For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ஆஸ்திரேலியாவுல இந்தியா விளையாட வரலைன்னா நிலைமை மோசமாயிடும்

சிட்னி : இந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் ஆஸ்திரேலியாவில் இந்திய அணி சுற்றுப்பயணம் மேற்கொண்டு டி20 போட்டிகளையும் தொடர்ந்து 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரையும் விளையாட திட்டமிடப்பட்டுள்ளது.

Recommended Video

ECB hold 'positive talks' on rescheduling Test series

கொரோனா காரணமாக இந்த தொடர் கேள்விக்குறியாகியுள்ளது. இந்நிலையில் இந்த நிலையில் இந்த தொடரில் இந்தியா பங்கேற்க ஆஸ்திரேலியா வரவில்லையில்லையென்றால் தன்னுடைய நிலைமை மிகவும் மோசமாக மாறிவிடும் என்று லாபுசாக்னே கூறியுள்ளார்.

கடந்த ஆண்டில் ஆஸ்திரேலிய அணியில் இடம்பெற்று மிகவும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தை சர்வதேச அளவில் கவனத்தை பெற்றுள்ளார் மார்னஸ் லாபுசாக்னே.

கேப்டன் சொன்ன அந்த வார்த்தைக்காக என் உயிரையே கொடுப்பேன்.. உணர்ச்சிவசப்பட்டு பொங்கிய கௌதம் கம்பீர்!கேப்டன் சொன்ன அந்த வார்த்தைக்காக என் உயிரையே கொடுப்பேன்.. உணர்ச்சிவசப்பட்டு பொங்கிய கௌதம் கம்பீர்!

கடந்த ஆண்டில் சிறப்பான ஆட்டம்

கடந்த ஆண்டில் சிறப்பான ஆட்டம்

கடந்த ஆண்டில் ஆஸ்திரேலிய அணியில் இடம்பெற்று தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார் இளம்புயல் மார்னஸ் லாபுசாக்னே. பல்வேறு அணிகளுக்கு எதிராக இவர் மோதி சிறப்பான தருணங்களை ரசிகர்களுக்கு அளித்தார். இவருக்கு கடந்த ஆண்டு மிகவும் முக்கியமான ஆண்டாக அமைந்தது.

இந்தியா -ஆஸ்திரேலியா தொடர்

இந்தியா -ஆஸ்திரேலியா தொடர்

இந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் இந்தியா அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு டி20 தொடரிலும் தொடர்ந்து 4 போட்டிள் கொண்ட டெஸ்ட் தொடரிலும் மோதவுள்ளது. சர்வதேச அளவில் பல்வேறு போட்டிகள் கொரோனா காரணமாக ரத்து செய்யப்பட்டு வரும் நிலையில், இந்த தொடரும் கேள்விக்குறியாகியுள்ளது.

மார்னஸ் லாபுசாக்னே உறுதி

மார்னஸ் லாபுசாக்னே உறுதி

இந்நிலையில் இந்த ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தை இந்தியா மேற்கொள்ளவில்லை என்றால் தன்னுடைய மற்றும் ஆஸ்திரேலிய அணியின் நிலைமை மிகவும் மோசமாக மாறிவிடும் என்று லாபுசாக்னே தெரிவித்துள்ளார். கொரோனா காரணமாக கடுமையான பயண கட்டுப்பாடுகளை ஆஸ்திரேலியா விதித்துள்ள நிலையில், இந்தியா சுற்றுப்பயணம் கண்டிப்பாக நிகழும் என்று தான் நம்புவதாகவும் அவர் கூறியுள்ளார்.

பௌலிங் செய்ய தீவிரம்

பௌலிங் செய்ய தீவிரம்

கடந்த ஆண்டு தனக்கு சிறப்பானதாக அமைந்ததாக மகிழ்ச்சி தெரிவித்துள்ள லாபுசாக்னே, வரும் காலங்களில் தன்னை மேலும் மெருகேற்றிக் கொள்ள தான் விரும்புவதாக குறிப்பிட்டுள்ளார். கொரோனா ஊரடங்கு முடிந்தவுடன், அதற்கான பணிகளில் தான் ஈடுபட்டு தன்னை மேலும் சிறப்பான வீரராக மாற்றிக் கொள்ள பயிற்சி மேற்கொள்வேன் என்றும் பௌலிங்கிலும் பயிற்சி மேற்கொள்வேன் என்றும் அவர் கூறியுள்ளார்.

Story first published: Monday, May 4, 2020, 19:44 [IST]
Other articles published on May 4, 2020
English summary
Labuschagne remains optimistic of India's tour of Australia happening
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X