For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

மழைக்கு இடையிலும் விட்டு வெளுத்த முரளி விஜய்.. அதிரடி சதம்

பெங்களூரு: பெங்களூரை குளிர வைத்து வரும் மழை டையில் இந்தியா - ஆப்கானிஸ்தான் டெஸ்ட் போட்டியின்யில், தமிழக வீரர் முரளி விஜய் சதம் அடித்துள்ளார்.

இந்திய ஆப்கானிஸ்தான் அணிகளுக்கிடையேயான ஒரே ஒரு டெஸ்ட் போட்டி பெங்களூருவில் நடைபெற்று வருகிறது. டாசில் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது.

IND VS AFG: Murali Viay hits century amidst Bengaluru rain

துவக்க ஆட்டக்காரர்களாக ஷிகர் தவான் மற்றும் முரளி விஜய் களமிறங்கினர். ஷிகர் தவான் தொடக்கம் முதலே மிகவும் அதிரடியாக விளையாடினர். அவர் 87 பந்துகளில் சதம் அடித்தார்.இதில் 18 பௌண்டரிகளும் , 3 சிக்ஸர்களும் அடங்கும். அவர் 107 ரன்களில் ஆட்டமிழந்தார்.

முரளி விஜய் சிறப்பாக விளையாடி 94 ரன்களில் இருக்கும்போது முதல் முறையாக மழை குறுக்கிட்டது. அப்போது ஆட்டம் சுமார் 1 மணிநேரம் தடைபட்டது. பின்னர் மீண்டும் ஆடத்தொடங்கிய போது மறுபடியும் மழை காரணமாக ஆட்டம் தடைபட்டது.

இந்த முறை விஜய் 99 ரன்களில் ஆட்டமிழக்காமல் இருந்தார். இதில் 14 பௌண்டரிகள் மற்றும் 1 சிக்ஸர் அடங்கும். மறுமுனையில் ராகுல் 44 ரன்கள் எடுத்து களத்தில் இருந்தார். அதன்பின் மழை பெய்து ஆட்டம் தடைபட்டது. மீண்டும் போட்டி தொடங்கிய பின் காத்திருக்காமல், சதம் அடித்தார்.

தற்போது 15 பவுண்டரி, 1 சிக்ஸ் என்ற 105 ரன்களுடன் விளையாடி வருகிறார்.கடந்த சில நாட்களாகவே பெங்களுருவில் அவ்வப்போது மழை பெய்து கொண்டுதான் இருக்கின்றது. இன்று ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியிலும் மழை வந்து நடனமாடி விட்டது.

Story first published: Thursday, June 14, 2018, 16:21 [IST]
Other articles published on Jun 14, 2018
English summary
IND VS AFG: Murali Viay hits century amidst Bengaluru rain
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X