For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ஐசிசியின் சிறந்த டெஸ்ட் மற்றும் ஒருநாள் டீம் இதுதான்.. யார் கேப்டன் தெரியுமா?

ஐசிசி 2017ம் ஆண்டிற்கான சிறந்த டெஸ்ட் மற்றும் ஒருநாள் அணியின் பட்டியல் வெளியிடப்பட்டு இருக்கிறது.

By Shyamsundar

சென்னை: ஐசிசி 2017ம் ஆண்டிற்கான சிறந்த டெஸ்ட் மற்றும் ஒருநாள் அணியின் பட்டியல் வெளியிடப்பட்டு இருக்கிறது. ஒவ்வொரு அணியில் இருக்கும் முக்கிய வீரர்கள் இந்த பட்டியலில் தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார்கள்.

எப்போதும் போல இந்த முறையும் இந்திய மற்றும் ஆஸ்திரேலிய வீரர்கள் அதிகமாக தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார்கள். அதேபோல் ஆச்சரியமாக சிறிய அணியை சேர்ந்த புதிய வீரர்களும் அணியில் சேர்க்கப்பட்டு இருக்கிறார்கள்.

பல்வேறு போட்டிகளில் வீரர்கள் விளையாடியதன் அடிப்படையில் இந்த தேர்வு நடைபெற்று இருக்கிறது.

டெஸ்ட் டீம்

ஐசிசியின் டெஸ்ட் அணியில் டியான் எல்கர் (தென்னாப்பிரிக்கா), டேவிட் வார்னர் (ஆஸ்திரேலியா), விராட் கோஹ்லி (இந்தியா), ஸ்டீவ் ஸ்மித் (ஆஸ்திரேலியா), புஜாரா (இந்தியா), பென் ஸ்டோக்ஸ் (இங்கிலாந்து), குயிண்டின் டி காக் (தென்னாப்பிரிக்கா), அஸ்வின் (இந்தியா), மிட்செல் ஸ்டார்க் (ஆஸ்திரேலியா), காகிஸோ ரபாடா (தென்னாப்பிரிக்கா), ஜேம்ஸ் ஆண்டர்சன் (இங்கிலாந்து) ஆகியோர் உள்ளனர்.

ஒருநாள் டீம்

ஐசிசியின் ஒருநாள் அணியில் டேவிட் வார்னர் (ஆஸ்திரேலியா), ரோஹித் சர்மா (இந்தியா),விராட் கோஹ்லி (இந்தியா), பாபர் அசாம் (பாகிஸ்தான்), டி வில்லியர்ஸ் (தென்னாப்பிரிக்கா), குயிண்டின் டி காக் (தென்னாப்பிரிக்கா), பென் ஸ்டோக்ஸ் (இங்கிலாந்து), டிரெண்ட் போல்ட் (நியுசிலாந்து), ஹசன் அலி (பாகிஸ்தான்) , ரஷீத் கான் (ஆப்கானிஸ்தான்), ஜாஸ்பிரிட் பும்ரா (இந்தியா) ஆகியோர் உள்ளனர்.

கேப்டன்

கேப்டன்

இந்த இரண்டு அணிக்கும் கேப்டனாக கோஹ்லி தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார். அதேபோல் மூன்றாவது இடத்தில் களம் இறங்க உலகிலேயே சிறந்த வீரர் கோஹ்லி தான் என்று கூறப்பட்டு உள்ளது. ஏற்கனவே இவர் சிறந்த ஒருநாள் வீரர் விருது வாங்கியுள்ளார்.

ஒரு போட்டி மட்டுமே

ஒரு போட்டி மட்டுமே

கோஹ்லிக்கு இணையான வீரர்களாக டி வில்லியர்ஸ் மற்றும் ஸ்டீவ் ஸ்மித் பார்க்கப்படுகிறார்கள். ஆனால் ஸ்டீவ் ஸ்மித் டெஸ்ட் அணியில் மட்டும் இடம்பிடித்துள்ளார். அதேபோல் டி வில்லியர்ஸ் ஒருநாள் அணியில் மட்டுமே இருக்கிறார். ஆனால் கோஹ்லி இரண்டிலும் இடம்பிடித்துள்ளார்.

இலங்கை

இலங்கை

இதில் மிகவும் ஏமாற்றமான விஷயம் இலங்கை அணியின் ஒரு வீரர் கூட எந்த அணியிலும் இடம்பெறவில்லை. ஆப்கானிஸ்தான் , பங்களாதேஷ் வீரர்கள் கூட அணியில் இருக்கின்றனர். ஆனால் இலங்கை வீரர்கள் அணியில் இடம்பிடிக்க முடியாமல் போய் உள்ளனர்.

டோணியும் இல்லை

டோணியும் இல்லை

அதேபோல் இந்த லிஸ்டில் டோணியும் இல்லை. அவருக்கு பதிலாக இரண்டிலும் விக்கெட் கீப்பராக குயிண்டின் டி காக் (தென்னாப்பிரிக்கா) தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார். ஆனால் டோணி படையை சேர்ந்த அஸ்வின் டெஸ்ட் அணியில் இடம்பிடித்துள்ளார்.

Story first published: Thursday, January 18, 2018, 13:44 [IST]
Other articles published on Jan 18, 2018
English summary
ICC relased the 2017 cricketers awards. Best ICC test team is Dean Elgar (South Africa),David Warner (Australia),Virat Kohli (captain) (India),Steve Smith (Australia),Cheteshwar Pujara (India),Ben Stokes (England) ,Quinton de Kock (wicket-keeper) (South Africa),Ravichandran Ashwin (India),Mitchell Starc (Australia),Kagiso Rabada (South Africa),James Anderson (England). Best One day team is David Warner (Australia), Rohit Sharma (India), Virat Kohli (captain) (India), Babar Azam (Pakistan), AB de Villiers (South Africa), Quinton de Kock (wicket-keeper) (South Africa), Ben Stokes (England), Trent Boult (New Zealand), Hasan Ali (Pakistan), Rashid Khan (Afghanistan), Jasprit Bumrah (India).
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X