பெண்கள் விஷயத்தில் மோசம்.. வரிசையாக புகாரில் சிக்கிய மூன்று இந்திய கிரிக்கெட் வீரர்கள்!

Posted By:
அடுத்தடுத்து இந்திய வீரர்கள் பெண்கள் சம்பந்தப்பட்ட புகாரில் சிக்கியுள்ளனர்

டெல்லி: இந்த வருடத்தில் முதல் மூன்று மாதங்களிலேயே மூன்று இந்திய வீரர்கள் சர்ச்சையில் சிக்கி இருக்கிறார்கள். மூன்றுமே பெண்கள் தொடர்பான சர்ச்சைகள் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது முகமது ஷமி சர்ச்சையில் இருக்கிறார். இதற்கு முன் குல்தீவ் யாதவ் சர்ச்சையில் சிக்கினார்.

ஒரு மாதம் முன்பு சாஹல் சர்ச்சையில் சிக்கி இணையத்தில் வைரல் ஆனார் என்பது குறிப்பிடத்தக்கது. இது இந்திய கிரிக்கெட் உலகில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

சாஹல் சர்ச்சை

சாஹல் சில வருடங்களுக்கு முன் டிவிட்டரில் எல்லா தெரியாத பெண்களிடமும் கமெண்ட் பாக்சில் பேசி இருக்கிறார். உங்களுக்கு மெசேஜ் செய்து இருக்கிறேன் பாருங்கள், பாருங்கள் என்று ஒருத்தர் விடாமல் பேசியுள்ளார். இந்திய அணியில் சேருவதற்கு சில நாட்கள் முன்பு கூட இப்படி நடந்தது. இது சர்ச்சையானது. இது குறித்த ஸ்கிரீன்ஷாட் வெளியாகி இருக்கிறது.

குல்தீப் யாதவ்

குல்தீப் யாதவின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பெண்களின் படங்கள் வெளியிடப்பட்டு இருக்கிறது. இரண்டு அந்தரங்கமான படங்கள் அதில் வெளியாகி இருந்தது. உடனே அவரது கணக்கு மீண்டும் மீட்கப்பட்டது. அவர் அந்த புகைப்படத்தை இன்ஸ்டாவில் இருந்தும் நீக்கி இருக்கிறார். இதில் பெண்கள் மிகவும் மோசமான நிலையில் இருந்தார்கள். இவர் மன்னிப்பும் கேட்டார்.

தற்போது ஷமி

தற்போது ஷமி

தற்போது ஷமி இந்த குற்றச்சாட்டில் சிக்கி இருக்கிறார். அவர் நிறைய பெண்களுடன் தொடர்பில் இருந்ததை அவர் மனைவியே ஒப்புக் கொண்டுள்ளார். மேலும் தன்னை கொல்ல முயற்சி செய்ததாகவும் புகார் அளித்துள்ளார்.

பிசிசிஐ அமைதி

பிசிசிஐ அமைதி

ஆனால் இந்த விஷயத்தில் பிசிசிஐ மிகவும் அமைதியாக இருக்கிறது. இந்திய வீரர்கள் பலருக்கு பெண்கள், தரகர்கள் மூலம் அனுப்பப்படுவதாகவும் புகார் வந்துள்ளது. ஆனாலும் பிசிசிஐ அமைப்பு இதில் எந்த நடவடிக்கையும் இதுவரை எடுக்கவில்லை.

Story first published: Wednesday, March 7, 2018, 17:47 [IST]
Other articles published on Mar 7, 2018

myKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற