சேப்பாக்கம் பக்கம் பார்த்து போங்க… பயிற்சியில் டோணி!

Posted By: SRIVIDHYA GOVINDARAJAN
ஐபிஎல் கிரிக்கெட்டுக்கு தயாராகும் தல தோனி- வீடியோ

சென்னை: பேஸ்புக் நம்முடைய ரகசியங்களை திருடியதா? ராஜ்யசபா தேர்தலில் யாருக்கு வெற்றி கிடைக்கும்? எடப்பாடியின் ஓராண்டு ஆட்சி எப்படி? இதெல்லாம் விவாதங்களுக்கு உட்பட்டதாக இருந்தாலும், விவாதம் இல்லாமல் மிகச் சிறந்த கிரிக்கெட் கேப்டன் யார் என்றால், அனைவருடைய பதில்...

ஆம், ஐபிஎல் 11வது சீசனில் விளையாடுவதற்கு, கேப்டன் கூல் மகேந்திர சிங் டோணி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தயாராகி வருகிறது. இதற்காக, சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று முதல் பயிற்சியை துவக்கியுள்ளது.

11வது சீசனை எட்டியுள்ளபோதும், இதுதான் முதல் சீசன் போல, உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிக்கு இணையாக பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது ஐபிஎல் கிரிக்கெட் போட்டி.

8 அணிகள் பங்கேற்கும் இந்த சீசனில், இரண்டாண்டுகளுக்குப் பிறகு சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் விளையாட உள்ளன.

அதிக வெற்றி பெற்றுள்ள அணி

அதிக வெற்றி பெற்றுள்ள அணி

2010 மற்றும் 2011ல் சாம்பியன் பட்டம் மற்றும் 2010 மற்றும் 2014ல் சாம்பியன்ஸ் கோப்பை போட்டிகளில் பட்டம் வென்றுள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. ஐபிஎல் அணிகளிலேயே, 60 சதவீதத்துடன் அதிக வெற்றி பெற்ற அணியாகவும் உள்ளது.

7ல் முதல் போட்டி

7ல் முதல் போட்டி

இதற்கு முக்கிய காரணம், அணியின் கேப்டன் மகேந்திர சிங் டோணி என்பதை பால் குடிக்கும் குழந்தைகள்கூட விசில் போட்டு சொல்லும். இந்தாண்டுக்கான போட்டிகள், ஏப்ரல் 7ல் துவங்குகிறது. முதல் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியுடன் சென்னையின் சூப்பர் கிங்ஸ் மோதுகிறது.

தயாராகிறது சிஎஸ்கே

தயாராகிறது சிஎஸ்கே

இந்த சீசனுக்கு தயாராகும் வகையில், கேப்டன் டோணி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது பயிற்சியை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று துவக்கியுள்ளது.

ஹெல்மட்டோடு போங்கப்பு

ஹெல்மட்டோடு போங்கப்பு

அதனால், சேப்பாக்கம் மைதானம் பக்கம் போறவங்க பார்த்து போங்க. டூவீவரில் போறவங்க கண்டிப்பாக ஹெல்மெட் போட்டுகோங்க. டோணி அணி பயிற்சியில் இருப்பதா ஞாபகம் வைச்சுக்கோங்க.

கிரிக்கெட்னா உயிரா?.. மைகேல் பேன்டசி கிரிக்கெட் ஆடி நிரூபிங்க பாஸ்!

English summary
Dhoni’s CSK team started its practice
Story first published: Friday, March 23, 2018, 12:20 [IST]
Other articles published on Mar 23, 2018

myKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற