ஐசிசி ஒருநாள் பேட்டிங் தரவரிசை பட்டியல்: இந்தியாவின் மித்தாலிராஜ் முதலிடம் பிடித்து அசத்தல்!

Posted By:

மும்பை: ஐசிசி ஒரு நாள் பேட்டி பேட்டிங் தரவரிசையில் இந்தியாவின் மித்தாலி ராஜ் முதலிடம் பிடித்து அசத்தியுள்ளார்.

ஐசிசி மகளிர் ஒருநாள் பேட்டிங்குக்கான தரவரிசை பட்டியலை இன்று வெளியிட்டது. இதில் இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் கேப்டன் மித்தாலிராஜ் முதலிடம் பிடித்து அசத்தியுள்ளார்.

Mithali tops in ICC batswoman ranking list

ஆஸ்திரேலியாவின் எல்லிஸ் பெர்ரி இரண்டாம் இடத்தையும், நியூசிலாந்து அணியின் எமி சாட்டெர்த்வைட் மூன்றாம் இடத்தையும் பிடித்துள்ளனர்.

இந்தப் பட்டியலில் மித்தாலி ராஜ் 753 புள்ளிகளை பெற்றுள்ளார். ஆஸ்திரேலியாவின் பெர்ரி 725 புள்ளிகளையும் சாட்டெர்த்வைட் 720 புள்ளிகளையும் பெற்றுள்ளனர்.

ஐசிசியின் பந்துவீச்சாளர்களுக்கான தரவரிசைப் பட்டியலில் இந்தியாவின் ஜூலன் கோஸ்வாமி 652 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்தில் உள்ளார். 656 புள்ளிகளுடன் தென் ஆப்பிரிக்காவின் மரிஸான்னே கப் முதலிடத்தை பிடித்துள்ளார்.

Story first published: Monday, October 30, 2017, 17:00 [IST]
Other articles published on Oct 30, 2017
POLLS

myKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற