For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

இஷ்டமில்லாம விளையாடி 2 டக் அவுட்..! சத்தியமா மறக்க முடியாது..! 8 வருஷம் கழிச்சி இப்போ சொன்ன அவர்

மும்பை: 8 ஆண்டுகளுக்கு முன், இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்டில் நடைபெற்ற ஒரு சம்பவத்தை இப்போது குறிப்பிட்டுள்ளார் முன்னாள் வீரர் சேவாக்.

அது 2011ம் ஆண்டு. இந்தியா இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு இருந்தது. டெஸ்ட் தொடரிலும் பங்கேற்றது. அதில் இந்திய அணி 4க்கு 0 என்ற கணக்கில் இங்கிலாந்திடம் படுதோல்வியை சந்தித்தது.

அந்த தொடரின் முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியா எடுத்தது வெறும் 224 ரன்கள் தான். ஆனால் இங்கிலாந்தோ அடி தூள் காட்டியது. மொத்தம் 7 விக்கெட்டுகளை இழந்து 710 ரன்களை எடுத்து அதிரடி கொடுத்தது. யாரும் எதிர்பார்க்காத ஆட்டம் இது.

டக் அவுட்

டக் அவுட்

அதன்பிறகு 2வது டெஸ்டிலும் இந்தியா அந்தோ பரிதாபம். வெறும் 244 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதனால் இங்கிலாந்து எளிதாக தொடரை வென்றது. போட்டியின் முதல் இரண்டு போட்டிகளில் ஆடாத சேவாக் அடுத்த இரு போட்டிகளில் விளையாடி டக் அவுட்டில் வெளியேறினார்.

2வது இன்னிங்சில் டக்

2வது இன்னிங்சில் டக்

அதில் சேவாக் ஆடிய முதல் இன்னிங்சில் ஸ்டூவர்ட் பிராடும், 2வது இன்னிங்ஸில் ஆண்டர்சனும் அவரை காலி செய்தனர். இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து சேவாக் தனது ட்விட்டர் பக்கத்தில் தன்னைத் தானே கிண்டல் அடிக்கும் விதமாக பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

8 வருஷங்கள்

அதில், 8 ஆண்டுகளுக்கு முன்பு இதே நாள் இங்கிலாந்துக்கு எதிராக பர்மிங் ஹாமில் நடந்த இரு டெஸ்ட் போட்டியிலும் நான் பூஜ்ஜியம். இங்கிலாந்துக்கு 2 நாள்கள் பயணம் செய்து 188 ஓவர்கள் பீல்டிங் செய்தோம்.

ஆர்யபட்டாவுக்கு சமர்ப்பணம்

ஆர்யபட்டாவுக்கு சமர்ப்பணம்

விருப்பம் இல்லாமல் இதனை ஆர்யபட்டாவுக்கு (பூஜ்ஜியம்) அர்ப்பணம் செய்ய வேண்டியதாயிற்று என்று சேவாக் பதிவிட்டுள்ளார். கிட்டத்தட்ட 8 ஆண்டுகளுக்கு பிறகு இப்போது அதை ஞாபகப்படுத்தி உள்ளார். இந்திய அணி இன்னும் வெஸ்ட் இண்டீசுடனான டெஸ்ட் போட்டியை விளையாட ஆரம்பிக்கவில்லை. அதற்குள் எதற்கு இப்படி ஒரு டுவீட் போட்டார் என்று ரசிகர்கள் மண்டை காய்ந்து வருகின்றனர்.

Story first published: Tuesday, August 13, 2019, 8:36 [IST]
Other articles published on Aug 13, 2019
English summary
After 8 years, virender shewag tweets England test series incidents.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X