
நரேந்திர மோடி மைதானம்
அதாவது பிரதமர் பெயரில் மாற்றி அமைக்கப்பட்டு இயங்கும் இந்த மைதானத்தின் மூலம் இந்த பெருமை கிடைத்திருக்கிறது. உலகத்திலே மிக பெரிய கிரிக்கெட் மைதானம் என்ற சாதனையை ஆஸ்திரேலியாவில் உள்ள மெல்போர்ன் கிரிக்கெட் மைதானம் படைத்திருந்தது. அந்த மைதானத்தில் ஒரு லட்சம் ரசிகர்கள் வரை அமரலாம்.

கின்னஸ் சாதனை
அதனை முறியடிக்கும் விதமாக குஜராத்தில் உள்ள அகமதாபாத் நகரில் நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானம் அமைக்கப்பட்டது. இந்த மிகப்பெரிய மைதானத்தில் சுமார் ஒரு லட்சத்து 10 ஆயிரம் பேர் அமர்ந்து பார்க்கக்கூடிய வசதி இருக்கிறது. ஆனால் தற்போது இதற்காக கின்னஸ் சாதனை கிடைக்கவில்லை. கடந்த மார்ச் 29 ஆம் தேதி ஐபிஎல் இறுதிப் போட்டி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது.

ஐபிஎல் இறுதிப் போட்டி
இதில் குஜராத்தும் ராஜஸ்தான் அணியும் பலப் பரிட்சை நடத்தின. இதில் ஒரு லட்சத்து ஆயிரத்து 566 ரசிகர்கள் கண்டு களித்தனர். இதன் மூலம் டி20 போட்டியில் அதிக மக்கள் கண்டு களித்ததற்கான கின்னஸ் உலக சாதனையாக இது அங்கீகரிக்கப்பட்டு இருக்கிறது. இதற்கான சான்றிதழ் தற்போது பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷாவிடம் வழங்கப்பட்டிருக்கிறது.

உலககோப்பை இறுதிப் போட்டி
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள ஜெயிஷா ரசிகர்களால் தான் இந்த சாதனை சாத்தியமானதாக நன்றி தெரிவித்துக் கொண்டுள்ளார். இதனிடையே அடுத்த ஆண்டு இந்தியாவில் நடைபெறும் 50 ஓவர் உலகக் கோப்பை தொடரில் இறுதிப்போட்டி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறும் என தகவல் வெளியாகியுள்ளது.


Click it and Unblock the Notifications











