For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

இதுவரைக்கும் 3 பேர் மட்டுமே செய்த உலக சாதனையை படைத்து அக்சர் பட்டேல் அசத்தல்..!!

கான்பூர் :இந்தியா, நியூசிலாந்துக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி கான்பூரில் தொடங்கியது. இதில் இந்திய அணி முதல் இன்னிங்சில் 345 ரன்கள் குவித்தது.

அறிமுக போட்டியில் ஸ்ரேயாஸ் ஐயர் சதம் விளாசினார். இதனையடுத்து களமிறங்கிய நியூசிலாந்து அணியும் பதிலடி தந்தது.

நியூசிலாந்து அணியின் தொடக்க வீரர்கள் முதல் விக்கெட்டுக்கு 151 ரன்கள் சேர்த்தனர். நியூசிலாந்து விக்கெட்டை வீழ்த்த முடியாமல் இந்திய வீரர்கள் திணறினர்.

புதிய முறையில் பந்துவீச்சு.. அஸ்வின் - அம்பயர் இடையே திடீர் வாக்குவாதம்.. பதறிப்போன கேப்டன் - வீடியோபுதிய முறையில் பந்துவீச்சு.. அஸ்வின் - அம்பயர் இடையே திடீர் வாக்குவாதம்.. பதறிப்போன கேப்டன் - வீடியோ

மாயாஜால பந்துவீச்சு

மாயாஜால பந்துவீச்சு

முதல் விக்கெட்டை அஸ்வின் வீழ்த்த, பின்னர் மாயாஜால பந்துவீச்சை அக்சர் பட்டேல் வெளிப்படுத்தினார். அக்சர் பட்டேல் பந்தின் வேகத்தை சற்று அதிகப்படுத்த, அதனை எதிர் கொள்ள முடியாமல் நியூசிலாந்து அணி வீரர்கள் திணறினர். நியூசிலாந்து அணியின் ராஸ் டைலர், ஹேன்ரி நிக்கோலஸ், டாம் பிளன்டல், என அனைவரின் விக்கெட்டையும் அக்சர் பட்டேல் சிறிய இடைவெளியில் வீழ்த்தினார்.

சாதனை

சாதனை

இந்திய அணிக்கு நெருக்கடி அளித்த டாம் லாத்தம் 95 ரன்கள் எடுத்திருந்த போது அவரது விக்கெட்டையும் அக்சர் பட்டேல் கழிற்றினார். டிம் சவுதியையும் போல்ட் ஆக்கியதன் மூலம் அக்சர் பட்டேல் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதன் மூலம் குறைந்த டெஸ்ட்டில் 5 முறை 5 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் இந்திய வீரர் என்ற பெருமையையும், உலகின் 4வது வீரர் என்ற சாதனையையும் அக்சர் பட்டேல் படைத்தார்.

இதவரை…

இதவரை…

27 வயதான அக்சர் பட்டேல், நடப்பாண்டில் இங்கிலாந்துக்கு எதிராக சென்னையில் நடைபெற்ற டெஸ்ட்டில் தான் அறிமுகமானார். தற்போது தான் 4வது டெஸ்ட்டில் விளையாடுகிறார். அதற்குள் 5 முறை ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்திவிட்டார் அக்சர். அக்சர் பட்டேல் விளையாடிய 7 இன்னிசிலும் எடுத்த விக்கெட்டுகள் மற்றும் விட்டுக்கொடுத்த ரன்களை தற்போது காணலாம்

2/40. 5/60.

6/38. 5/32.

4/68. 5/48.

5/59,

பலம்

பலம்

6 இன்னிங்சில் 5 விக்கெட்டுகளை ஐந்து முறை வீழ்த்தி ஆஸ்திரேலிய வீரர் ரூட்னி ஹாக் தற்போது முதலிடத்தில் உள்ளார். அக்சர் பட்டேலின் இந்த அசத்தல் செயல்பாடு இந்தியாவுக்கு பெரும் பலத்தை தந்துள்ளது. ஏற்கனவே அஸ்வின், ஜடேஜா போன்ற உலகத்தர சுழற்பந்துவீச்சாளர்கள் உள்ள நிலையில் அக்சர் பட்டேல், மேலும் இந்திய அணியை பலமாக மாற்றியுள்ளார்.

Story first published: Saturday, November 27, 2021, 17:00 [IST]
Other articles published on Nov 27, 2021
English summary
Axar patel takes record 5 wicket haul Vs Newzealand. First Indian to take 5 wickets 5 times in a 6 innings
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X