10 பேருடன் ஆடிய மும்பை.. கோல்கீப்பரை ஏமாற்றிய நார்த் ஈஸ்ட் அப்பையா.. செம மேட்ச்!

கோவா : இந்தியன் சூப்பர் லீக் தொடரின் ஏழாவது சீசனின் இரண்டாவது லீக் போட்டியில் நார்த் ஈஸ்ட் யுனைடெட் எஃப்சி அணியின் அப்பையா அசத்தல் கோல் அடிக்க அந்த அணி வெற்றி பெற்றது.

மும்பை சிட்டி அணியின் அஹ்மத் ஜகோவா தவறு செய்ததால் ரெட் கார்டு கொடுத்து முதல் பாதியில் வெளியேற்றப்பட்டார்.

அவரது வெளியேற்றத்தால் மும்பை அணி 10 வீரர்களுடன் மீதமுள்ள போட்டியை ஆடியது. நார்த் ஈஸ்ட் அபாரமாக ஒரு கோல் அடித்து வெற்றி பெற்றது.

எதிர்பார்ப்பு

எதிர்பார்ப்பு

நார்த் ஈஸ்ட் யுனைட்டெட் அணி இதுவரை ஐஎஸ்எல் வரலாற்றில் தன் முதல் போட்டியில் வெற்றி பெற்றது இல்லை. அந்த நிலையில், மும்பை சிட்டி அணியை சந்தித்தது அந்த அணி. மும்பை அணி சிறந்த பயிற்சியாளர் செர்ஜியோ லொபேராவின் கீழ் என்ன செய்யப் போகிறது என்ற எதிர்பார்ப்புடன் களமிறங்கியது. ஆதிக்கம்

மும்பை ஆதிக்கம்

மும்பை ஆதிக்கம்

முதல் பாதியில் மும்பை சிட்டி அணி ஆதிக்கம் செலுத்தியது. ஆனால், கோல் அடிக்கும் வாய்ப்பு அந்த அணிக்கு கிடைக்கவில்லை. பந்து 70 சதவீதம் அந்த அணியிடமே இருந்தது. 43வது நிமிடத்தில் நார்த் ஈஸ்ட் அணி பக்கம் போட்டி சாய்ந்தது.

ரெட் கார்டு

ரெட் கார்டு

அந்த நிமிடத்தில் தான் அஹ்மத் ஜகோவாவுக்கு ரெட் கார்டு அளிக்கப்பட்டது. அவர் காஸா கமாராவை முட்டிக்கு மேலே தன் காலால் தடுக்க முயன்றார். அதற்காக அவருக்கு ரெட் கார்டு அளிக்கப்பட்டு வெளியேற்றப்பட்டார். நார்த் ஈஸ்ட் அதன் மூலம் இரண்டாம் பாதியில் 10 வீரர்களுடன் ஆடிய மும்பை அணி மீது ஆதிக்கம் செலுத்தியது.

அப்பையா அசத்தல்

அப்பையா அசத்தல்

மும்பை அணியின் விக்கெட் கீப்பர் அமரிந்தர் சிங்கை ஏமாற்றி, கானா வீரர் அப்பையா அசத்தல் கோல் அடித்தார். அதன் மூலம் நார்த் ஈஸ்ட் அணி 1 - 0 என முன்னிலை பெற்றது. அதன் பின் இரு அணிகளுக்கும் கோல் அடிக்கும் வாய்ப்பு கிடைகக்வில்லை.

வெற்றி

வெற்றி

நார்த் ஈஸ்ட் அணி தன் முதல் போட்டியில் 1 - 0 என்ற கோல் கணக்கில் மும்பை சிட்டி அணியை வீழ்த்தியது. இந்தப் போட்டியில் மும்பை அணியின் ரெய்னியர் பெர்னாண்டஸ் இடுப்பில் காயம் ஏற்பட்டு விலகினார், அவர் அடுத்த போட்டியில் ஆடுவாரா? என்ற சந்தேகத்துடன் உள்ளது அந்த அணி.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts

மைகேலில் பேன்டசி கால்பந்து விளையாடுங்க.. தினசரி பரிசு வெல்லுங்க.. உங்க நண்பர்களையும் சவாலுக்கு கூப்பிடுங்க!

English summary
ISL 2020-21 : North East United FC vs Mumbai City FC 2nd match result
Story first published: Sunday, November 22, 2020, 10:54 [IST]
Other articles published on Nov 22, 2020
  • Nov 26 2020, Thu - 01:30 AM (IST)
  • Nov 26 2020, Thu - 01:30 AM (IST)
  • Nov 26 2020, Thu - 01:30 AM (IST)
+ மேலும்
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X