முன்னாள் கிரிக்கெட் வாரிய செயலாளர் ஜெயவந்த் லெலே மரணம்

தீவிர மாரடைப்பால் அவர் மரணமடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவருக்கு வயது 75 ஆகிறது. இவருக்கு மனைவியும், ஒரு மகனும், மகளும் உள்ளனர்.
கிரிக்கெட் வாரிய உதவி செயலாளராகவும், செயலாளராகவும் இருந்தவர் லெலே. ஜக்மோகன் டால்மியா அப்போது ஐசிசியின் தலைவராக இருந்தார்.
லெலே பதவிக்காலத்தில்தான் 2000மாவது ஆண்டில் மேட்ச் பிக்ஸிங் பிரச்சினை வெடித்தது. முன்னாள் கேப்டன் அஸாருதீன், அஜய் சர்மா ஆகியோருக்கு வாழ்நாள் தடையும், அஜய் ஜடேஜா மற்றும் மனோஜ் பிரபாகருக்கு ஐந்து ஆண்டுத் தடையும் விதிக்கப்பட்டது என்பது நினைவிருக்கலாம்.
நல்ல நடுவராகவும், கிளப்அளவிலான கிரிக்கெட் வீரராகவும் இருந்தவர் லெலே.
இவரது பதவிக்காலத்தில்தான் தென் ஆப்பிரிக்காவின் முன்னாள் கேப்டன் ஹன்ஸி குரோனியேவுக்கு எதிரான மேட்ச் பிக்ஸிங் சர்ச்சையும் வெடித்தது.
வெளிப்படையாக பேசக் கூடியவர் இவர். கபில் தேவுக்கு எதிராக மிகவும் கடுமையாக ஒருமுறை கருத்து தெரிவித்திருந்தார். அப்போது கபில் தேவ் இந்திய அணியின் பயிற்சியாளராக இருந்தார்.


Click it and Unblock the Notifications