For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

இண்டர்வியூவா அது..! வேணும்னே தோக்கடிச்சிட்டாங்க..!! அந்த விஷயம் இல்லன்னா நான்தான் பீல்டிங் கோச்..!

கேப் டவுன்: இந்திய கிரிக்கெட் சிஸ்டம் பற்றி தெரிந்தும், எனக்கு நேர்காணல் ஒழுங்காக அமையவில்லை, தோற்றுவிட்டேன் என்று ஜான்டி ரோட்ஸ் மவுனம் கலைத்துள்ளார்.

இந்திய அணியின் தலைமை பயிற்சியாளரை கபில் தேவ் தலைமையிலான கிரிக்கெட் ஆலோசனைக்குழு தேர்வு செய்தது. தலைமை பயிற்சியாளராக ரவி சாஸ்திரியே மீண்டும் நியமிக்கப்பட்டார். பேட்டிங், பவுலிங், பீல்டிங் பயிற்சியாளர்களை தேர்வுக்குழு நேர்காணல் நடத்தி தேர்வு செய்தது.

பேட்டிங் பயிற்சியாளராக விக்ரம் ரத்தோர் தேர்வு செய்யப்பட்டார். பவுலிங், பீல்டிங் பயிற்சியாளர்கள் மாற்றப்படவில்லை. பீல்டிங் பயிற்சியாளர் பதவிக்கு ஜாம்பவான் ஜான்டி ரோட்ஸ் விண்ணப்பித்திருந்தார். ஸ்ரீதர் இந்தியாவின் பீல்டிங் பயிற்சியாளராக சிறப்பாக செயல்பட்டுள்ளார் என்பதால், அவரே மீண்டும் தொடர்வார் என எதிர்பார்க்கப்பட, கடைசியில் அதுதான் நடந்தது.

இந்த தம்பிங்க சூப்பர்..! சும்மா கலக்குறாங்க...! அடுத்த போட்டியிலும் இவங்க தான் ஓப்பனர்ஸ்..! இந்த தம்பிங்க சூப்பர்..! சும்மா கலக்குறாங்க...! அடுத்த போட்டியிலும் இவங்க தான் ஓப்பனர்ஸ்..!

நேர்காணல் இல்லை

நேர்காணல் இல்லை

இந்நிலையில், தான் தேர்வு செய்யப்படாதது குறித்து ஜான்டி ரோட்ஸ் கூறியதாவது: எனது நேர்காணல் நன்றாக இல்லை. ஸ்ரீதர் அளவுக்கு சிறப்பாக அமையவில்லை என்பது எனக்கே தெரியும். ஏனெனில் அவர் 2 ஆண்டுகளாக இந்திய வீரர்களுடன் களத்தில் இருந்திருக்கிறார்.

காரணம் என்ன?

காரணம் என்ன?

அணியின் பீல்டிங் தரம் உயர்ந்ததன் மூலம் காணலாம். திட்டமிடல், சரியான பயிற்சி ஆகியவையே இதற்கு காரணம். அது எதுவும் உடனடியாக நடந்து விட்டது அல்ல. எனவே நேர்காணலில் ஸ்ரீதர் என்னை பின்னுக்குத்தள்ளிவிட்டார்.

சிஸ்டம் தெரியும்

சிஸ்டம் தெரியும்

ஆனால் நான் தென் ஆப்ரிக்காவைவிட, ஒரு பயிற்சியாளராக இந்தியாவில் தான் அதிகம் பணியாற்றியிருக்கிறேன். 2007ம் ஆண்டு முதல் இருக்கிறேன். ஆகையால், இந்திய கிரிக்கெட் பற்றியும், அதன் பின்பற்றப்படும் சிஸ்டம் பற்றியும் எனக்கு நன்றாக தெரியும் என்று தெரிவித்தார்.

சறுக்கல் இருந்தது

சறுக்கல் இருந்தது

முன்னதாக பீல்டிங் பயிற்சியாளர் குறித்து தேர்வுக்குழு தலைவர் எம்எஸ்கே பிரசாத்தும் கருத்து கூறியிருந்தார். அணியின் பீல்டிங்கில் சற்று சறுக்கல் இருக்கலாம். ஆனால் தரமான பீல்டிங் அணியாக உயர்த்தியிருக்கிறார் ஸ்ரீதர். அதனால் வேறு யாரையும் அந்த இடத்திற்கு எங்களால் யோசித்து பார்க்க முடியவில்லை என்றார்.

Story first published: Friday, August 23, 2019, 18:41 [IST]
Other articles published on Aug 23, 2019
English summary
Jonty rhodes explains how he losing Indian job coach.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X