For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ஏன் இந்த ஒருதலைபட்சம்... இந்திய அணி மீது சேவாக் பரபரப்பு குற்றச்சாட்டு...சர்ச்சையில் சிக்கிய கோலி!

புனே: இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் இந்திய அணி கேப்டன் விராட் கோலி ஒருதலைபட்சமாக செயல்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இங்கிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி 66 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்திய அணி வீரர்கள் ஆர்டர் சிறப்பாக இருந்தது.

3 குழந்தைகளுக்கு அம்மா... மாநில சாம்பியன்ஷிப்புல வெள்ளி பதக்கம்... கனவு நிறைவேறுமா? 3 குழந்தைகளுக்கு அம்மா... மாநில சாம்பியன்ஷிப்புல வெள்ளி பதக்கம்... கனவு நிறைவேறுமா?

இந்நிலையில் வீரர்கள் தேர்வில் கோலி ஒருதலைபட்சமாக செயல்படுவதாக முன்னாள் வீரர் சேவாக் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

முதல் போட்டி

முதல் போட்டி

இங்கிலாந்துக்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்று 3 போட்டிகள் கொண்ட தொடரில் 1 -0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இந்த போட்டியில் இந்திய அணி 317 ரன்களை பேட்டிங்கில் குவித்தது, அதே போல பவுலிங்கில் இங்கிலாந்து அணியை 251 ரன்களுக்குள் சுருட்டி இந்திய அணி வீரர்கள் சிறப்பாக செயல்பட்டனர்.

சஹால்

சஹால்

இந்நிலையில் நேற்றைய போட்டியில் இந்திய அணியில் யுஸ்வேந்திர சஹாலுக்கு வாய்ப்பு வழங்கப்படாதது குறித்து சேவாக் சரமாரி கேள்வி எழுப்பியுள்ளார். சஹால் நடந்து முடிந்த 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் முதல் 3 போட்டிகளில் பங்கேற்றார். ஆனால் அவர் பெரிய அளவில் சோபிக்கவில்லை. முதல் 2 டி20ல் 40க்கும் அதிகமான ரன்களும், 3வது போட்டியில் 30க்கும் அதிகமான ரன்களையும் விட்டுக்கொடுத்தார். 3 போட்டிகளிலும் தலா ஒரு விக்கெட்டை மட்டுமே எடுத்திருந்தார். இதனால் அவர் நேற்றைய முதல் ஒரு நாள் போட்டியில் வெளியில் அமரவைக்கப்பட்டார்.

ஒருதலைபட்சம்

ஒருதலைபட்சம்

இதுகுறித்து பேசிய சேவாக், பந்துவீச்சாளர் சஹால் 3 போட்டிகளில் சரியாக ஆடவில்லை என்பதால் அவரை கோலி உட்காரவைதார். ஆனால் டி20 தொடரில் தொடர்ந்து சொதப்பிய கே.எல்.ராகுலுக்கு மீண்டும் மீண்டும் வாய்ப்பு கொடுக்கிறார். ஏன் இந்த ஒருதலைபட்சம்?. இதுவே பந்துவீச்சில் பும்ரா இப்படி சரியாக செயல்படாமல் போயிருந்தால், அவருக்கு வாய்ப்பு வழங்காமல் இருந்திருப்பார்களா? அவர் சிறந்த பவுலர், நிச்சயம் கம்பேக் கொடுப்பார் எனக்கூறி விராட் கோலி வாய்ப்பு கொடுப்பார்.

 வாய்ப்பு தேவை

வாய்ப்பு தேவை

இங்கிலாந்து தொடரில் மிகவும் சிறப்பாக செயல்பட்டு வந்த ரிஷப் பண்ட்-க்கு பதிலாக ஒரு நாள் போட்டியில் கே.எல்.ராகுலுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. அதனை சரியாக பயன்படுத்திக்கொண்ட கே.எல்.ராகுல். 43 பந்துகளில் 62 ரன்கள் எடுத்து அணியின் வெற்றிக்கு உதவினார். அதே போல் சஹாலுக்கு பதிலாக களமிறங்கிய குல்தீப் யாதவ் 9 ஓவர்கள் வீசி 68 ரன்களை விட்டுக்கொடுத்தார். எனினும் ஒரு விக்கெட் கூட எடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. எனவே சஹாலுக்கும் ராகுலை போன்று மீண்டும் வாய்ப்பு கொடுக்கவேண்டும் என விமர்சனம் வலுத்துவருகிறது.

Story first published: Wednesday, March 24, 2021, 23:26 [IST]
Other articles published on Mar 24, 2021
English summary
Former Cricketer Sehwag accuses Team India for being partial in Team Players selection matters
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X