For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

டி-10 கிரிக்கெட் லீகில் கேரளா கிங்ஸ் சாம்பியன்

By Staff

ஷார்ஜா: எப்ப ஆரம்பிச்சுது, எப்ப முடிஞ்சுது என்பது தெரியாத வகையில், மிகவும் வேகமாக நடந்த, டி-10 கிரிக்கெட் லீக் போட்டியில், கேரளா கிங்ஸ் அணி சாம்பியன் பட்டத்தை வென்றது.

பாகிஸ்தானைச் சேர்ந்த தொழிலதிபர் முயற்சியில், டி-10 கிரிக்கெட் லீக் போட்டிகளை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் நடத்தியது. கேரளா கிங்க்ஸ், மராத்தா அராபியன்ஸ், பாக்தூன்ஸ், பஞ்சாபி லெஜன்ட்ஸ், டீம் ஸ்ரீலங்கா, பெங்கால் டைகர்ஸ் என, 6 அணிகள் பங்கேற்றன.

Kerala Kings – the champ


தலா 10 ஓவர்கள் கொண்ட இந்தப் போட்டித் தொடரின் பைனலில், கேரளா கிங்க்ஸ் அணியும், பஞ்சாபி லெஜன்ட்ஸ் அணியும் மோதின. அதில் கேரளா கிங்க்ஸ் அணி, 8 விக்கெட் வித்தியாசத்தில் வென்று, முதல் சாம்பியனானது.

பஞ்சாபி லெஜன்ட்ஸ் 3 விக்கெட் இழப்பு 120 ரன்கள் எடுத்தது. கேரளா கிங்க்ஸ், 8 ஓவர்களிலேயே 2 விக்கெட் மட்டும் இழந்து, 121 ரன்கள் எடுத்து வென்றது.

இந்தத் தொடரில், இந்தியாவில் இருந்து வீரேந்திர சேவாக், மராத்தா அராபியன்ஸ் அணிக்காக விளையாடினார்.







Story first published: Friday, December 22, 2017, 12:21 [IST]
Other articles published on Dec 22, 2017
English summary
Kerala Kings champion in the T-10 League
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X