நியூசி. டி20 தொடரில் பண்டியா பிரதர்ஸ்-இன் கனவு நிறைவேறுமா? கேப்டன் ரோஹித் மனசு வைச்சா நடக்கும்

நியூசி. டி20 தொடரில் பண்டியா பிரதர்ஸ்- இன் கனவு நிறைவேறியது- வீடியோ

வெல்லிங்டன் : இந்திய அணியில் பண்டியா சகோதரர்கள் முதன் முறையாக இணைந்து ஆடும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

ஹர்திக் பண்டியா மற்றும் க்ருனால் பண்டியா இருவருமே இந்திய அணிக்காக ஆடி உள்ளனர். எனினும், இவர்கள் இருவரும் இணைந்து ஒரே போட்டியில் இந்திய அணிக்காக ஆடியதில்லை. அந்த நிகழ்வு நியூசிலாந்து டி20 தொடரில் நடக்குமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

ஐபிஎல்-இல் பண்டியா சகோதரர்கள்

ஐபிஎல்-இல் பண்டியா சகோதரர்கள்

ஐபிஎல் தொடரில் சில ஆண்டுகளாக ஹர்திக் பண்டியா - க்ருனால் பண்டியா சகோதரர்கள் கலக்கி வந்தனர். ஹர்திக் வேகப் பந்துவீச்சு ஆல்-ரவுண்டராகவும், க்ருனால் பண்டியா சுழற் பந்துவீச்சு ஆல்-ரவுண்டராகவும் இருந்தனர். மும்பை இந்தியன்ஸ் அணிக்காக ஆடிய இரு சகோதரர்களும் அந்த அணியின் முக்கிய ஆல்-ரவுண்டர்களாக விளங்கினர்.

இந்திய அணியில் ஹர்திக்

இந்திய அணியில் ஹர்திக்

2016இல் இந்திய அணிக்கு வேகப் பந்துவீச்சு ஆல்-ரவுண்டர் தேவை என்ற நிலை வந்த போது ஹர்திக் பண்டியா அந்த வாய்ப்பை கெட்டியாக பிடித்துக் கொண்டு அணியின் முக்கிய வீரர்களில் ஒருவராக மாறி விட்டார்.

க்ருனால் பண்டியா வாய்ப்பு

க்ருனால் பண்டியா வாய்ப்பு

க்ருனால் பண்டியா கடந்த ஆண்டு வெஸ்ட் இண்டீஸ் டி20 தொடரில் வாய்ப்பு பெற்று இந்திய அணியில் இணைந்தார். தொடர்ந்து ஆஸ்திரேலிய டி20 தொடரிலும் சிறப்பாக ஆடினார். தற்போது நியூசிலாந்து தொடரிலும் வாய்ப்பு பெற்றுள்ளார்.

சர்ச்சையில் சிக்கிய ஹர்திக் பண்டியா

சர்ச்சையில் சிக்கிய ஹர்திக் பண்டியா

நியூசிலாந்து டி20 தொடரில் ஹர்திக், க்ருனால் இருவரது பெயர்களும் இடம் பெற்று இருந்தாலும், ஆஸ்திரேலிய ஒருநாள் தொடருக்கு முன் ஹர்திக் பண்டியா பெண்கள் குறித்து தரக்குறைவாக பேசியதாக எழுந்த சர்ச்சையில் தற்காலிக இடை நீக்கம் செய்யப்பட்டு இருந்தார்.

நியூசி. தொடரில் இணையும் வாய்ப்பு

நியூசி. தொடரில் இணையும் வாய்ப்பு

பின்னர் அந்த இடை நீக்கத்தில் இருந்து தப்பித்த ஹர்திக் பண்டியா, நியூசிலாந்து ஒருநாள் தொடரில் பாதியில் இணைந்தார். தொடர்ந்து டி20 தொடரில் பங்கேற்க உள்ளார். பண்டியா சகோதரர்கள் இந்திய அணிக்காக சேர்ந்து ஆடுவது தங்கள் கனவு என முன்பு கூறியுள்ள நிலையில், அவர்கள் இருவரும் ஒரே போட்டியில் இணைந்து ஆடுவார்களா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்த தொடரின் கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி மனது வைத்தால் இது சாத்தியம் ஆகும்.

ரிஷப் பண்ட் வாய்ப்பு

ரிஷப் பண்ட் வாய்ப்பு

க்ருனால் பண்டியா தவிர்த்து, டி20 தொடருக்காக ரிஷப் பண்ட்டும் நியூசிலாந்து சென்றுள்ளார். உலகக்கோப்பை அணியில் ரிஷப் பண்ட் இடம் பிடிக்க இந்த டி20 தொடரை பயன்படுத்திக் கொள்வாரா என்ற எதிர்பார்ப்பு நிலவி வருவது குறிப்பிடத்தக்கது.

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
India vs Newzealand : Pandya brothers to play together in Indian team, in the NewZealand T20 series.
Story first published: Tuesday, February 5, 2019, 16:24 [IST]
Other articles published on Feb 5, 2019
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X