For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

எடுத்தவுடனே வெளிநாட்டுக்கு போகாதீங்கப்பா.. உள்ளூர் போட்டிகளுக்கு முக்கியத்துவம் கொடுங்க

மும்பை : கடந்த 70, 80 வருடங்களில் நாம் நினைத்துக்கூட பார்த்திராத வகையில் தற்போது சர்வதேச அளவில் அனைவரும் பாதிப்புக்குள்ளாகி உள்ளதாக இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார்.

Recommended Video

Why MS Dhoni has lot of haters in India

கிரிக்கெட் மீண்டும் விளையாடப்பட்டாலும், சகஜநிலைக்கு வீரர்கள் வருவது மிகவும் சவாலான விஷயம் என்றும் சாஸ்திரி குறிப்பிட்டுள்ளார்.

முதலில் உள்ளூர் போட்டிகளுக்கு முக்கியத்துவம் தந்து போட்டிகளை வடிவமைக்க வேண்டும் என்றும் பிறகு படிப்படியாக வெளிநாட்டு போட்டிகளை முடிவு செய்யலாம் என்றும் அவர் கூறியுள்ளார்.

மெசேஜ் அனுப்பிய ஏபி டிவில்லியர்ஸ்.. இன்ப அதிர்ச்சியில் ஆழ்ந்த புதுவை கிரிக்கெட் வீரர்!மெசேஜ் அனுப்பிய ஏபி டிவில்லியர்ஸ்.. இன்ப அதிர்ச்சியில் ஆழ்ந்த புதுவை கிரிக்கெட் வீரர்!

சர்வதேச அளவில் பாதிப்பு

சர்வதேச அளவில் பாதிப்பு

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக சர்வதேச அளவில் விளையாட்டு போட்டிகள் கடந்த 70, 80 ஆண்டுகளில் இல்லாதவகையில் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த பாதிப்பு நாம் நினைத்துக்கூட பார்த்திராத அளவில் உள்ளதாகவும் அனைவரையும் பாதிப்பிற்குள்ளாக்கியுள்ளதாகவும் இந்திய தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார்.

உள்நாட்டு போட்டிகள் குறித்து சாஸ்திரி

உள்நாட்டு போட்டிகள் குறித்து சாஸ்திரி

கொரோனாவில் இருந்து மீண்டு மீண்டும் கிரிக்கெட் போட்டிகளை விளையாடினாலும், முதல் கட்டமாக உள்ளூர் போட்டிகளில் கவனம் செலுத்த வேண்டும் என்றும் அதன்பின்பே வெளிநாட்டு போட்டிகளில் கவனம் செலுத்த வேண்டும் என்றும் ரவிசாஸ்திரி மேலும் குறிப்பிட்டுள்ளார். அனைத்து நாடுகளுமே மொத்தத்தில் பாதிப்பை சந்தித்துள்ள நிலையில், உள்ளூர் போட்டிகளில் முதலில் கவனம் செலுத்த வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.

மற்ற போட்டிகளுக்கும் பொருந்தும்

மற்ற போட்டிகளுக்கும் பொருந்தும்

தற்போதுள்ள சூழலில் கிரிக்கெட் போட்டிகள் மீண்டும் விளையாடப்பட்டாலும், தங்களை மீட்டுருவாக்கம் செய்துக் கொள்ள வீரர்களுக்கு போதிய கால அவகாசம் தேவைப்படும் என்றும் அவர் கூறியுள்ளார். அது எவ்வளவு பெரிய வீரரானாலும் இது மிகவும் சவாலான விஷயம் என்றும் அவர் தெரிவித்துள்ளார். கிரிக்கெட்டில் மட்டுமின்றி மற்ற போட்டிகளுக்கும் இது பொருந்தும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இருநாட்டு போட்டிகளுக்கு முக்கியத்துவம்

இருநாட்டு போட்டிகளுக்கு முக்கியத்துவம்

ஊரடங்கிற்கு பின்பு பிசிசிஐ உள்ளிட்ட உலகின் அனைத்து போர்டுகளும் உள்ளூர் போட்டிகளுக்கு முக்கியத்துவம் தர வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார். உள்ளூர் போட்டிகள் இயல்பு நிலைக்கு திரும்ப ஆவன செய்தபின்பு வெளிநாட்டு போட்டிகளில் கவனம் செலுத்தலாம். குறிப்பாக இருநாடுகள் பங்கேற்கும் போட்டிகளுக்கு முக்கியத்துவம் தரப்படலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

ஐபிஎல்லை கையாள்வது எளிது

ஐபிஎல்லை கையாள்வது எளிது

உள்ளூர் போட்டிகளிலும் முதலில் ஐபிஎல் போட்டிகளுக்கு முக்கியத்துவம் தரப்பட வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார். சர்வதேச போட்டிகளுக்கும் ஐபிஎல்லுக்கும் உள்ள வித்தியாசம், ஐபிஎல்லை இரு பகுதிகளில் நடத்தலாம். ஐபிஎல்லை கையாள்வதும் எளிது. இதேபோல தான் இரு நாடுகளுக்கு இடையில் நடத்தப்படும் போட்டிகளும் என்று ரவி சாஸ்திரி குறிப்பிட்டுள்ளார்.

தொடர் கண்காணிப்பில் வீரர்கள்

தொடர் கண்காணிப்பில் வீரர்கள்

முதலில் தனியாக வீரர்கள் பயிற்சி எடுக்கலாம். பின்பு, முகாம்கள் அமைத்து பயிற்சி அளிக்கப்படலாம். இவையெல்லாம் ஊரடங்கிற்கு பிறகு அரசு மற்றும் பிசிசிஐ அனுமதி பெற்று நடத்தப்பட வேண்டும் என்று ரவிசாஸ்திரி கூறியுள்ளார். தற்போது வீரர்கள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாகவும், அவர்கள் கொரோனாவை அடுத்து பயிற்சிகளில் பங்கேற்கும்போது இந்த தரவுகள் உபயோகப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Story first published: Friday, May 15, 2020, 13:51 [IST]
Other articles published on May 15, 2020
English summary
When cricket resumes, will be a Massive challenge for the Very Best of Players -Ravi Shastri
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X