314 ஒரு நாள் போட்டி.. 401 விக்கெட்.. நம்ம தல டோணிக்கு டபுள் விசில் அடிங்க!

By: SRIVIDHYA GOVINDARAJAN
400 விக்கெட்... தல தோனி புதிய சாதனை!- வீடியோ

கேப்டவுன்: தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான மூன்றாவது ஒருதினப் போட்டியில், 400வது விக்கெட்டை வீழ்த்திய புதிய சாதனை படைத்தார் கேப்டன் கூல் மகேந்திர சிங் டோணி.

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒருதினப் போட்டித் தொடரில் நேற்று இரவு நடந்த மூன்றாவது ஆட்டத்திலும் வென்று, 3–0 என, இந்தியா முன்னிலையில் உள்ளது. இதில் தென்னாப்பிரிக்க அணியின் பொறுப்பு கேப்டன் ஆடம் மர்க்ரமை ஸ்டம்பிங் செய்து, விக்கெட் கீப்பராக, 400 விக்கெட்களை வீழ்த்திய முதல் இந்தியரானார் பத்மபூஷண் டோணி

MS Dhoni 400

உலக அளவில் இந்த சாதனையைப் புரியம் நான்காவது விக்கெட் கீப்பர் டோணி. 314 ஒருதினப் போட்டிகளில், 399 விக்கெட்களை வீழ்த்தியதில் பங்கேற்றுள்ளார் டோணி. அதில், 294 கேப்ட், 105 ஸ்டம்பிங். நேற்று நடந்த போட்டியில் ஒரு ஸ்டம்பிக், ஒரு கேட்ச் பிடித்து, தனது கணக்கை, 401ஆக உயர்த்திக் கொண்டார்.

ஆஸ்திரேலியாவின் ஆடம் கில்கிறிஸ்ட், இலங்கையின் குமார் சங்கக்காரா, தென்னாப்பிரிக்காவின் மார்க் பவுச்சர் ஆகியோர் மட்டுமே 400க்கு மேற்பட்ட விக்கெட்களை வீழ்த்திய விக்கெட் கீப்பர்கள்.

404 போட்டிகளில், 482 விக்கெட்களை வீழ்த்தியதில் பங்கேற்று சங்கக்காரா முதலிடத்தில் உள்ளார். கில்கிறிஸ்ட் 287 போட்டிகளில், 472 விக்கெட்களை வீழ்த்தியுள்ளார். பவுச்சர் 295 போட்டிகளில் 424 விக்கெட்களை வீழ்த்தியுள்ளார்.

மின்னல்வேக ஸ்டம்பிங் செய்து, ஸ்டம்பிங் கிங்காக இருக்கும் டோணி, 100க்கு மேற்பட்ட ஸ்டம்பிங் செய்த ஒரே விக்கெட் கீப்பர்.

Story first published: Thursday, February 8, 2018, 11:55 [IST]
Other articles published on Feb 8, 2018
POLLS

myKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற