"ராகுலுக்கு நோ.. சுப்மன் கில்லுக்கு யெஸ்" இந்திய அணியில் வாய்ப்பளியுங்கள்.. முன்னாள் வீரர் கருத்து!

டெல்லி: இந்திய இளம் வீரர் சுப்மன் கில் பேட்டிங்கில் கொஞ்சம் கூட பயம் தெரியவில்லை என்றும், அவருக்கு தொடர்ந்து வாய்ப்பளிக்க வேண்டும் என்று முன்னாள் வீரர் மனிந்தர் சிங் தெரிவித்துள்ளார்.

டி20 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி அரையிறுதியோடு வெளியேறியது ரசிகர்களிடையே ஆறாதவடுவாக உள்ளது. இதற்கு டாப் ஆர்டர் வீரர்கள் சுயநலமாக விளையாடியதே இந்திய அணி தோல்வியடைந்த காரணமாக பார்க்கப்படுகிறது.

குறிப்பாக கேஎல் ராகுல் விக்கெட் கொடுத்துவிடுவோமோ என்ற அச்சத்தில் ஆடியதாக ரசிகர்கள் விமர்சித்து வருகின்றன. இதனால் கேஎல் ராகுலுக்கு பதில் மாற்று வீரரை இந்திய அணிக்கு விளையாட தேர்வு செய்ய வேண்டும் என்று ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர்.

இந்திய அணியின் தலையெழுத்தை மாற்றப்போகும் 3 பேர்.. பிசிசிஐ நியமித்த புதிய கமிட்டி.. அவர்கள் பணி என்ன?இந்திய அணியின் தலையெழுத்தை மாற்றப்போகும் 3 பேர்.. பிசிசிஐ நியமித்த புதிய கமிட்டி.. அவர்கள் பணி என்ன?

கேஎல் ராகுல் மீது விமர்சனம்

கேஎல் ராகுல் மீது விமர்சனம்

ஐபிஎல் தொடர் முடிவுக்கு வந்த பின் கேஎல் ராகுல் காயமடைந்தார். முக்கிய தொடர்களான தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு எதிரான தொடர்களில் காயம் காரணமாக பங்கேற்கவில்லை. கடைசியாக ஜிம்பாப்வே அணிக்கு எதிரான தொடரில் கேஎல் ராகுல் கம்பேக் கொடுத்தார். இதனைத் தொடர்ந்து டி20 உலகக்கோப்பைக்கு ஃபார்மில்லாமல் இருந்தாலும், கேஎல் ராகுல் தேர்வு செய்யப்பட்டார்.

அச்சம்

அச்சம்

ஆனால் டி20 உலகக்கோப்பையில் கேஎல் ராகுலின் ஆட்டம் அச்சுறுத்தல் கொடுக்கும் அளவிற்கு இல்லை. இந்த நிலையில் மீண்டும் வங்கதேச அணிக்கு எதிரான கிரிக்கெட் தொடரில் கேஎல் ராகுல் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதுகுறித்து இந்திய முன்னாள் வீரர் மனிந்தர் சிங் கூறுகையில், இந்திய தொடக்க வீரர் கேஎல் ராகுல் அச்சமின்றி ஒவ்வொரு போட்டியிலும் விளையாட வேண்டும். கேஎல் ராகுலில் மிகச்சிறந்த திறமையான வீரர்.

கேஎல் ராகுல் நீக்கம்?

கேஎல் ராகுல் நீக்கம்?

ஆனால் முதல் சில ஓவர்களில் பந்துகளை தேவையின்றி ஆடாமல் இருப்பது பிரச்சினையை ஏற்படுத்தி வருகிறது. இதனால் இந்திய அணியின் துணை கேப்டனாகவே இருந்தாலும், வரும் காலங்களில் அவர் சரியாக விளையாடவில்லை என்றால் அணியில் இருந்து நீக்கப்படலாம். இதனால் அச்சமில்லாமல் ஆட ராகுல் முன்வர வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார்.

சுப்மன் கில்லுக்கு வாய்ப்பு

சுப்மன் கில்லுக்கு வாய்ப்பு

அதேபோல், ஒருநாள் போட்டிகளில் இந்திய வீரர் சுப்மன் கில்லுக்கு அனைத்து போட்டிகளிலும் வாய்ப்பு வழங்க வேண்டும். டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட்டில் சுப்மன் கில்லுக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும். ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட்டில் சுப்மன் கில் தொடக்க வீரராகவும், டெஸ்ட் கிரிக்கெட்டில் மிடில் ஆர்டரிலும் களமிறக்கப்பட வேண்டும். அவரது பேட்டிங்கில் கொஞ்சம் கூட பயம் தெரியவில்லை என்று பாராட்டியுள்ளார்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
Former player Maninder Singh has said that young Indian player Subman Gill has no fear in batting and should continue to give him opportunities
Story first published: Thursday, December 1, 2022, 21:40 [IST]
Other articles published on Dec 1, 2022
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X