For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

அம்பதி ராயுடு பந்து வீச்சில் சர்ச்சையா? வம்பை விலை கொடுத்து வாங்கும் கேப்டன் கோலி!

சிட்னி : இந்தியா - ஆஸ்திரேலியா இடையே ஆன முதல் ஒருநாள் போட்டியில் அம்பதி ராயுடு இரண்டு ஓவர்கள் பந்து வீசினார்.

அவரது பந்துவீச்சு முறை விதிகளுக்கு உட்பட்டு தான் இருந்ததா? என்ற சந்தேகம் கிளம்பியுள்ளது. கோலி பகுதி நேர பந்துவீச்சாளர் இல்லாமல் களம் இறங்கியதே இந்த பிரச்சனைக்கு முக்கிய காரணமாக அமைந்தது.

ஐந்து பந்துவீச்சாளர்கள்

ஐந்து பந்துவீச்சாளர்கள்

முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி ஷமி, புவனேஸ்வர் குமார், கலீல் அஹ்மது, ஜடேஜா, குல்தீப் யாதவ் என ஐந்து பந்துவீச்சாளர்களோடு களம் இறங்கியது. ஷமி 15வது ஓவரின் போது வலி ஏற்பட்டதால் களத்தில் இருந்து வெளியேறினார்.

அம்பதி ராயுடு பந்துவீச்சு

அம்பதி ராயுடு பந்துவீச்சு

ஷமி மீண்டும் களம் இறங்குவாரா என தெரியாத நிலையில் கோலி அம்பதி ராயுடுவை பந்து வீச களம் இறக்கினார். அம்பதி ராயுடு முத்தையா முரளிதரன் போல பந்து வீச முயன்றார். உடனடியாக அம்பதி ராயுடுவின் பந்து வீச்சு முறை சரியானது தானா? என சிலர் இணையத்தில் கேள்வி கேட்க துவங்கினர்.

மீண்டும் ஷமி

மீண்டும் ஷமி

அம்பதி ராயுடு இரண்டு ஓவர்கள் மட்டுமே வீசிய நிலையில், அதற்குள் ஷமி மீண்டும் களத்திற்குள் வந்தார். அதன் பின் கோலி, ராயுடுவை பந்து வீச அழைக்கவில்லை. எனினும், சிலர் அம்பதி ராயுடு பந்துவீச்சை சோதனைக்கு உள்ளாக்க வேண்டும் என கூறி வருகின்றனர்.

பகுதி நேர பந்துவீச்சாளர்கள்

பகுதி நேர பந்துவீச்சாளர்கள்

கேப்டன் கோலி அணித் தேர்வின் போது பகுதி நேர பந்துவீச்சாளர்களை தேர்வு செய்யாமல் தொடர்ந்து சிக்கலில் சிக்கி வருகிறார். இந்த போட்டியிலும் கேதார் ஜாதவை அணியில் சேர்க்கவில்லை. அவர் மட்டுமே பண்டியா அல்லாத ஆல்-ரவுண்டராக இருக்கிறார்.

சிக்கல் ஏற்படுமா?

சிக்கல் ஏற்படுமா?

ஷமி இல்லாத நிலையில் கோலி தானே பந்துவீசி இருக்கலாம். ஆனால், கடந்த மூன்றரை வருடங்களில் வெறும் ஒரு பந்து மட்டுமே வீசி இருந்த அம்பதி ராயுடுவிடம் பந்தை கொடுத்து சோதித்து சிக்கலில் மாட்ட வைத்துள்ளார் கோலி. அம்பதி ராயுடுவை சோதனைக்கு உள்ளாக்குவார்களா என பார்க்கலாம்

Story first published: Saturday, January 12, 2019, 18:54 [IST]
Other articles published on Jan 12, 2019
English summary
India vs Australia : Ambati Rayudu bowling action under scanner, after it looks suspicious.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X