இன்னும் நிறைய இருக்கு ப்ரோ.. பத்ம பூஷன் விருது பெற்ற டோணியை அஸ்வின் எப்படி வாழ்த்தினார் தெரியுமா?

Posted By:

சென்னை: பத்ம பூஷன் பெற்றுள்ள டோணியை தமிழக வீரர் அஸ்வின் வாழ்த்தி உள்ளார். அதேபோல் நிறைய வீரர்கள் அவரை வாழ்த்தி இருக்கிறார்கள்.

2018ஆம் ஆண்டுக்கான பத்ம விருதுகள் கடந்த மாதம் அறிவிக்கப்பட்டது. பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கியவர்களுக்கு விருதுகள் அறிவிக்கப்பட்டது.

இதில் கிரிக்கெட் வீரர் டோணிக்கு பத்ம பூஷன் அறிவிக்கப்பட்டது. விளையாட்டு துறையில் சிறந்து விளங்கியதால் இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.

சூப்பர்

இந்த நிலையில் பத்ம பூஷன் அறிவிக்கப்பட்ட டோணி, நேற்று டெல்லியில் விருதை பெற்றார். குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் டோணிக்கு விருது வழங்கினார்.டெல்லி குடியரசுத் தலைவர் மாளிகையில் இரண்டாவது கட்ட பத்ம விருது வழங்கும் விழா நடந்தது. டோணி ராணுவ உடையில் விருது வாங்கினார்.

சேவாக் வாழ்த்து

சேவாக் டோணிக்கு கூறிய வாழ்த்தில் ''அவர் செய்த ராணுவ நடை, சான்றிதழை அவர் பிடித்து இருப்பது எல்லாம் மிகவும் சிறப்பாக இருக்கிறது. வாழ்த்துகள் லெப்டினன்ட் கர்னல் எம்.எஸ். டோணி, 106வது பாரா பட்டாலியன் படை பிரிவு'' என்று வித்தியாசமாக வாழ்த்தியுள்ளார்.

லக்ஷ்மன் டிவிட்டரில்

லக்ஷ்மன் டிவிட்டரில் ''பத்ம பூஷன் விருது வாங்கும் டோணி அவருடைய ராணுவ உடையில் வந்து இருப்பது பார்க்கவே கண்கொள்ளா காட்சியாக இருக்கிறது. சரியாக உலகக்கோப்பை வென்ற நாளில் 7 வருடம் பின் விருது வாங்கியுள்ளார். வாழ்த்துகள்'' என்றுள்ளார்.

அஸ்வின் வாழ்த்து

இந்த நிலையில் டோணிக்கு அஸ்வின் ''பத்ம பூஷன் விருது பெறுவதற்கு வாழ்த்துகள். சரியாக இந்தியா உலகக் கோப்பை வென்ற தினத்தில் விருது பெற்றுள்ளீர்கள். இதேபோல் இன்னும் நிறைய விருதுகள் காத்திருக்கிறது'' என்றுள்ளார்.

கிரிக்கெட்னா உயிரா?.. மைகேல் பேன்டசி கிரிக்கெட் ஆடி நிரூபிங்க பாஸ்!

English summary
2018 Padma awards have announced. Dhoni gets 2018 Padma Bhushan from President. Cricket players wished Dhoni for 2018 Padma Bhushan award.
Story first published: Tuesday, April 3, 2018, 16:49 [IST]
Other articles published on Apr 3, 2018

myKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற