For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

காரணம் சொல்லி கடுப்பேத்தும் ஆஸ்திரேலியா.. இந்திய அணி பயிற்சிக்கு மொக்கை டீம் ஏன்?

Recommended Video

காரணம் சொல்லி கடுப்பேத்தும் ஆஸ்திரேலியா- வீடியோ

அடிலெய்டு : ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடருக்கு முன் இந்திய அணி கடுமையான பயிற்சியில் ஈடுபட்டு உள்ளது.

அதன் ஒரு பகுதியாக ஒரு பயிற்சிப் போட்டியில் பங்கேற்க உள்ளது இந்தியா. அதற்கான கிரிக்கெட் ஆஸ்திரேலியா XI அணி அனுபவமற்ற வீரர்களை கொண்டுள்ளது.

கிரிக்கெட் ஆஸ்திரேலியா அமைப்பு அனுபவமற்ற அணியை அனுப்பியதற்கு காரணம் சொல்லி சமாளித்துள்ளது.

பலவீனமான ஆஸ்திரேலிய அணி

பலவீனமான ஆஸ்திரேலிய அணி

இந்தியா - ஆஸ்திரேலியா இடையே நடைபெற உள்ள டெஸ்ட் தொடருக்கு முன் ஒரு பயிற்சி போட்டியில் இந்தியா ஆட உள்ளது. அந்த பயிற்சி போட்டி வரும் புதன் கிழமை முதல் துவங்க உள்ளது. அதற்கான கிரிக்கெட் ஆஸ்திரேலியா லெவன் அணி மிகவும் பலவீனமாக உள்ளது தற்போது கேள்விக்கு உள்ளாகியுள்ளது.

பயிற்சி போட்டி முக்கியம்

பயிற்சி போட்டி முக்கியம்

ஒவ்வொரு நாடும் மற்றொரு நாடுக்கு டெஸ்ட் தொடர் ஆடச் செல்லும் போது ஓரிரு பயிற்சிப் போட்டிகளில் பங்கேற்கும். அப்போது தான் அந்த நாட்டின் சூழ்நிலைக்கு ஏற்பவும், டெஸ்ட் போட்டிகளின் சூழ்நிலைக்கும் வீரர்கள் தங்களை தயார் செய்ய முடியும்.

ஒரே ஒரு வீரர்

ஒரே ஒரு வீரர்

இந்த சூழ்நிலையில் ஆஸ்திரேலிய அணி பலவீனமான அணியை அனுப்பி உள்ளது. அந்த அணியில் ஷார்ட் தவிர ஒரு வீரர் கூட சர்வதேச போட்டிகளில் ஆடாதவர்கள். அது கூட பரவாயில்லை உள்ளூர் போட்டி அனுபவம் இருக்கும் என பார்த்தால், அதுவும் இல்லை.

திறன் வாய்ந்த வீரர்கள் இல்லை

திறன் வாய்ந்த வீரர்கள் இல்லை

திறன் வாய்ந்த வீரர்கள் என்றால் ஒரு இரண்டு - மூன்று பேரை சொல்லலாம். மற்ற வீரர்கள் ஒருவர் கூட அனுபவம் அல்லது அதிக திறன் வாய்ந்த வீரர்கள் இல்லை. இதை பற்றி கிரிக்கெட் ஆஸ்திரேலியாவிடம் கருத்து கேட்கப்பட்டது.

முயற்சி செய்கிறோம்

முயற்சி செய்கிறோம்

கிரிக்கெட் ஆஸ்திரேலியா, உள்ளூர் முதல் தர போட்டிகள் நடந்து வருவதால் அதில் ஆடும் வீரர்களை இந்த அணியில் ஆட வைக்க முடியாது என கூறியுள்ளது. எனினும், சர்வதேச அனுபவம் பெற்ற ரென்ஷா, மாத்யூ வேட் மற்றும் அலெக்ஸ் டூலன் ஆகியோரை இந்த அணியில் சேர்க்க முயற்சி செய்வதாக கூறியுள்ளது.

முக்கியதுவம் இல்லாமல் போகும்

முக்கியதுவம் இல்லாமல் போகும்

இவர்களில் ஒருவர் கூட இந்தியா - ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடரில் ஆடப்போவது இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. இது போன்ற பலவீனமான அணியை அனுப்புவதன் மூலம், இந்திய அணியின் பயிற்சிப் போட்டியை முக்கியதுவம் அற்றதாக மாற்ற முயற்சி செய்கிறதா ஆஸ்திரேலியா? என்ற சந்தேகமும் எழுகிறது.

கருத்து சொல்லவில்லை

கருத்து சொல்லவில்லை

இது போன்ற அனுபவமற்ற அணியோடு ஆடும் நிலையில், இந்திய வீரர்கள் பெரிய அளவில் இந்த பயிற்சிப் போட்டியை முக்கியமாக கருத முடியாது. இது பற்றி இந்திய அணி தன் கருத்தை கூறவில்லை. இந்திய அணி தற்போது வலை பயிற்சியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது.

Story first published: Tuesday, November 27, 2018, 18:22 [IST]
Other articles published on Nov 27, 2018
English summary
Cricket Australia send a weak squad for India Practice match
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X