For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

விராட் கோலியை நீக்க வேண்டும்.. புதிய கேப்டன் அவர் தான்.. முன்னாள் வீரர் அழுத்தமான கருத்து!

மும்பை: விராட் கோலியை கேப்டன் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என இந்திய முன்னாள் வீரர் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் நியூசிலாந்து அணியிடம் கோப்பையை பறிக்கொடுத்தது இந்திய அணி.

 WTC Final: திடீரென ஓய்ந்த மழை.. அடுத்த 6 நிமிடத்தில்.. நிம்மதியுடன் எடுத்த நடவடிக்கைகளுக்கு WTC Final: திடீரென ஓய்ந்த மழை.. அடுத்த 6 நிமிடத்தில்.. நிம்மதியுடன் எடுத்த நடவடிக்கைகளுக்கு

இந்த போட்டியில் தோல்வியடைந்ததில் இருந்து விராட் கோலியின் கேப்டன்சிப் மீது பல்வேறு விமர்சனங்கள் எழுந்து வருகின்றன.

தொடர் தோல்விகள்

தொடர் தோல்விகள்

விராட் கோலியின் கேப்டன்சியில் இதுவரை 3 ஐசிசி தொடர்களில் இந்திய அணி பங்கேற்றுள்ளது. இதில் ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரும் ஒன்றாகும். இந்த 3 தொடர்களிலுமே இந்திய அணி கடைசி வரை சென்று ப்ளே ஆஃப் சுற்றுகளில் வெளியேறி ஏமாற்றம் அளிக்கிறது. அதிலும், கடந்த 2019ம் ஆண்டு உலகக்கோப்பை மற்றும் டெஸ்ட் சாம்பியன்ஷிப் என 2 முறை நியூசிலாந்து அணியிடம் தோல்வி அடைந்து வெளியேறியுள்ளது.

 விமர்சனங்கள்

விமர்சனங்கள்

இதனால் விராட் கோலியை கேப்டன் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது. மற்றொரு புறம் இந்திய அணிக்கு 3வடிவ கிரிக்கெட்டிற்கும் தனித்தனியாக கேப்டன்கள் நியமிக்கப்பட வேண்டும் என கோரி வருகின்றனர். உலகில் இங்கிலாந்து, இலங்கை, வெஸ்ட் இண்டீஸ், வங்கதேசம், ஆஃப்கானிஸ்தான் போன்ற நாடுகள் ஒன்றுக்கும் மேற்பட்ட கேப்டன்களை வைத்துள்ளது. ஆனால் இந்தியா, நியூசிலாந்து, பாகிஸ்தான் மட்டுமே ஒரே ஒரு கேப்டன்கள் மீது நம்பிக்கை வைத்துள்ளது.

டி20க்கு புதிய கேப்டன்

டி20க்கு புதிய கேப்டன்

இந்நிலையில் இந்திய டி20 அணிக்கு புதிய கேப்டனை நியமிக்கப்பட வேண்டும் என வலுவான கருத்தை இங்கிலாந்து முன்னாள் வீரர் மாண்டி ஃபனிசர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசியுள்ள அவர், என்னைப் பொறுத்தவரை இந்திய டி20 அணியை ரோகித் சர்மாவிடம் ஒப்படைக்க வேண்டும். ஐபிஎல்-ல் மும்பை அணியை அவர் வழிநடத்திய விதமே அதற்கு சான்று எனக்கூறியுள்ளார்.

இங்கிலாந்து டெஸ்ட்

இங்கிலாந்து டெஸ்ட்

மேலும் பேசிய அவர், டெஸ்ட் சாம்பியன்ஷிப்பை கைநழுவிய வருத்தத்தில் இருக்கும் இந்திய அணி அடுத்ததாக வரும் இங்கிலாந்து தொடரில் வெற்றி பெற்றாக வேண்டும். அப்படி வெற்றி பெறவில்லை என்றால் டி20 உலகக்கோப்பை தொடரில் வெளியேறுவது உறுதி. இங்கிலாந்து அணியின் டாப் ஆர்டர் தற்போது சரியில்லை. பந்துவீச்சிலும் கெயில் ஜேமிசன் போன்ற வீரர் இல்லை. எனவே இந்திய அணி வெல்வது சுலபம் தான்.

Story first published: Friday, June 25, 2021, 19:53 [IST]
Other articles published on Jun 25, 2021
English summary
Former England Player Monty Panesa thinks India’s T20 captaincy should be given to Rohit Sharma
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X