உனக்கான நேரம் வரும்... அதுவரைக்கும் கடுமையா உழைச்சுக்கிட்டே இரு... ரஹானே அட்வைஸ் யாருக்கு?

டெல்லி : இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையிலான 4 போட்டிகளை கொண்ட டெஸ்ட் தொடரை இந்திய அணி வெற்றி கொண்டு சாதனை புரிந்துள்ளது.

இந்த தொடரில் விளையாட குல்தீப் யாதவிற்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை.

மைதானத்துல தான் ஆக்ரோஷமா இருப்பாரு... வெளியில அப்படி ஒரு பணிவு... ஜோஷ் பிலிப் பாராட்டு

இந்நிலையில், குல்தீப்பிற்கான வாய்ப்பு வரும்வரை அவர் கடுமையாக பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்று அஜிங்க்யா ரஹானே தெரிவித்துள்ளார்.

இந்தியா தொடர் வெற்றி

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையிலான 4 போட்டிகளை கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி 2க்கு 1 என்ற கணக்கில் வெற்றி கொண்டு இமாலய வெற்றியுடன் நாடு திரும்பியுள்ளது. இந்நிலையில் காப்பாவில் நடைபெற்ற போட்டியின் வெற்றிக்கு பிறகு கேப்டன் அஜிங்க்யா ரஹானே வீரர்களிடம் மேற்கொண்ட உரையாடலை தற்போது பிசிசிஐ தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

ரஹானே பாராட்டு

ரஹானே பாராட்டு

அந்த உரையாடலில் டெஸ்ட் தொடரில் வீரர்களின் செயல்பாட்டிற்கு அவர் பாராட்டு தெரிவித்துள்ளார். முதல் போட்டியின் இரண்டாவது இன்னிங்சில் 36 ரன்களுக்கு ஆட்டமிழந்த நிலையில் அடுத்தடுத்த மெல்போர்ன், சிட்னி மற்றும் பிரிஸ்பேன் போட்டிகளில் இந்திய வீரர்களின் செயல்பாடு சிறப்பானது என்று அவர் கூறியுள்ளார்.

குல்தீப், கார்த்தி சிறப்பு

குல்தீப், கார்த்தி சிறப்பு

ஒவ்வொரு வீரரும் தனது சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்தியதாகவும் குறிப்பாக இந்த தொடரில் விளையாடவில்லை என்றாலும் குல்தீப் யாதவ் மற்றும் கார்த்திக் தியாகி ஆகியோரின் செயல்பாடு மிகுந்த சிறப்பானது என்றும் அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.

வாய்ப்பு கிடைக்கும்

வாய்ப்பு கிடைக்கும்

இந்த தொடரில் விளையாட வாய்ப்பு கிடைக்காத குல்தீப் யாதவ்வின் நெட் பயிற்சிகள் சிறப்பானவை என்றும், வாய்ப்பு கிடக்காதது அவருக்கு எத்தகைய மனஉளைச்சலை தந்திருக்கும் என்பதை தான் அறிந்துள்ளதாகவும் ரஹானே குறிப்பிட்டுள்ளார். ஆனால் அவருக்கான நேரம் வரும் என்றும் அதுவரை அவர் கடுமையாக உழைக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளார்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
 
English summary
Kuldeep, I know it was tough for you, you did not play a game here but your attitude was really good -Rahane
Story first published: Sunday, January 24, 2021, 12:58 [IST]
Other articles published on Jan 24, 2021
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X