காலிறுதியில் 5-அரை இறுதியில் 1… என்னக் கொடுமை சார் இது!

By: SRIVIDHYA GOVINDARAJAN

டெல்லி: இந்திய ஓபன் பாட்மின்டன் போட்டியில் நடப்பாண்டில் ஒற்றையர் பிரிவில் முன்னணி வீரர், வீரர்கள் ஏமாற்றம் அளித்த நிலையில் இரட்டையர் பிரிவில் சற்று நம்பிக்கை இருந்தது. வருமான வரி விலக்கு கிடைக்கும் என்று எதிர்பார்த்த சம்பளதாரர்களுக்கு கிடைத்த அதே பீலிங்க் கால் இறுதியில் இரட்டையர் பிரிவிலும் கிடைத்துள்ளது.

இந்திய ஓபன் பாட்மின்டன் போட்டியின் அரை இறுதிக்கு நுழைந்துள்ள ஒரே இந்திய வீராங்கனையாக நடப்பு சாம்பியன் பிவி சிந்து உள்ளார். ஆடவர் பிரிவில் ஒருவர் கூட அரை இறுதிக்கு தேறவில்லை

Doubles teams failed

இந்த நிலையில் இரட்டையர் பிரிவின் கால் இறுதியில் 5 இந்திய ஜோடிகள் போட்டியிட்டன. ஆஹா, இதிலாவது சில பட்டம் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அதில் ஒரு ஜோடி மட்டுமே அரை இறுதிக்கு முன்னேறியுள்ளது.

கலப்பு இரட்டையர் பிரிவில் சிக்கி ரெட்டி, பிரனவ் ஜெர்ரி சோப்ரா ஜோடி மட்டுமே அரை இறுதிக்கு முன்னேறியது.

கலப்பு இரட்டையர் பிரிவில் அஸ்வினி பொன்னப்பா – சாத்விக் ஜோடி, மகளிர் இரட்டையரில் அஸ்வினி பொன்னப்பா – சிக்கி ரெட்டி ஜோடி, ஜக்கம்புடி மேகனா – பூர்விஷா ராம் ஜோடி, ஆடவர் இரட்டையரில் மனு ஆத்ரி – பி. சுமித் ரெட்டி ஜோடி கால் இறுதியில் தோல்வியடைந்தன.


Story first published: Sunday, February 4, 2018, 18:40 [IST]
Other articles published on Feb 4, 2018
POLLS

myKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற