டோணிக்கான சம்பளம் குறைந்ததற்கு காரணம் அவர்தான்

Posted By: SRIVIDHYA GOVINDARAJAN
தோனிக்கு இதனால் தான் சம்பளம் குறைக்கப்பட்டதாம்- வீடியோ

டெல்லி: இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கான சம்பளம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. இதுவரை முதல் கிரேடில் இருந்த டோணி, இரண்டாவது கிரேடுக்கு மாற்றப்பட்டுள்ளார். அதனால், ஜூனியர்களைவிட அவருக்கு சம்பளம் குறைவு. ஆனால், இதற்கு அவர்தான் காரணம் என்கிறது பிசிசிஐ

இந்திய கிரி்க்கெட் வீரர்களுக்கு, அவர்கள் விளையாடும் போட்டிகளைப் பொருத்து, இதுவரை, A,B,C என்று மூன்று கிரேட்களாக பிரிக்கப்பட்டிருந்தனர்.

அதில், A கிரேடில் உள்ளவர்களின் ஆண்டு சம்பளம் ரூ. 2 கோடி, B கிரேடில் உள்ளவர்களின் சம்பளம் ரூ.1 கோடி, சி கிரேடில் உள்ளவர்களின் ஆண்டு சம்பளம், ரூ.50 லட்சமாகவும் இருந்தது.

குரல் கொடுத்தார் கோஹ்லி

குரல் கொடுத்தார் கோஹ்லி

இந்த ஊதிய ஒப்பந்தம் கடந்தாண்டு செப்டம்பர் மாதத்துடன் முடிந்து விட்டது. சம்பளத்தை உயர்த்தி தர வேண்டும் என்று கேப்டன் விராட் கோஹ்லி குரல் கொடுத்தார். அதற்கு கோச் ரவி சாஸ்திரியின் ஆசியும் இருந்தது. அதையடுத்து, பிசிசிஐ நிர்வாகத்தை கவனித்து வரும் சுப்ரீம் கோர்ட் நியமித்துள்ள நிர்வாகக் குழு, கடந்தாண்டில் கோச் ரவி சாஸ்திரி, கேப்டன் விராட் கோஹ்லி, டோணி ஆகியோரிடம் பேசியது.

ஏ+ கிரேடில் 5 வீரர்கள்

ஏ+ கிரேடில் 5 வீரர்கள்

அதையடுத்து புதிதாக ஏ+ என்ற புதிய கிரேட் கொண்டு வரப்பட்டுள்ளது. டெஸ்ட், ஒருதினப் போட்டி மற்றும் டி-20 என மூன்று விதமாக கிரிக்கெட் போட்டியிலும் விளையாடுபவர்கள், ஏ+ பிரிவில் வருவார்கள். அதன்படி, கேப்டன் விராட் கோஹ்லி, ரோஹித் சர்மா, ஷிகார் தவான், புவனேஸ்வர் குமார், ஜஸ்பிரித் பும்ரா ஆகிய ஐந்து பேரும், ஏ+ பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

டோணியின் கிரேட் குறைந்தது

டோணியின் கிரேட் குறைந்தது

கேப்டன் கூல் மகேந்திர சிங் டோணி, 2014ல் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்று விட்டார். அதனால், அவர் ஏ பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளார். இது குறித்து டோணியுடன் பேசியுள்ளதாக நிர்வாகக் குழு கூறியுள்ளது. ஏ கிரேடில் டோணியுடன், சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, முரளி விஜய், சத்தேஸ்வர் புஜாரா, அஜங்ய ரஹானே, விக்கெட் கீப்பர் விருத்தமான் சாஹா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

சி கிரேடில் ரெய்னா

சி கிரேடில் ரெய்னா

மனைவி அளித்த பாலியல் புகாரால் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி எந்தப் பட்டியலிலும் இடம்பெறாமல், காத்திருப்போர் பட்டியலில் உள்ளார். அதே நேரத்தில் யுவராஜ் சிங், ரிஷப் பந்த் ஆகியோர் எந்தப் பிரிவிலும் இல்லை. சுரேஷ் ரெய்னா சி கிரேடில் உள்ளார். ஏ+ பிரிவில் உள்ள ஐந்து பேரும், எந்த வகையான கிரிக்கெட் போட்டியிலும் விளையாடுவதற்கு தயாராக உள்ளனர். டோணி, டெஸ்ட் போட்டியில் இருந்து ஓய்வு பெற்றதால், அவர் அடுத்த நிலைக்கு தள்ளப்பட்டார். இது குறித்து டோணியிடம் பேசியுள்ளோம் என, நிர்வாகம் கூறுகிறது.

