இது துரதிஷ்டவசமானது...இப்படி ஒரு ப்ளேயருக்கு வாய்ப்பு இல்லனுட்டிங்களே.ஆதங்கத்தில் இருக்கும் கம்பீர்

அகமதாபாத்: டெஸ்ட் போட்டியில் கலக்கிய அஸ்வினுக்கு ஒரு நாள் & டி20 அணியில் இடம் கிடைக்காதது குறித்து கம்பீர் காட்டமாக பதிலளித்துள்ளார்.

இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் போட்டியில் அஸ்வின் மிகச்சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

இங்கிலாந்து ஜெயிக்க இந்த 5 விஷயங்களை செஞ்சே ஆகனும்..குழப்பத்தில் ரூட்,டிப்ஸ் கொடுத்த மைக்கேல் வாகன்

இந்நிலையில் அவர் இங்கிலாந்துக்கான ஒரு நாள் மட்டும் டி20 போட்டிகளில் ஆட வாய்ப்பு வழங்கப்படவில்லை. இதற்கு முன்னாள் கிரிக்கெட் வீரர் கம்பீர் ஆதங்கம் தெரிவித்துள்ளார்.

அஸ்வின் அனுபவம்

அஸ்வின் அனுபவம்

இதுவரை 111 ஒருநாள் போட்டிகளில் பங்கேற்றுள்ள அஸ்வின் 150 விக்கெட்களும், 46 டி20களில் 52 விக்கெட்களையும் வீழ்த்தியுள்ளார். சமீபத்தில் நடைபெற்ற ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடர் மற்றும் இங்கிலாந்து டெஸ்ட் தொடரிலும் சேர்த்து 3 போட்டிகளில் 12 விக்கெட்களை எடுத்து அசத்தினார். இதில் ஒரு அரை சதமாகும்.

நீண்ட இடைவெளி

நீண்ட இடைவெளி

இந்திய அணி சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின், கடந்த 2017ம் ஆண்டுக்கு பிறகு டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே பங்கேற்று வருகிறார். ஒருநாள், டி20 போட்டிகளில் இடம் கிடைப்பதில்லை. இவருடன் இணைந்து ஆடி வந்த ரவீந்திர ஜடேஜாவுக்கு அவ்வப்போது வாய்ப்பு கிடைத்து வருகிறது. அந்தவகையில் இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 தொடரில் வாய்ப்பு வழங்கப்படவில்லை.

 கம்பீர்

கம்பீர்

இது குறித்து பேசியுள்ள கம்பீர், ரவிச்சந்திரன் வீரர் டெஸ்ட் தொடரில் 400 விக்கெட்டுகளை நெருங்கி வருகிறார். 5 சதங்கள் அடித்துள்ளார். இருந்த போதும் அவருக்கு ஒரு நாள் & டி20 போட்டிகளில் ஆட வாய்ப்பு வழங்காதது துரதிஷ்டவசமானது. அவர் ஒரு சிறந்த வீரர். அவரின் அனுபவம் இன்று வரை மிகப்பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என தெரிவித்துள்ளார்.

லோக்கல் ப்ளேயர்

லோக்கல் ப்ளேயர்

அஸ்வினை சேர்க்காதது குறித்து பேசியுள்ள அஷிஷ் நெஹ்ரா, அஸ்வின் உள்நாட்டு மைதானங்களில் மிகப்பெரும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியவர். அவரின் அனுபவம் அதற்கு சான்று. ஒவ்வொரு போட்டியில் ஏதேனும் ஒன்றை கற்றுக்கொள்வார். அவரின் உடற்தகுதி பிரச்னை உள்ளது. அதற்காக தீவிரமாக பயிற்சி மேற்கொண்டு சிறப்பாக செயல்படுவார் என்று தெரிவித்துள்ளார்.

புதிய வீரர்கள்

புதிய வீரர்கள்

குல்தீப் யாதவ், யுஷ்வேந்திர சாஹல் ஆகிய இருவரும் சுழற்பந்து வீச்சீல் சிறப்பாக ஆடி வருவதால் அஸ்வின், ஜடேஜா இருவரும் ஓரம் கட்டுப்பட்டதற்கு காரணமாகும். இந்திய அணியின் ஷார்ட் ஃபார்மட் போட்டிகளில் இவர்கள் இருவருக்கு மட்டுமே வாய்ப்புகள் வழங்கப்பட்டு வருகிறது.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
 
English summary
Gautam Gambhir's statement on Ashwin not being part of the White ball game
Story first published: Tuesday, February 23, 2021, 15:31 [IST]
Other articles published on Feb 23, 2021
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X