For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ரவி சாஸ்திரியா..? அப்ப எல்லா கோப்பையும் கோவிந்தா.. கோவிந்தா..! கழுவி ஊத்தும் நெட்டிசன்கள்

Recommended Video

Ravi Shastri back to coach | ரவி சாஸ்திரியே இந்திய அணி பயிற்சியாளர்.. பிசிசிஐ அறிவிப்பு

மும்பை: இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக மீண்டும் ரவி சாஸ்திரியே தேர்வு செய்யப்பட்டுள்ளதற்கு ரசிகர்கள் தரப்பில் இருந்து கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. டுவிட்டர் வழியாக ரசிகர்கள் பிசிசிஐயையும், தேர்வு கமிட்டியையும் விளாசி தள்ளுகின்றனர்.

இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக மீண்டும் ரவி சாஸ்திரியே தேர்வு செய்யப்பட்டுள்ளார். பயிற்சியாளராக மீண்டும் ரவி சாஸ்திரியே இருப்பார் என்று தேர்வுக்குழுத் தலைவர் கபில் தேவ் அறிவித்துள்ளார். இதையடுத்து வருகிற 2021-ம் ஆண்டு வரையில் ரவி சாஸ்திரியே பயிற்சியாளராக பணியாற்றுவார்.

ரவி சாஸ்திரி உடன் மைக் ஹசன், ராபின் சிங், டாம் மூடி, லால்சந்த் ராஜ்புத் ஆகியோரும் போட்டியில் இருந்தனர். ஆனால், கிரிக்கெட் குறித்த அறிவு, அனுபவம் அடிப்படையில் ரவி சாஸ்திரி தேர்வு செய்யப்பட்டுள்ளதாக பிசிசிஐ தெரிவித்துள்ளது.

எழுப்பப்படும் கேள்விகள்

எழுப்பப்படும் கேள்விகள்

ஆனால் பயிற்சியாளர்கள் விஷயத்தில் தேர்வுக்குழு மற்றும் பிசிசிஐயின் நடவடிக்கையை ரசிகர்கள் கேள்விக்குள்ளாக்கி இருக்கின்றனர். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட உலக கோப்பை தோல்விக்கு பிறகு மீண்டும் அவரையே எப்படி பயிற்சியாளராக நியமிக்கலாம் என்று ரசிகர்கள் பொங்கியிருக்கின்றனர்.

நாடகம் என கொதிப்பு

டுவிட்டர் வழியாக அவர்கள் பொருமி தள்ளியிருக்கின்றனர். அவரையே மீண்டும் தேர்வு செய்யப்படுவதற்காக நேர்காணல் என ஒரு நாடகம் நடத்தப்பட்டதாக புலம்பி தீர்த்திருக்கின்றனர். ரவி சாஸ்திரி தான் கோச் என்பதால் 2023ம் ஆண்டு உலக கோப்பையும் கோவிந்தா என ரசிகர்கள் பொங்கியிருக்கின்றனர்.

கிரிக்கெட்டில் அரசியல்

ரவி ஷா என்ற ரசிகர் அதிர்ச்சியி உச்சக்கட்டத்துக்கே சென்றுவிட்டார். விளையாட்டிலும் அரசியல் புகுந்துவிட்டது, நமது அணி சிதைக்கப்பட்டு விட்டது, எனவே வேறு ஒரு விளையாட்டை அடையாளம் காணுங்கள் என்று கூறியிருக்கிறார்.

பயிற்சியாளர் திரைக்கதை

சிக்கி விக்கி என்பவர் தான் கேலியான, கிண்டலான விமர்சனம் தான் டாப். அணிக்கு என்ன செய்வேன் என்று ரவி சாஸ்திரி கூறுவது போல ஒரு திரைக்கதையை அமைத்திருக்கும் அவர், அந்த விளக்க உரையில் கோலி என்னை கோச்சாக விரும்புகிறார், எனவே என்னை பயிற்சி யாளராக்குங்கள் என்று கேட்பது போல தெறிக்கவிட்டிருக்கிறார்.

யாருக்கும் கவலையில்லை

அனுப்ரியா என்ற ரசிகை கோலி சொன்னதற்கு தலையாட்டி, ரவி சாஸ்திரியே அறிவிக்கப்படுவார் என்று கூறியதாக பதிவிட்டிருக்கிறார். மற்ற வலுவான போட்டியாளர்கள் இருந்தாலும் அதை பற்றி யாரும் கவலைப் படவில்லை என்றும் அவர் கூறியிருக்கிறார்.

அடம்பிடித்த கோலி

ரவி சாஸ்திரி ஒன்றும் பெரிய கோச் எல்லாம் கிடையாது. தாம் சதம் அடித்து சாதனை படைப்பதற்காக ரவி சாஸ்திரி வேண்டும் என்று கேட்டு அடம் பிடித்து இருக்கிறார் என்று கூறியிருக்கிறார்.

வல்லுநர்கள் கருத்து

வல்லுநர்கள் கருத்து

ஆனால் வேறு சிலர் கிரிக்கெட் வல்லுநர்களோ கேப்டனின் விருப்பத்துக்கு மாறாக எதுவும் செய்யக் கூடாது என்ற ஒரு மனநிலை பிசிசிஐ டாப் நிர்வாகத்தினரிடையே வந்ததாக கூறியிருக்கின்றனர். அதன் பிறகு, ஏற்கெனவே ரவி சாஸ்திரிதான் என்று முடிவெடுத்து விட்டு பட்டியலில் கடைசி 3 பேர் என்றெல்லாம் கூறி நேர் காணல் என்று ஏன் விரயம் செய்ய வேண்டும் என்று கேள்வி எழுப்பி இருக்கின்றனர்.

Story first published: Friday, August 16, 2019, 20:57 [IST]
Other articles published on Aug 16, 2019
English summary
Fan displeasure about ravi shastri retained as new coach.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X