Exclusive: "கேப்டன்" விராட் கோலியை மாற்றும் நேரமா? - சடகோபன் ரமேஷ் "நச்" பதில்

சவுத்தாம்ப்டன்: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்தியா தோல்வி அடைந்திருக்கும் நிலையில், விராட் கோலியின் கேப்டன்சி குறித்து நமது Tamil Mykhel தளத்தில் பேசியுள்ளார் முன்னாள் இந்திய வீரர் சடகோபன் ரமேஷ்.

சவுத்தாம்ப்டனில் நடைபெற்ற உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில், நியூசிலாந்து அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தியது.

இப்போட்டியை இந்தியா டிரா செய்திருக்க வாய்ப்பிருந்தது என்றும், இரண்டாம் இன்னிங்ஸின் பிற்பகுதியில், இந்திய அணி அதிரடியாக விளையாட நினைத்தது தவறு என்பது குறித்தும் பல விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. குறிப்பாக, விராட் கோலியின் கேப்டன்சி குறித்து பலதரப்பில் இருந்து மாறுபட்ட கருத்துகள் எழுகின்றன. இந்நிலையில், விராட் கோலியின் கேப்டன்சி குறித்து நாம் இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் சடகோபன் ரமேஷிடம் ஜஸ்ட் இரண்டு கேள்விகளை முன்வைத்தோம்.

22 வீரர்களுமே வெற்றியாளர்கள் தான்.. கேன் வில்லியம்சனின் பெருந்தன்மை.. பாராட்டி தள்ளும் நெட்டிசன்கள்!22 வீரர்களுமே வெற்றியாளர்கள் தான்.. கேன் வில்லியம்சனின் பெருந்தன்மை.. பாராட்டி தள்ளும் நெட்டிசன்கள்!

கேள்வி: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலில் இந்தியா தோற்றுவிட்டது. இங்கிலாந்து தொடரிலும் ஒருவேளை இந்தியா பெரும் தோல்வியை சந்தித்தால், விராட் கோலியின் டெஸ்ட் கேப்டன் பதவிக்கு ஆபத்து வருமா? Split-Captaincy முறைக்கு வாய்ப்பிருக்கா?

பதில்: இப்போதைக்கு அதற்கு வாய்ப்பில்லை என்று நினைக்கிறன். இந்திய அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனல்ஸ் வரை வந்திருக்காங்க. ஆஸ்திரேலியா, சவுத் ஆப்ரிக்கா, இங்கிலாந்து அணிகளை தாண்டி இந்தியா ஃபைனல்ஸ் வந்திருக்கு என்றால், அது டாப் கிளாஸ் பெர்ஃபாமன்ஸ். ஸோ, வர்ற டி20 வேர்ல்டு கப் முடிஞ்ச பிறகு தான், கேப்டனை மாற்றலாமா, வேண்டாமா-ங்கிறதெல்லாம் யோசிப்பாங்க. அதைத் தான் Platform-மா எடுத்துக்க முடியும். டி20 கிரிக்கெட் வரை மிகப்பெரிய மாற்றத்தை பற்றி யோசிக்க மாட்டார்கள். நீங்க ஒரே கேப்டன் தலைமையில் விளையாடினால் தான் அணி ஒழுங்காக விளையாட முடியும். ஏன்னா.. ஒரு கேப்டன் இருந்தா, அவர் சிந்தனையில் தான் அணி செயல்படும். வெவ்வேறு கேப்டன் இருந்தால், வெவ்வேறு மோடுல டீம் இயங்குறது கஷ்டம்.

கேள்வி: ஆனா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியாவில் ஏற்கனவே இந்த 'Split Captaincy' சிஸ்டம் ஃபாலோ பன்றாங்க. அதை பின்பற்றி தானே, இங்கிலாந்து முதன்முறையா வேர்ல்டு கப் ஜெயிச்சிருக்காங்க?

நாம அடுத்தவங்கள எப்போதும் காப்பி அடிக்க கூடாது. எப்பவுமே நாம பேசுற விஷயம் என்னன்னா, அவன் அதை பன்றான், இவன் இதை பன்றான்-னு சொல்றது தான். இன்னும் இங்கிலாந்து சீரிஸ் இருக்கு, அடுத்து ஐபிஎல் இருக்கு, அதுக்கு அப்புறம் டி20 வேர்ல்டு கப் இருக்கு. இது எல்லாத்துலயும் தோற்றால் நாம யோசிக்கலாம். ஆனால், வேர்ல்டு கப் என்கிற மிகப்பெரிய தொடருக்கு முன்னாடி வேற எதுவும் பெருசில்ல. ஸோ, அதுவரைக்கும் அணியில் எந்த மாற்றமும் இருக்காது. விராட் கோலியின் கேப்டன்ஷிப்பை மாற்றுவது குறித்து டி20 உலகக் கோப்பைத் தொடர் வரை யோசிக்க வாய்ப்பே இல்லை. மாத்தவும் மாட்டாங்க" என்றார்.

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
sadagoppan ramesh on virat kohli captaincy wtc - விராட் கோலி
Story first published: Thursday, June 24, 2021, 15:02 [IST]
Other articles published on Jun 24, 2021
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X