For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

இடுப்பை நோக்கி வந்த பந்து.. அப்படி நடக்கலனா இந்தியா தோற்று இருக்கும்.. வசீம் ஜாபர் கருத்து

மும்பை : ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் ரோகித் சர்மா ஆடிய விதத்தை முன்னாள் கிரிக்கெட் வீரர் வசீம் ஜாபர் பாராட்டியுள்ளார்.

எட்டு ஓவரில் 91 ரன்கள் அடிக்க வேண்டும் என்ற இலக்கை எதிர்கொண்ட இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா 20 பந்துகளில் 46 ரன்கள் விளாசினார். இதில் நான்கு சிக்ஸர்களும், நான்கு பவுண்டரிகளும் அடங்கும் .

இந்திய அணிக்கு அஸ்வின் ஏன் முக்கியம்.. 3 காரணங்கள் முன்வைக்கும் நிபுணர்கள்.. ரோகித் ஓகே சொல்வாரா?இந்திய அணிக்கு அஸ்வின் ஏன் முக்கியம்.. 3 காரணங்கள் முன்வைக்கும் நிபுணர்கள்.. ரோகித் ஓகே சொல்வாரா?

 இந்திய அணிக்கு தேவை

இந்திய அணிக்கு தேவை

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள வசீம் ஜாபர் , ரோகித் சர்மா இப்படி அதிரடியாக விளையாடுவது தான் இந்திய அணிக்கு தேவை. சிக்ஸர்களை அடிப்பது சுலபம் என்பது போல் ரோகித் சர்மா ஷாட்களை ஆடுகிறார். வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் போல் ரோகித் சர்மா பெரிய தோற்றத்தில் இல்லை என்றாலும் அவர் பேட்டால் பந்தை அடிக்கும் விதம் பந்தை நெடுந்தூரத்திற்கு கொண்டு செல்லும்.

தோற்று இருப்போம்

தோற்று இருப்போம்

ரோகித் சர்மாவுக்கு நீங்கள் ஷாட் பாலை அவர் உடம்பை நோக்கி வீசினீர்கள் என்றால் அவர் அதனை சிக்ஸருக்கு விரட்டி விடுவார். ரோகித் சர்மா நேற்றைய ஆட்டத்தில் 20 ,30 ரன்கள் அடித்திருந்து அவுட்டாகி இருந்தால் இந்தியா தோற்று இருக்கும். அவர் கடைசி வரை நின்றதால் தான் இந்தியா வெற்றி பெற்றது. ரோகித் சர்மா ஆடிய விதம் மட்டும்தான் இந்தியாவுக்கு வெற்றியை தேடித்தந்தது.

சுலபமாக ஆடினார்

சுலபமாக ஆடினார்

இந்திய அணியில் ரோஹித் மட்டும் தான் சுலபமாக ஆடினார். ஆஸ்திரேலிய வீரர்கள் பந்தின் வேகத்தை குறைவாக வீசுவது, வைட் யாக்கர் பந்துகளை வீசுவது என பல திட்டத்துடன் நேற்று களமிறங்கினர். ஆனால் அந்த பந்துகளை ரோகித் சர்மா தவிர வேறு யாராலும் எதிர்கொள்ள முடியவில்லை. இதேபோன்று ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் பிராட் ஹாக்கும் ரோகித் சர்மாவை பாராட்டினார்.

95 மீட்டர் சிக்சர்

95 மீட்டர் சிக்சர்

ரோகித் சர்மாவை ஐபிஎல் போட்டிகள் விளையாடி நான் பார்த்திருக்கிறேன்.அப்போது பந்தின் லென்த்தை கணித்து அவர் அடிக்கும் விதம் பிரமிப்பாக இருக்கும். அவருடைய இடுப்பை நோக்கி பந்து வந்தால் அதை புல் ஷாட் மூலம் 90 , 95 மீட்டர் அளவுக்கு சிக்சர் அடிப்பார் என்று அவர் கூறினார். மூன்று போட்டிகள் கொண்ட இந்த தொடரில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றி பெற்று கடைசி போட்டி நாளை நடைபெறுகிறது.

Story first published: Saturday, September 24, 2022, 21:36 [IST]
Other articles published on Sep 24, 2022
English summary
Wasim jaffer asks Rohit sharma to play aggressively in icc t20 matches இடுப்பை நோக்கி வந்த பந்து.. அப்படி நடக்கலனா இந்தியா தோற்று இருக்கும்.. வசீம் ஜாபர் கருத்து
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X