For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

தென் பாண்டி சீமையிலே.. பாபர் அசாமுக்கா இந்த நிலைமை? ரிஸ்வானுக்கும் வலுக்கும் எதிர்ப்பு..என்ன நடந்தது

சிட்னி : டி20 உலககோப்பையில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான வாழ்வா சாவா ஆட்டத்தில், பாபர் அசாம், முகமது ரிஸ்வான் ஜோடி சொதப்பியது. இதனால் தூக்கி கொண்டாடிய ரசிகர்களே தற்போது தூக்கி போட்டு மிதிக்கின்றனர்.

இன்றைய ஆட்டத்தில் பாகிஸ்தான் வென்றால் தான், அரையிறுதிக்கு செல்லும் வாய்ப்பை அந்த அணி தக்க வைக்க முடியும்.

அதே சமயம், பாகிஸ்தான் தோற்றால், இந்தியா, தென்னாப்பிரிக்க அணிகள் அரையிறுதிக்கு சென்றுவிடலாம். ஜிம்பாப்வே போட்டியில் இந்தியா அதிக ரன் வித்தியாசத்தில் தோற்காத பட்சத்தில் கவலைப்பட தேவையில்லை.

டி20 உலககோப்பையில் கலக்குவது எப்படி? விராட் கோலி சொன்ன ரகசியம்.. கடந்த காலத்துக்கு டி20 உலககோப்பையில் கலக்குவது எப்படி? விராட் கோலி சொன்ன ரகசியம்.. கடந்த காலத்துக்கு

நெருக்கடி

நெருக்கடி

இதனிடையே, பாகிஸ்தான் இன்றைய ஆட்டத்தில் வென்றால், இந்திய அணி தனது கடைசி போட்டியில் வென்றே தீர வேண்டிய நிலை ஏற்படும். இந்த நிலையில், முதலில் பேட்டிங் செய்ய வந்த பாகிஸ்தான் அணியின் நட்சத்திர தொடக்க ஜோடியான ரிஸ்வான், பாபர் அசாம் ஆகியோர் பெரிய பார்ட்னர்ஷிப் அமைக்க வேண்டிய நெருக்கடியில் இருந்தனர்.

ரிஸ்வான் கதி

ரிஸ்வான் கதி

ஆனால், முகமது ரிஸ்வான் ஒரு பவுண்டரி அடித்த பிறகு, அதே ஓவரில் போல்ட் ஆகி பெவிலியன் திரும்பினார். இதன் மூலம் ரிஸ்வான் நெதர்லாந்துக்கு எதிராக 49 ரன்கள் அடித்ததை தவிர இந்தியாவுக்கு எதிராக 4 ரன்களும், ஜிம்பாப்வேக்கு எதிராக 14 ரன்கள் மட்டுமே அடித்தார். இதனால் பாகிஸ்தானுக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுகிறது.

பாபர் அசாம் ஏமாற்றம்

பாபர் அசாம் ஏமாற்றம்

சரி, ரிஸ்வான் கதையாவது பரவாயில்லை. பாபர் அசாமின் நிலைமை மிகவும் மோசம். டி20 கிரிக்கெட்டின் பிராட்மேன் என்று அழைக்கப்படும் பாபர் அசாம், தொடர்ந்து ஒரே மாதிரி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த தவறி வருகிறார். இந்த டி20 உலககோப்பையில் பாபர் அசாம் தான் ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றத்தை கொடுத்திருக்கிறார்.

ரசிகர்கள் அதிர்ச்சி

ரசிகர்கள் அதிர்ச்சி

இந்தியாவுக்கு எதிராக கோல்டன் டக், ஜிம்பாப்வேக்கு எதிராக 9 பந்தில் 4 ரன்கள், நெதர்லாந்துக்கு எதிராக 5 பந்தில் 4 ரன்கள், இன்று தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக 15 பந்தில் 6 ரன்கள் என மட்டுமே சேர்த்து தடுமாறி வருகிறார். பாபர் அசாமின் இந்த ஆட்டம் அந்நாட்டு ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. எனினும் ஷதாப் கான் 22 பந்தில் 52 ரன்களும், இஃப்திகார் அரைசதமும் அடித்தன் காரணமாக பாகிஸ்தான் 9 விக்கெட் இழப்பிற்கு 185 ரன்கள் எடுத்துள்ளது

Story first published: Thursday, November 3, 2022, 17:32 [IST]
Other articles published on Nov 3, 2022
English summary
Babar Azam and Rizwan disappointed Performance versus south Africa
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X