ஒன்டே அணியில் அஸ்வினுக்கு வாய்ப்பில்லை

ஒன்டே அணியில் அஸ்வினுக்கு வாய்ப்பில்லை

ஏதாவது ஒரு வகை கிரிக்கெட் போட்டிக்கு கண்டிப்பாக இடம் பெறுவார்கள் என்ற வீரர்கள் ஏ பிரிவில் இடம்பெற்றுள்ளனர். அதனால்தான் டோணி அதில் இடம் பெற்றுள்ளார். ஒருதினப் போட்டி அணிக்கான வாய்ப்பு இல்லாவிட்டாலும் டெஸ்ட் போட்டியில் விளையாடக் கூடியவர்களாக உள்ளதால், அஸ்வின், ஜடேஜாவும் இந்தப் பிரிவில் உள்ளனர் என்று நிர்வாகம் கூறியுள்ளது.

சம்பளம் உயர்ந்தது

சம்பளம் உயர்ந்தது

இந்தாண்டு செப்டம்பர் மாதம் வரைக்கான இந்த ஊதிய உயர்வின்படி, நான்கு கிரேடிலும் உள்ள வீரர்கள் பட்டியல்:

A+ கிரேட் வீரர்களின் ஆண்டு சம்பளம் ரூ 7 கோடி. - விராட் கோஹ்லி, ரோஹித் ஷர்மா, ஷிகார் தவான், புவனேஷ் குமார், ஜஸ்பிரித் பும்ரா.

A கிரேட் வீரர்களின் ஆண்டு சம்பளம் ரூ.5 கோடி. - மகேந்திர சிங் டோணி, ரவிச்சந்திரன் அஷ்வின், ரவீந்திர ஜடேஜா, முரளி விஜய், சத்தேஸ்வர் புஜாரா, அஜங்யா ரஹானே, சாஹா.

B கிரேட் வீரர்களின் ஆண்டு சம்பளம் ரூ.3 கோடி - லோகேஷ் ராகுல், உமேஷ் யாதவ், குல்தீப் யாதவ், யுஸ்வேந்திர சாஹல், ஹார்திக் பாண்டயா, இஷாந்த் ஷர்மா, தினேஷ் கார்த்திக்.

C கிரேட் வீரர்களின் ஆண்டு சம்பளம் ரூ.1 கோடி.- கேதர் ஜாதவ், மனீஷ் பாண்டே, அக்சர் படேல், கருண் நாயர், சுரேஷ் ரெய்னா, பார்த்திவ் படேல், ஜெயந்த் யாதவ்.

மிதாலிக்கு சம்பளம் எவ்வளவு?

மிதாலிக்கு சம்பளம் எவ்வளவு?

இதேபோன்று பெண்கள் கிரிக்கெட்டிற்கான ஆண்டு சம்பளமும் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. ஏ கிரேட் பிரிவில் உள்ள வீராங்கனைகளின் ஆண்டு சம்பளம் ரூ.50 லட்சமாகவும், பி கிரேட் வீராங்கனைகளின் ஊதியம் ரூ. 30 லட்சமாகவும் சி கிரேட் வீராங்கனைகளின் ஊதியம் ரூ. 10 லட்சமாகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. கேப்டன் மிதாலி ராஜ், சீனியர் ஜூலான் கோஸ்வாமி, டி-20 கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர், அதிரடி வீராங்கனை ஸ்மிருதி மந்தனா ஆகியோர் ஏ கிரேடில் உள்ளனர்.

Story first published: Thursday, March 8, 2018, 11:50 [IST]
Other articles published on Mar 8, 2018

myKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற