டி-20ல் டோணிதான் தல!

Posted By: SRIVIDHYA GOVINDARAJAN
டி20 போட்டியிலும் தல டோணிதான் கெத்து- வீடியோ

டெல்லி: ஒருதினப் போட்டிகளில் 400 விக்கெட், ஒட்டுமொத்தமாக 600 கேட்ச்கள் என சாதனைகளை விரட்டி விரட்டி செய்து வரும் டோணி, தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டி-20 போட்டியின் போது மற்றொரு புதிய சாதனையை நிகழ்த்தினார்.

இந்திய கிரிக்கெட் அணி, தென்னாப்பிரிக்காவில் விளையாடி வருகிறது. ஒருதினப் போட்டித் தொடரை 5-1 என்ற கணக்கில் வென்றது. அடுத்ததாக, 3 போட்டிகள் கொண்ட டி-20 போட்டித் தொடரின் முதல் ஆட்டத்திலும் இந்தியா வென்றது.

ஒருதினப் போட்டித் தொடரின் மூன்றாவது ஆட்டத்தின்போது, ஒருதினப் போட்டியில், 400 விக்கெட்டை வீழ்த்திய, முதல் இந்திய விக்கெட் கீப்பர், உலக அளவில் 4வது விக்கெட் கீப்பர் என்ற சாதனை கேப்டன் கூல் மகேந்திர சிங் டோணி படைத்தார்.

600 கேட்ச்களை பிடித்துள்ளார்

600 கேட்ச்களை பிடித்துள்ளார்

இந்த நிலையில், 6வது ஒருதினப் போட்டியின்போது, அனைத்து வகை கிரிக்கெட்களிலும் 600 கேட்ச்களைப் பிடித்த மூன்றாவது விக்கெட் கீப்பர் என்ற சாதனையை டோணி புரிந்தார்.

தெ.ஆ.வில் மூன்றாவது சாதனை

தெ.ஆ.வில் மூன்றாவது சாதனை

இந்த நிலையில் ஜோகனஸ்பர்க்கில் நடந்த முதல் டி-20 போட்டியின்போது டோணி புதிய சாதனையைப் படைத்தார். புவனேஷ்குமார் பந்தில், தென்னாப்பிரிக்காவின் ரீஜா ஹென்ரிட்க்ஸ் அடித்தப் பந்தை பிடித்ததன் மூலம், விக்கெட் கீப்பராக, டி-20 போட்டியில் புதிய மைல்கல்லை டோணி எட்டினார்.

134வது கேட்ச் பிடித்தால் தல

134வது கேட்ச் பிடித்தால் தல

டோணி 275 டி-20 போட்டிகளில் பிடிக்கும் 134வது கேட்ச் இதுவாகும். இதன் மூலம், இலங்கையின் குமார் சங்கக்காராவின் சாதனையை அவர் முறியடித்து, முதலிடத்தைப் பிடித்தார்.

3வது இடத்தில் கார்த்திக்

3வது இடத்தில் கார்த்திக்

சங்கக்காரா 254 போட்டிகளில் 133 கேட்ச்களை பிடித்துள்ளார். டோணி அந்த சாதனையை முறியடித்தார். தினேஷ் கார்த்திக், 227 போட்டிகளில் 123 கேட்ச்களுடன் மூன்றாவது இடத்தில் உள்ளார்.

ஏற்கனவே சாதனை படைத்தவர்

ஏற்கனவே சாதனை படைத்தவர்

ஐபிஎல் உள்பட முதல் தர டி-20 போட்டிகளில், 275 விக்கெட்களை வீழ்த்தியுள்ள டோணி, சர்வதேச டி-20 போட்டிகளில், 87 போட்டிகளில் 77 விக்கெட்களை வீழ்த்தி ஏற்கனவே முதலிடத்தில் உள்ளார்.

Story first published: Tuesday, February 20, 2018, 12:05 [IST]
Other articles published on Feb 20, 2018

myKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற