For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

இந்தியாவின் பந்துவீச்சு மிரட்டலாக இருந்தது.. ரொம்ப கடினமான நாள்.. புலம்பிய பட்லர்.. ரோகித் பாராட்டு

லண்டன்: இங்கிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

Recommended Video

Indian Team-க்கு Virat Kohli பாரமாகிவிட்டாரா? *VOX

டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்த இந்திய அணியில் பும்ரா மற்றும் முகமது ஷமியின் அனல் பறக்கும் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் இங்கிலாந்து வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.

இதன் மூலம் இங்கிலாந்து அணி 110 ரன்களில் சுருண்டது. இந்திய வீரர் பும்ரா 6 விக்கெட்டுகளை சாய்த்தார்.

நெருக்கடி

நெருக்கடி

இதனிடையே தோல்வியை குறித்து பேசிய இங்கிலாந்து அணி கேப்டன் ஜாஸ் பட்லர், மிகவும் கடினமான நாளாக இது அமைந்தது. இந்த தோல்வியால் மூழ்கி விடால் அடுத்த போட்டிக்கு தயாராக வேண்டும். வானம் மேகமூட்டத்துடன் இருந்ததால் பந்து நன்றாக ஸ்விங் ஆகும் என்று தெரியும். இந்திய வீரர்கள் அந்த சூழலை சிறப்பாக பயன்படுத்தி கொண்டனர். டி20 போட்டியில் பவர்பிளேவிலும் சரி இந்திய வீரர்கள் நன்றாக பந்துவீசி நெருக்கடி அளித்தனர்.

பும்ராவுக்கு பாராட்டு

பும்ராவுக்கு பாராட்டு

நாங்கள் எதிர்கொண்டதில் பும்ரா ஒரு சிறந்த பவுலர். அவர் பந்துவீசிய விதம் பிரமிக்க வைக்கும் வகையில் இருந்தது. 6 விக்கெட் எடுத்ததற்கு தகுதியான நபர் தான் அவர். விக்கெட் எடுத்தால் தான் வெற்றி பெற முடியும் என்ற நிலை எப்போதுமே கடினமானது தான். ரிஸ்க் எடுத்து விக்கெட்டை எடுத்து தாருங்கள் என்று கூறுவது சரி கிடையாது.. டெஸ்ட் போட்டியில் நல்ல ஃபார்மில் இருந்துவிட்டு, தற்போது எங்களது வீரர்கள் அவுட்டாகிவிட்டனர்.

ரோகித் கருத்து

ரோகித் கருத்து

வெற்றி குறித்து பேசிய இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா, சூழலுக்கு ஏற்ப டாஸ் வென்று சரியான முடிவை எடுத்தோம். சூழலை சிறப்பாக பயன்படுத்தி கொண்டோம். ஆனால் எந்த சூழ்நிலை இருந்தாலும், அதில் சிறப்பாக செயல்படும் அளவிற்கு எங்களிடம் வீரர்கள் உள்ளனர். எங்கள் வீரர்கள் பந்துவீசுவதற்கு ஏற்ப நாங்கள் ஃபில்டர்களை நிறுத்தினோம். அதற்கு நல்ல பலன் கிடைத்தது.

ரோகித் மகிழ்ச்சி

ரோகித் மகிழ்ச்சி

ஷிகர் தவானும், நானும் நீண்ட நாட்களாக இணைந்து விளையாடுவதால் ஒருவரை ஒருவர் பற்றி நன்கு தெரியும். ஷிகர் தவான் நீண்ட நாட்களுக்கு பிறகு ஒருநாள் போட்டியில் விளையாடுகிறார். அவருடைய அனுபவம் நிச்சயம் அணிக்கு தேவை. நான் அடிக்கும் ஹூக் ஷாட்கள் ரிஸ்க் நிறைந்தவை என தெரியும். ஆனால் அதனால் ரன் கிடைக்கும் வரை எனக்கு மகிழ்ச்சியே.

Story first published: Wednesday, July 13, 2022, 6:43 [IST]
Other articles published on Jul 13, 2022
English summary
Jos buttler and Rohit sharma post match presentation speech after 1st odi இந்தியாவின் பந்துவீச்சு மிரட்டலாக இருந்தது.. ரொம்ப கடினமான நாள்.. புலம்பிய பட்லர்.. ரோகித் பாராட்டு
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X