For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

இந்திய அணித் தேர்வு எவ்வளவு லூசுத்தனமானது என்பதற்கு முரளி விஜய்யே சரியான உதாரணம்!

மும்பை: உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் முரளி விஜய்க்கு இடமில்லை. அவரை சேர்க்க மறுத்து விட்டது இந்திய அணித் தேர்வாளர் குழு. ஆனால் அவரோ டெஸ்ட் கிரிக்கெட்டில், ஆஸ்திரேலியாவில் வைத்து ஒரு புதிய சாதனை படைத்துள்ளார்.

இந்திய தொடக்க ஆட்டக்காரர் ஒருவர் ஆஸ்திரேலியாவில் அதிக அளவில் ரன் குவித்த சாதனை இதுவரை வீரேந்திர ஷேவாக்கிடம் இருந்து வந்தது. அதாவது அவர் 58 என்ற சராசரியுடன், 2003-04 தொடரில் 464 ரன்கள் குவித்ததே சாதனையாக இருந்து வந்தது. ஆனால் முரளி இதை அடித்து நொறுக்கியுள்ளார். அவர் 60.25 என்ற சராசரியுடன், 482 ரன்களைக் குவித்து சாதனை படைத்துள்ளார்.

அவருடைய அருமையான பேட்டிங்குக்கு சாட்சியமாக இது விளங்குகிறது. ஆனால் செமத்தியான பார்மில் இருக்கும் முரளி விஜய்க்கு உலகக் கோப்பைத் தொடரில் இடம் கொடுக்காமல் மறுத்துள்ளனர் தேர்வாளர்கள்.

அவரது சாதனையையும் முறியடித்தார்

அவரது சாதனையையும் முறியடித்தார்

முரளி விஜய் இதற்கு முன்பு 2012-13 ஆஸ்திரேலிய தொடரில் நான்கு டெஸ்ட் போட்டிகளில் 430 ரன்களைக் குவித்திருந்தார். இப்போது அந்த சாதனையையும் அவரே முறியடித்துள்ளார்.

அடுத்தடுத்து ரன் குவிப்பு

அடுத்தடுத்து ரன் குவிப்பு

ஆஸ்திரேலிய தொடரில் தொடர்ந்து ரன் குவித்து வந்தார் முரளி விஜய். கடைசி டெஸ்ட் போட்டியிலும் கூட 2வது இன்னிங்ஸில் பிரமாதமாக ஆடி 80 ரன்களை்க் குவித்தார். இது அவருக்கு டெஸ்ட் போட்டிகளில் 10 வது அரை சதமாகும். கடைசிப் போட்டியை இந்தியா கடுமையாக போராடி டிரா செய்தது. அதற்கு முரளியின் பேட்டிங்கும் உதவியது.

முதல் இந்தியர்

முதல் இந்தியர்

இந்தத் தொடரை ஆஸ்திரலியா 2-0 என்ற கணக்கில் வென்றது. இந்தத் தொடரில் ஐந்து இன்னிங்ஸ்களில் விஜய் 50 ரன்களுக்கு மேல் எடுத்து அப்படி செய்த முதல் இந்திய தொடக்க ஆட்டக்காரர் என்ற பெருமையையும் பெற்றார். இதில் ஒரு சதம், நான்கு அரை சதம் அடக்கமாகும்.

2வது இடத்தில் முரளி

2வது இடத்தில் முரளி

வெளிநாட்டில் நடந்த டெஸ்ட் போட்டியில் ஒரு தொடரில் அதிக ரன் குவித்த பெருமை தற்போது கவாஸ்கரிடம் உள்ளது. 1970-71ல் மேற்கு இந்தியத் தீவுகளுக்கு எதிராக நடந்த டெஸ்ட் தொடரில் அவர் 774 ரன்களைக் குவித்தார். அதேபோல 1979ம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிராக நடந்த டெஸ்ட் தொடரில் அவர் 542 ரன்களைக் குவித்தார். அவருக்கு அடுத்து அதிக ரன் குவித்த வீரராக தற்போது முரளி விஜய் உருவெடுத்துள்ளார்.

இங்கிலாந்திலும் பட்டையைக் கிளப்பியவர் முரளி

இங்கிலாந்திலும் பட்டையைக் கிளப்பியவர் முரளி

ஆஸ்திரேலியாவில் மட்டுமல்ல இங்கிலாந்திலும் கூட பட்டையைக் கிளப்பியவர் முரளி விஜய். கடந்த ஆண்டு நடந்த டெஸ்ட் தொடரின்போது அவர் நாட்டிங்காமில் 146 ரன்களும், லார்ட்ஸில் 95 ரன்களும் எடுத்து அசத்தியிருந்தார். அப்போது நடந்த ஐந்து டெஸ்ட் தொடரில் அவர் மொத்தமாக 402 ரன்களைக் குவித்திருந்தார். இதில் ஒரு சதம் மற்றும் 2 அரை சதம் அடங்கும்.

இவரைப் போய் வேணாம்னு சொல்லிட்டாங்களே

இவரைப் போய் வேணாம்னு சொல்லிட்டாங்களே

எப்போதுமே ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ஆஸ்திரேலியாவில் சிறப்பாக விளையாடக் கூடியவர் முரளி விஜய். ஸ்டைலிஷான தொடக்க ஆட்டக்காரரம் கூட. அவரை ஏன் தேர்வாளர்கள் நிராகரித்தனர் என்பதுதான் புரியவில்லை.

விராத் கோஹ்லியின் சாதனை

விராத் கோஹ்லியின் சாதனை

மறுபக்கம் கேப்டன் விராத் கோஹ்லி ஆஸ்திரேலியாவில் எட்டு டெஸ்ட் போட்டிகளில் 992 ரன்களைக் குவித்துள்ளார். இதில் ஐந்து சதம், 2 அரை சதம் அடக்கம்.

Story first published: Sunday, January 11, 2015, 11:06 [IST]
Other articles published on Jan 11, 2015
English summary
India opener Murali Vijay proved his class with yet another splendid performance in a four-match Test series on foreign soil, amassing 482 runs in Australia. Vijay's aggregate is a record by an Indian opener in a Test series in Australia, bettering Virender Sehwag's 464 at an average of 58.00 in the four Tests in 2003-04.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X