For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

வீடியோ - சச்சின் மகனா இது..? பயிற்சியில் அசத்தும் அர்ஜூன் டெண்டுல்கர்.. சிஎஸ்கேக்கு எதிராக வாய்ப்பு?

மும்பை: ஐபிஎல் தொடரில் மும்பை அணியால் தேர்ந்து எடுக்கப்பட்டு உள்ள சச்சின் மகன் அர்ஜூன் டெண்டுல்கர் , இன்று சிஎஸ்கேக்கு எதிரான ஆட்டத்தில் களமிறங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Recommended Video

வீடியோ - சச்சின் மகனா இது..? பயிற்சியில் அசத்தும் அர்ஜூன் டெண்டுல்கர்.. சிஎஸ்கேக்கு எதிராக வாய்ப்பு?

2021ஆம் ஆண்டு அர்ஜூன் டெண்டுல்கரை 20 லட்சத்துக்கு எடுத்த மும்பை அணி, மெகா ஏலத்தில் 30 லட்சம் ரூபாய்க்கு ஏலத்தில் தேர்வு செய்தது.

3 பந்துகளில் 2 விக்கெட்.. நடராஜன் தாருமாறு..வேகத்தால் மிரட்டிய உம்ரான்.. இறுதியில் ரஸில் பட்டாசு3 பந்துகளில் 2 விக்கெட்.. நடராஜன் தாருமாறு..வேகத்தால் மிரட்டிய உம்ரான்.. இறுதியில் ரஸில் பட்டாசு

சச்சின் டெண்டுல்கரின் மகன் என்பதால் தான், அவருக்கு மும்பை அணியில் இடம் கிடைத்ததாக ரசிகர்கள் சிலர் விமர்சித்தனர்.

பதிலடி

பதிலடி

ஆனால், இதற்கு எல்லாம் பதிலடி தரும் வகையில் அர்ஜூன் டெண்டுல்கர் தற்போது பயிற்சியில் அதிரடி காட்டி வருகிறார். அர்ஜூன் டெண்டுல்கர் தனது தந்தை சச்சின் மாதிரி இல்லாமல் நன்கு மாறுபட்டவர். சச்சின் சராசரி உயரம் தான், ஆனால் அர்ஜூன் 6 அடி உயரம். சச்சின் பேட்ஸ்மேன் மற்றும் சுழற்பந்துவீச்சு கொஞ்சம் தெரியும்.

சச்சினை விட மாறுபட்டவர்

சச்சினை விட மாறுபட்டவர்

ஆனால் அர்ஜூன், ஒரு வேகப்பந்து ஆல்ரவுண்டர். சச்சினுக்கும், அர்ஜூனுக்கும் உள்ள முக்கிய வித்தியாசமே, சச்சின் கிரிக்கெட்டில் வலது கை பேட்ஸ்மேன். ஆனால் இவர் இடதுகை பேட்ஸ்மேன் மற்றும் பவுலர். சச்சின் மகன் என்பதால் இவருக்கு சும்மா தூக்கி இந்தா டீம்க்கு வாங்க என்று வாய்ப்பு தரப்படவில்லை. மற்ற வீரர்கள் மாதிரி, வியர்வையும், ரத்தமும் சிந்தியே பயிற்சி எடுத்து, தனது திறமையை நிரூபித்து தான் அணிக்குள் வந்துள்ளார்.

சச்சினால் கிடைத்த பிளஸ்

சச்சினால் கிடைத்த பிளஸ்

ஆனால் ஒரே ஒரு வித்தியாசம் தான். நடுத்தர குடும்பத்தில் உள்ள இளைஞர்களுக்கு பயிற்சி செய்யவும், தங்களது திறமையை வளர்த்து கொள்ளவும் வாய்ப்பும், சூழலும் இருக்காது. ஆனால் அர்ஜுனுக்கு உலகின் தலைச் சிறந்த வீரர்களிடம் பயிற்சி பெறும் வாய்ப்பும், சூழலும் கிடைத்தது. இந்த வாய்ப்பும், சூழலும் தான் ஒருவரை வெற்றியாளராக நிர்ணயிக்கிறது. இதனை உடைத்து தோனி. கோலி மாதிரி வரும் வீரர்கள் ஹீரோவாக கொண்டாடப்படுகிறார்கள்.

கிளின் போல்ட்

கிளின் போல்ட்

சரி, அது இருக்கட்டும். சச்சினுடன் நிழலில் தாம் இருக்க கூடாது என்ற உத்வேகத்தில் தற்போது கடும் பயிற்சியில் ஈடுபட்டு தனது திறமையை வளர்த்து கொண்டுள்ளார். நேற்று நடைபெற்ற வலைப் பயிற்சியின் போது அர்ஜூன் டெண்டுல்கர் வீசிய யாக்கரில் இஷான் கிஷன் கிளின் போல்ட் ஆனார். இந்த வீடியோவை பார்த்து சச்சின் மகனா இது என்று ரசிகர்கள் ஆர்வத்துடன் கண்டு களித்து வருகின்றனர். இதனால் சிஎஸ்கே போட்டியில் சச்சின் மகன் இன்று களமிறங்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

Story first published: Thursday, April 21, 2022, 19:05 [IST]
Other articles published on Apr 21, 2022
English summary
IPL 2022 – Watch video -Sachin Son Arjun Tendulkar Brilliant Yorker to Ishan வீடியோ - சச்சின் மகனா இது..? பயிற்சியில் அசத்தும் அர்ஜூன் டெண்டுல்கர்.. சிஎஸ்கேக்கு எதிராக வாய்ப்பு?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X