நியூசிலாந்துக்கு எதிராக ஃபர்ஸ்ட் வெற்றி, பெஸ்ட் வெற்றி! முதல் டி20ல் பல சாதனைகள் படைப்பு

Posted By:

டெல்லி: இந்திய அணியும் அதன் வீரர்களும் நியூசிலாந்துக்கு எதிரான நேற்றைய முதல் டி20 போட்டியில் சில சாதனைகளை படைத்துள்ளார்.

டெல்லி பெரோசா கோட்லா மைதானத்தில் நேற்று இந்தியா-நியூசிலாந்து மோதிய இப்போட்டித்தொடரின் முதல் டி20 போட்டி நடைபெற்றது.

இந்த போட்டியில் முதலில் பேட் செய்த இந்திய அணி 202 ரன்களை குவித்து அசத்தியது. இரண்டாவது பேட் செய்த அணி இந்திய பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் சுருண்டது. இதனால் இந்திய அணி 53 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. டி20 போட்டியில் இந்த ரன் வித்தியாசம் என்பது மிகப்பெரியதாகும்.

புது சாதனை

புது சாதனை

இந்த பெரிய வெற்றியின் மூலம், இந்திய அணி ஒரு சாதனையையும் செய்துள்ளது. இதுவரை நியூசிலாந்துக்கு எதிராக டி20 போட்டியில் வென்றதேயில்லை என்ற மோசமான சாதனையை பெரிய ஒரு வெற்றியின் மூலம் தகர்த்து காட்டியுள்ளது விராட் கோஹ்லி படை.

முதலில் இருந்தே ஆதிக்கம்

முதலில் இருந்தே ஆதிக்கம்

2007 நடந்த டி20ல் நியூசிலாந்து 10 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 2009ல் நியூசிலாந்து 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 2009ல் மீண்டும் நியூசிலாந்து 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

நியூசிலாந்து வெற்றி

நியூசிலாந்து வெற்றி

2012ல் நியூசிலாந்து 1 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, இந்திய வெற்றி வாய்ப்பை பறித்தது. 2016ல் நியூசிலாந்து 47 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

திருப்பியடித்த இந்தியா

திருப்பியடித்த இந்தியா


இத்தனை தோல்விகளுக்கு பிறகு நேற்று இந்தியா தனது அபார ஆட்டத்தால் வெற்றிக் கனியை முதல் முறையாக சுவைத்துள்ளது.
நியூசிலாந்து அணி டி20ல் கலக்குவதால்தான் அது ரேங்கிலும் முதல் இடத்தில் உள்ளது.

Story first published: Thursday, November 2, 2017, 11:42 [IST]
Other articles published on Nov 2, 2017
POLLS

myKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற