For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

தொடரே போச்சு..5வது டெஸ்டில் இந்த வீரர்களுக்கு வாய்ப்பு கொடுக்கலாமே கோஹ்லி

Recommended Video

தொடரே போச்சு..5வது டெஸ்டில் எதிர்பார்க்கப்படும் வீரர்கள் பட்டியல்- வீடியோ

லண்டன் : இந்திய அணியின் இங்கிலாந்து சுற்றுப்பயணம் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் கடைசி போட்டி நாளை லண்டனில் நடைபெற இருக்கிறது. இத்தொடரை ஏற்கனவே இங்கிலாந்து கைப்பற்றிய நிலையில் கடைசி போட்டியில் நாளை இந்திய அணி இங்கிலாந்தை எதிர் கொள்கிறது.

இந்திய அணியில் விராட் கோஹ்லி புதிய வீரர்களுக்கு வாய்ப்பு அளிக்க வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது அடுத்துவரும் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் ஆஸ்திரேலியா அணிக்கெதிரான தொடர்களுக்கு வீரர்களை தேர்வு செய்ய உதவலாம்.

நாளைய போட்டியில் எதிர்பார்க்கப்படும் வீரர்கள் :

ரவீந்திர ஜடேஜா :

ரவீந்திர ஜடேஜா :

அஸ்வின் உடன் 5 போட்டிகளுக்கான அணிக்கு தேர்வு செய்யப்பட்டவர். இதுவரை அணியில் சேர்க்கப்படவில்லை. முதல் டெஸ்ட் போட்டிக்கு பிறகு பெரிதும் சோபிக்காத அஸ்வினுக்கு பதிலாக ஜடேஜா களமிறக்கப்பட வேண்டும். இவர் இடது கை சுழல் பந்துவீச்சாளர் மற்றும் கடைசி நிலையில் அதிரடியாக விளையாடக்கூடிய பேட்ஸ்மேன் ஆவார்.

கருண் நாயர் :

கருண் நாயர் :

இந்திய டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் சேவாக்குக்கு அடுத்தபடியாக முச்சதம் அடித்த ஒரே வீரர். ஆனால் இவரை எந்த நிலையில் களமிறக்குவது என்பது கேள்விக்குறியான ஒன்று. ஏனென்றால் மூன்றாம் நிலையில் புஜாரா,நான்காம் நிலையில் கோஹ்லி,ஐந்தாம் நிலையில் ரஹானே ஆகியோர் தற்போது பார்மில் இருப்பதால் இவருக்கான இடம் கிடைப்பதற்கான வாய்ப்புகள் குறைவே.

பிரித்வி ஷா :

பிரித்வி ஷா :

வளர்ந்து வரும் இளம்வீரர். அண்டர்19 மற்றும் இந்திய ஏ அணிகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய அவர் டெஸ்ட் போட்டிக்கான அணியில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். தொடர்ந்து பேட்டிங்கில் சொதப்பி வரும் ராகுலுக்கு பதிலாக இவரை களமிறக்க வேண்டும் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கின்ற நிலையில் விராட் கோஹ்லி இவரை அணியில் சேர்ப்பாரா அல்லது ராகுலுக்கு கடைசி வாய்ப்பு அளிப்பாரா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

ஹனுமா விஹாரி :

ஹனுமா விஹாரி :

தற்போது விளையாடி வரும் கிரிக்கெட் வீரர்களில் அதிகமான பர்ஸ்ட் கிளாஸ் ஆவரேஜ் கொண்ட வீரர் ஹனுமா விஹாரி என்பது இவரின் தனி சிறப்பு. இந்திய அணியில் பாண்டியாவுக்கு பதிலாக இவரை களமிறக்கலாம். ஆனால் விராட் கோஹ்லி 5 பந்துவீச்சாளர்களுடன் களமிறங்கும் முடிவில் இருப்பதால் இவருக்கான இடமும் கேள்விக்குறியே.

ஷர்டுல் தாக்குர் :

ஷர்டுல் தாக்குர் :

இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கான அணியில் இடம்பெற்று டெஸ்ட் அறிமுகத்திற்காக காத்திருக்கும் வேகபந்துவீச்சாளர். தற்போது இந்திய அணியின் வேகபந்துவீச்சு வலிமையாக இருப்பதால் இவர் அணியில் இடம்பெறுவது கடினமே.

Story first published: Thursday, September 6, 2018, 12:20 [IST]
Other articles published on Sep 6, 2018
English summary
Will virat kohli give chances to new players for the fifth test
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X