கேப்டனுடன் மோதும் ரிஷப் பண்ட்..கே.எல்.ராகுலுக்கான பொறுப்பு பறிப்பு..டி20 அணியில் சுவாரஸ்ய மாற்றங்கள்

சென்னை: இங்கிலாந்து எதிரான டி20 தொடருக்கு அறிவிக்கப்பட்டுள்ள இந்திய அணியில் பல சுவாரஸ்ய மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன.

இந்தியா - இங்கிலாந்துக்கு இடையே டெஸ்ட் தொடரை அடுத்து வரும் மார்ச் 14ம் தேதி முதல் டி20 தொடர் நடைபெறவுள்ளது. இதற்கான இந்திய அணி நேற்று வெளியிடப்பட்டது.

6 ரன்கள்தான்... பெவிலியனுக்கு திரும்பிய கேப்டன்... அறிமுக போட்டியில் அக்சர் அபாரம்!

இந்திய அணியில் பல இளம் வீரர்களுக்கு வாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ளது. இந்த திடீர் மாற்றங்களால் டி20 தொடரில் எதிரொலிக்கவுள்ள சுவாரஸ்ய தகவல்களை பார்க்கலாம்.

இனி கே.எல்.ராகுல் இல்லை

இனி கே.எல்.ராகுல் இல்லை

சமீப காலங்களாக டி20 போட்டிகளில் கே.எல்.ராகுல் விக்கெட் கீப்பிங் செய்து வருகிறார். ஆனால் இங்கிலாந்து தொடரில் விக்கெட் கீப்பர் பொறுப்பில் இருந்து ராகுல் நீக்கப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக ரிஷப் மற்றும் இஷான் கிஷானுக்கு விக்கெட் கீப்பிங் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.

ரிஷப் பண்ட்

ரிஷப் பண்ட்

ரிஷப் பண்ட் கடந்த 2017ம் ஆண்டு முதல் இந்திய அணியில் ஆடி வருகிறார். இதுவரை அவர் 16 ஒருநாள் மற்றும் 28 டி20 போட்டிகளில் ஆடியுள்ளார். இருப்பினும் அவர் மீது விக்கெட் கீப்பிங் குற்றச்சாட்டு உள்ளது. ஆனால் அதற்கு இங்கிலாந்து தொடரில் முற்றுப்புள்ளி வைத்தார். இதனால் அவருக்கு இந்த முறை வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

யாருக்கு வாய்ப்பு?

யாருக்கு வாய்ப்பு?

19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக்கோப்பையில் இஷன் கிஷான் கேப்டனாக இருந்தார். துணை கேப்டனாக ரிஷப் பண்ட் செயல்பட்டிருந்தார். ரிஷப் 4 ஆண்டுகளுக்கு முன்பே இந்திய அணிக்கு தேர்வானலும் இஷன் கிஷானுக்கு தற்போதுதான் வாய்ப்பு கிடைத்துள்ளது. இதனால் இங்கிலாந்து டி20 தொடரில் யாருக்கு விக்கெட் கீப்பர் பதவி கிடைக்கப்போகிறது என எதிர்ப்பார்ப்பு எழுந்துள்ளது.

 காயம்

காயம்

இந்திய அணியின் மூத்த வீரர்களான ரவீந்திர ஜடேஜா, முகமது ஷமி, மயங்க் அகர்வால் ஆகியோர் உடற்தகுதி நிரூபிக்காததால் டி20 அணியில் இடம் பெறவில்லை. இதனால் இளம் படையுடன் இந்திய அணி களமிறங்குகிறது.

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
 
English summary
Interesting Talking points you need to know from India's T20I squad against England
Story first published: Sunday, February 21, 2021, 16:47 [IST]
Other articles published on Feb 21, 2021
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X