For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ஒருநாள் கிரிக்கெட் சராசரி என்ன தெரியுமா? ரிஷப் பண்ட் இந்திய அணிக்கு தேவை.. தினேஷ் கார்த்திக் ஆதரவு!

சென்னை: ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் இந்திய அணி நிர்வாகம் ரிஷப் பண்ட்-ற்கு தொடர்ந்து வாய்ப்பு அளிக்க வேண்டும் என்று தினேஷ் கார்த்திக் ஆதரவு தெரிவித்துள்ளார்.

அண்மைக் காலமாக இந்திய விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் பேட்டிங் ரசிகர்களிடையே அதிகமான விமர்சனங்களை பெற்று வருகிறது. இருப்பினும் நியூசிலாந்து அணிக்கு எதிரான டி20 மற்றும் ஒருநாள் தொடரில் ரிஷப் பண்டிற்கு வாய்ப்பு வழங்கப்பட்டது.

அதேபோல் 2015ம் ஆண்டு முதல் இந்திய அணியில் சஞ்சு சாம்சன் வாய்ப்புக்காக காத்திருந்தும், இதுவரை குறிப்பிடும்படியாக வாய்ப்பு கிடைக்கவில்லை. இதனால் ரிஷப் பண்டிற்கு எதிராகவும், சஞ்சு சாம்சனுக்கு ஆதரவாக சமூக வலைதளங்களில் அதிக விமர்சனங்களை பெற்று வருகிறது.

இந்திய அணி சீனியர்களை வெளுத்து வாங்கிய கவாஸ்கர்.. இதை செய்தால் உலககோப்பை கிடைக்கும் என கருத்து இந்திய அணி சீனியர்களை வெளுத்து வாங்கிய கவாஸ்கர்.. இதை செய்தால் உலககோப்பை கிடைக்கும் என கருத்து

ரிஷப் பண்ட் மீது விமர்சனம்

ரிஷப் பண்ட் மீது விமர்சனம்

ஆனால் ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் ரிஷப் பண்ட்-ன் வேலை என்ன என்பதை இந்திய அணி நிர்வாகம் இதுவரை சரியாக திட்டமிடவில்லை. டெஸ்ட் அணியில் முதன்மை வீரராக செயல்படும் பண்ட்-ற்கு, ஒருநாள் அணியில் வாய்ப்பு என்பது சரியான முடிவு தான். அதுமட்டுமல்லாமல் டி20 உலகக்கோப்பைக்கு முன்னதாக இங்கிலாந்து அணிக்கு எதிராக அடித்த சதத்தை அனைவரும் அவ்வளவு எளிதில் மறந்திருக்க முடியாது.

ரிஷப் பண்டிற்கு ஆதரவு

ரிஷப் பண்டிற்கு ஆதரவு

தேர்வுக் குழுவினர் செய்த தவறு காரணமாக, இந்திய டெஸ்ட் அணிக்காக மறக்க முடியாத வெற்றிகளையும், சாதனைகளையும் பெற்றுக் கொடுத்த ரிஷப் பண்ட் மீது வன்மத்தை கொட்டுவது ஏற்புடையதா என்ற கேள்வியும் இன்னொரு பக்கம் எழுப்பப்பட்டு வருகிறது. அதேபோல் டாப் ஆர்டரில் சிறப்பாக விளையாடும் இடதுகை பேட்ஸ்மேன் தேவை என்பதும் மறுக்க முடியாத வாதம் என்று விமர்சகர்கள் ரிஷப் பண்டிற்கு ஆதரவாக பேசி வருகின்றனர்.

தினேஷ் கார்த்திக் ஆதரவு

தினேஷ் கார்த்திக் ஆதரவு

இந்த நிலையில் இந்திய விக்கெட் கீப்பர் தினேஷ் கார்த்திக் ரிஷப் பண்டிற்கு ஆதரவாக பேசியுள்ளார். இதுகுறித்து ரிஷப் பண்ட் பேசுகையில், டி20 கிரிக்கெட்டில் ரிஷப் பண்ட் சரியாக விளையாடததால், ஒருநாள் கிரிக்கெட்டிலும் வாய்ப்பு வழங்க கூடாது என்பது தவறு. டி20, ஒருநாள் மற்றும் டெஸ்ட் கிரிக்கெட் செயல்பாடுகளை தனித்தனியாக பிரித்து பார்க்க வேண்டும்.

பிரித்து பாருங்கள்

பிரித்து பாருங்கள்

கடந்த 10 ஒருநாள் போட்டிகளில் ரிஷப் பண்டின் சராசரி 45. அதுமட்டுமல்லாமல் இங்கிலாந்து அணிக்கு எதிராக சிறப்பான சதம் விளாசி இந்திய அணியை வெற்றிபெற வைத்துள்ளார். அதனால் ரிஷப் பண்ட்-ற்கு போதுமான வாய்ப்புகளை ஒருநாள் கிரிக்கெட்டிலும் வழங்க வேண்டும். அந்த வாய்ப்புகளிலும் பண்ட் சோபிக்க தவறினால், அணியில் இருந்து நீக்கலாம். ஆனால் டி20 கிரிக்கெட்டில் சிறப்பாக விளையாடவில்லை என்பதற்காக ஒருநாள் கிரிக்கெட்டிலும் அவரை அணியில் இருந்து நீக்க வேண்டும் என்பது நியாயமில்லை என்று தெரிவித்துள்ளார்.

Story first published: Monday, December 5, 2022, 21:47 [IST]
Other articles published on Dec 5, 2022
English summary
Dinesh Karthik has expressed his support that the Indian team management should continue to give Rishabh Pant a chance in ODIs.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X