கிரிக்கெட்டை பாதித்த ஓமைக்ரான்..இந்திய அணியின் அடுத்த 2 மாத திட்டம் ரத்தாகிறதா? கங்குலி கூறிய தகவல்!

சென்னை: இந்திய அணியின் தென்னாப்பிரிக்க சுற்றுப்பயணம் ரத்து செய்யப்படவுள்ளதா என்பது குறித்து பிசிசிஐ தலைவர் கங்குலி பேசியுள்ளார்.

தொடரை ஒத்திவைக்க முடிவெடுத்த BCCI.. கோரிக்கை வைக்கும் South Africa

இந்திய அணி தற்போது நியூசிலாந்து அணியுடன் 3 டி20 மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர்களில் விளையாடி வருகிறது.

“நோட் பண்ணி வச்சிக்கங்க” சீனியர்களின் இடங்களை பறிக்கப்போகும் 5 இளம் வீரர்கள்.. எச்சரிக்கும் பாண்டிங்“நோட் பண்ணி வச்சிக்கங்க” சீனியர்களின் இடங்களை பறிக்கப்போகும் 5 இளம் வீரர்கள்.. எச்சரிக்கும் பாண்டிங்

நியூசிலாந்து அணியுடனான டெஸ்ட் தொடர் முடிந்த கையோடு தென்னாப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள இந்திய அணி திட்டமிட்டுள்ளது.

 தென்னாப்பிரிக்க சுற்றுப்பயணம்

தென்னாப்பிரிக்க சுற்றுப்பயணம்

நியூசிலாந்து டெஸ்ட் தொடர் டிசம்பர் 7ம் தேதியுடன் முடிவடைகிறது. இதன் பின்னர் வரும் டிசம்பர் 9ம் தேதி தென்னாப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள இந்திய அணி 3 டெஸ்ட் போட்டிகள், 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 4 டி20 போட்டிகள் என நெடும் தொடரில் பங்கேற்று விளையாடுகிறது. தற்போது ஓய்வில் உள்ள இந்திய சீனியர் வீரர்கள், இந்த தொடரின் போது மீண்டும் அணிக்கு திரும்புகின்றனர்.

சுற்றுப்பயணம் ரத்து?

சுற்றுப்பயணம் ரத்து?

ஆனால் இந்த சுற்றுப்பயணம் ரத்தாகும் சூழல் உருவாகியுள்ளது. தென்னாப்பிரிக்காவில் புதிய வகை கொரோனா தொற்று உருவாகியுள்ளது. ஒமிக்ரான் என்ற அந்த கொரோனா வகையானது தற்போது வேகமாக பல்வேறு நாடுகளுக்கும் பரவி வருகிறது. இதனால் இந்திய வீரர்கள் அங்கு செல்வது ஆபத்தான ஒன்றாக பார்க்கப்படுகிறது.

கங்குலி பதில்

கங்குலி பதில்

இந்நிலையில் இதுகுறித்து பிசிசிஐ தலைவர் கங்குலி விளக்கம் கொடுத்துள்ளார். இந்திய அணியின் தென்னாப்பிரிக்க சுற்றுப்பயணம் ரத்து செய்யப்பட எந்த ஆலோசனையும் மேற்கொள்ளவில்லை. அந்த தொடர் குறித்து முடிவெடுக்க இன்னும் கால அவகாசம் உள்ளது. எனவே காத்திருந்து பின்னர் முடிவு எடுக்கப்படும். வரும் டிசம்பர் 17ம் தேதியன்று முதல் டெஸ்ட் திட்டமிடப்பட்டுள்ளது. அதற்கான ஏற்பாடுகள் தான் தற்போதைக்கு நடந்து வருகிறது.

இன்னும் காத்திருப்போம்

இன்னும் காத்திருப்போம்

வீரர்களின் பாதுகாப்பு தான் பிசிசிஐ-ன் முதன்மையாக விஷயமாக இருக்கும். எனவே அவர்களின் பாதுகாப்புக்காக பிசிசிஐயால் என்ன செய்ய முடியுமோ, அவற்றையெல்லாம் தாமதமின்றி செய்வோம். இந்திய அணி தென்னாப்பிரிக்காவுக்கு செல்ல இன்னும் சில நாட்கள் மீதமுள்ளன. எனவே நிதானமாக காத்திருப்போம் என கங்குலி கூறியுள்ளார்.

பிசிசிஐ அதிகாரி

பிசிசிஐ அதிகாரி

இதுகுறித்து பேசிய பிசிசிஐ அதிகாரி ஒருவர், தென்னாப்பிரிக்காவில் தற்போதைய நிலவரம் எப்படி உள்ளது என்பது தெரியாமல் தற்போதைக்கு எதையும் கூற முடியாது. இந்திய வீரர்கள் டிசம்பர் 8 அல்லது 9ம் தேதியன்று தென்னாப்பிரிக்காவுக்கு புறப்பட்டுவிடுவார்கள் என கூறியுள்ளார். எது எப்படி இருந்தாலும், மத்திய அரசிடம் இருந்து ஒப்புதல் பெற்றால் மட்டுமே இந்திய அணி செல்லும் எனத்தெரிகிறது.

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
BCCI President Sourav Ganguly opens up about team india's tour of south africa
Story first published: Wednesday, December 1, 2021, 14:16 [IST]
Other articles published on Dec 1, 2021
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X