For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ஐபிஎல் 2022: ரன் ரேட் முறை என்றால் என்ன? எப்படி கணக்கிடப்படுகிறது?.. எளிய விளக்கம் இதோ!

மும்பை: ஐபிஎல் தொடரில் நெட் ரன் ரேட் என்ற விதிமுறை தற்போது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

ஐபிஎல் 15வது சீசன் போட்டிகள் கடந்த மார்ச் 26ம் தேதி தொடங்கி தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.

அனைத்து அணிகளும் தங்களது கடைசி ரவுண்ட் ஆட்டத்தை விளையாடி வரும் சூழலில் ப்ளே ஆஃப் ரேஸ் சூடுபிடித்துள்ளது.

2வது முறையாகவா??.. செஸ் உலகமே வியந்த போட்டி.. உலகின் நம்.1 வீரர் கார்ல்சனை அலறவிட்ட பிரக்ஞானந்தா!2வது முறையாகவா??.. செஸ் உலகமே வியந்த போட்டி.. உலகின் நம்.1 வீரர் கார்ல்சனை அலறவிட்ட பிரக்ஞானந்தா!

ப்ளே ஆஃப் சுற்று

ப்ளே ஆஃப் சுற்று

ஹர்திக் பாண்ட்யா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணி 20 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் முதலிடத்தை பிடித்துள்ளது. ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் லக்னோ அணிகள் 18 புள்ளிகளுடன் ப்ளே ஆஃப் சுற்றை உறுதி செய்துள்ளது. ஆனால் ரன் ரேட் அடிப்படையில் ராஜஸ்தான் 2வது இடமும், லக்னோ 3வது இடத்தையும் பிடித்துள்ளது.

ஆர்சிபி குழப்பம்

ஆர்சிபி குழப்பம்

இதே போல 4வது இடத்திற்கான போட்டியும் ரன் ரேட் அடிப்படையில் வர அதிக வாய்ப்புள்ளது. ஆர்சிபி அணி 16 புள்ளிகளுடன் 4வது இடத்தில் உள்ளது. டெல்லி அணி தற்போது 14 புள்ளிகளுடன் உள்ளது. மீதமுள்ள ஒருபோட்டியிலும் வெற்றி பெற்றுவிட்டால் 16 புள்ளிகளை பெற்றுவிடும். அதன்பின்னர் ரன்ரேட் அடிப்படையில் உள்ளே நுழைந்துவிடும்.

ரன்ரேட் விளக்கம்

ரன்ரேட் விளக்கம்

இந்நிலையில் ரன் ரேட் என்றால் எப்படி கணக்கிடப்படுகிறது என்ற குழப்பம் ரசிகர்களிடையே எழுந்துள்ளது. நெட் ரன் ரேட் என்பது ( Total runs scored ÷ Total overs faced) - (Total runs conceded ÷ Total overs bowled) என்ற ஃபார்முலா தான். அதாவது முதலில் ஒரு அணி குவிக்கப்பட்ட ஸ்கோரை, எத்தனை ஓவர்களில் அதனை அடித்தனர் என்பதால் வகுக்கப்பட வேண்டும். பின்னர் எவ்வளவு ஸ்கோரை கட்டுப்படுத்தினர் என்பதனை எத்தனை ஓவர்களில் அதனை கட்டுப்படுத்தினர் என்பதுடன் வகுக்க வேண்டும். இந்த இரண்டிலும் வரும் விடைகளை கழித்தால் நெட் ரன் ரேட் என்பது கிடைத்துவிடும்.

உதராணம்

உதராணம்

உதாரணத்திற்கு ஆர்சிபி அணியை எடுத்துக்கொள்ளலாம். ஆர்சிபி அணி தற்போது -0.253 என்ற ரன்ரேட்டை வைத்துள்ளது. அதுவே டெல்லி அணி + 0.255 என்ற ரன்ரேட்டை வைத்துள்ளது. ஏற்கனவே ரன்ரேட் அதிகமாக உள்ள டெல்லி இன்னொரு வெற்றியை பதிவு செய்தால் எந்தவித தடையும் இன்றி ப்ளே ஆஃப் சென்றுவிடும்.

Story first published: Saturday, May 21, 2022, 15:21 [IST]
Other articles published on May 21, 2022
English summary
IPL 2022: RCB, DC focus on Net run rate to enter playoffs, Whats is run rate, How is it calculated?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X