For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சரிதா தேவிக்கு நிரந்தரத் தடை வரும்.. சர்வதேச குத்துச் சண்டை சங்கம் சூசகம்!

ஜெஜு, தென் கொரியா: ஆசிய விளையாட்டுப் போட்டியின் போது, பதக்கத்தை வாங்க மறுத்து கண்ணீர் விட்டு அழுது பரபரப்பை ஏற்படுத்திய இந்திய குத்துச் சண்டை வீராங்கனை சரிதா தேவிக்கு நிரந்தரத் தடை வரும் என்று தெரிகிறது. இதனால் அவரது எதிர்காலம் முடிந்து போகும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.

அவருக்கு மிகவும் கடுமையான தண்டனை விதிப்பது குறித்துப் பரிசீலிப்பதாக சர்வதேச குத்துச் சண்டை சங்கம் தெரிவித்துள்ளது.

தென் கொரியாவின் இன்சியான் நகரில் ஆசிய விளையாட்டுப் போட்டி கடந்த செப்டம்பர் மாதம் நடந்தது.

அரை இறுதியில் தோற்ற சரிதாதேவி

அரை இறுதியில் தோற்ற சரிதாதேவி

இதில் மகளிர் லைட்வெயிட் பிரிவில் சரிதா தேவி அரை இறுதிப் போட்டியில் தோல்வியுற்றார். ஆனால் நடுவரின் தவறால்தான் தான் தோற்றதாக கூறியிருந்தார் சரிதா தேவி.

பதக்கத்தை வாங்க மறுத்தார்

பதக்கத்தை வாங்க மறுத்தார்

இதையடுத்து பதக்கம் அளிக்கும் நிகழ்ச்சியின்போது தனக்கு வழங்கப்பட்ட வெண்கலப் பதக்கத்தை வாங்க மறுத்த அவர் வாய் விட்டு அழுதார். மேலும் பதக்கத்தை தன்னுடன் மோதியவருக்கு அணிவிக்கவும் முயன்றார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

தடை

தடை

இதையடுத்து சரிதா தேவிக்கும், அவரது 3 பயிற்சியாளர்களுக்கும் தற்போது தென் கொரியாவில் நடந்து வரும் உலக மகளில் சாம்பியன்ஷிப் போட்டியில் கலந்து கொள்ளத் தடை விதிக்கப்பட்டது.

நிரந்தரத் தடை வரலாம்

நிரந்தரத் தடை வரலாம்

சரிதா தேவி மீதான விவகாரத்தை தற்போது சர்வதேச குத்துச் சண்டை சங்கம் விசாரித்து வருகிறது. விரைவில் தீர்ப்பை அளிக்கவுள்ளது. அதில் சரிதாவுக்கு நிரந்தரத் தடை விதிக்கப்படலாம் என்று தெரிகிறது.

வூ சூசகம்

வூ சூசகம்

இதுகுறித்து சர்வதேச குத்துச் சண்டை சங்கத்தின் தலைவர் சிகே வூ கூறுகையில், விரைவில் தீர்ப்பு அறிவிக்கப்படும். அது கடுமையானதாக இருக்கும். இதில் சகிப்புத் தன்மைக்கே இடமில்லை. யாராலும் ஏற்றுக் கொள்ள முடியாத செயலை சரிதா தேவி செய்துள்ளார். அவரது குத்துச் சண்டை வாழ்க்கை முடிந்து விட்டதாகவே நான் நினைக்கிறேன்.

நடுவர்களை மதிக்க வேண்டும்

நடுவர்களை மதிக்க வேண்டும்

ஒவ்வொரு வீரரும், வீராங்கனையும், நடுவர்களை மதிக்க வேண்டும். எனவே சரிதாதேவி தனது தவறுக்கான தண்டனையை அனுபவித்தே ஆக வேண்டும். தனது பெயரையும், தனது நாட்டின் பெயரையும் அவர் கெடுத்து விட்டார்.

பிறகு போட்டி எதற்கு

பிறகு போட்டி எதற்கு

வெல்லும்போது ஏற்கும் மனம் இருக்கும்போது, தோல்வியையும் தாங்கும் மனம் வேண்டும். இப்படி எல்லோரும் நடக்க ஆரம்பித்தால் பிறகு போட்டிகளை எதற்காக நடத்த வேண்டும். அதில் அர்த்தமே இருக்காதே என்றார்.

Story first published: Wednesday, November 12, 2014, 16:22 [IST]
Other articles published on Nov 12, 2014
English summary
Sarita Devi faces a long ban from the international boxing association for refusing to accept her Asian Games bronze medal after a controversial bout vs South Korea's J Park.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X