சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற பிராவோ.. சிஎஸ்கே-வுக்கு இனிமே ஆடமாட்டாரா?

சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற பிராவோ- வீடியோ

சென்னை : வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னணி வீரராக வலம் வந்த ட்வைன் பிராவோ அக்டோபர் 24 அன்று அதிகாரப்பூர்வமாக தன் ஓய்வை அறிவித்தார்.

சர்வதேச போட்டிகளில் இருந்து தான் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். வெஸ்ட் இண்டீஸ் அணியில் நீண்ட காலமாகவே பிராவோ இடம் பெறாமல் இருந்து வந்தார்.

இந்நிலையில், தன் ஓய்வு முடிவை அறிவித்துள்ளார் பிராவோ. அவர் ஐபிஎல் உட்பட பல்வேறு நாடுகளின் டி20 தொடர்களில் தொடர்ந்து பங்கேற்று வந்தார்.

மொத்தமாக 337 விக்கெட்கள்

மொத்தமாக 337 விக்கெட்கள்

வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக மூன்று வித கிரிக்கெட் போட்டிகளிலும் மொத்தமாக 270 சர்வதேச போட்டிகள் ஆடி 337 விக்கெட்கள் மற்றும் 6310 ரன்கள் எடுத்துள்ளார்.

கடைசியாக ஆடியது எப்போது?

கடைசியாக ஆடியது எப்போது?

வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக தன் கடைசி டெஸ்ட் போட்டியை 2010-இலும், கடைசி ஒருநாள் போட்டியை 2014-இலும், கடைசி டி20யை 2016-இலும் ஆடினார் பிராவோ. வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் நிர்வாகத்துடன் இருந்த சம்பள பிரச்சனை உள்ளிட்ட காரணங்களால் அந்த நாட்டு அணியில் பல சமயம் இடம் பெறாமல் இருந்து வந்தார்.

டி20 தொடர்களில் பிராவோ

டி20 தொடர்களில் பிராவோ

எனினும், பல்வேறு நாடுகளின் உள்ளூர் டி20 தொடர்களில் தொடர்ந்து ஆடி வந்தார் பிராவோ. தற்போது அவர் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றாலும், தொடர்ந்து டி20 தொடர்களில் பங்கேற்பேன் என கூறியுள்ளார். 35 வயதாகும் பிராவோ இன்னும் அதிக காலம் கிரிக்கெட் ஆட முடியுமா என்பதும் கேள்விக்குறியே.

சிஎஸ்கே அணியில் ஆடுவார்

சிஎஸ்கே அணியில் ஆடுவார்

சிஎஸ்கே அணியில் தொடர்ந்து இடம் பெற்று வந்த வீரர்களில் பிராவோவும் ஒருவர். சிஎஸ்கே கேப்டன் தோனியின் நம்பிக்கை நட்சத்திரமாக விளங்கி வருபவர். பிராவோ சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்று விட்டாலும், சிஎஸ்கே அணிக்காக தொடர்ந்து ஆடுவார் என தெரிகிறது.

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
 
English summary
Dwayne Bravo retires from International Cricket but will continue playing T20 leagues
Story first published: Thursday, October 25, 2018, 14:27 [IST]
Other articles published on Oct 25, 2018
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X