is in commanding position in fourth test
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X