For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

மூளையை அதிகமாக பயன்படுத்துங்கள்...: பந்து வீச்சாளர்களுக்கு டோணி அட்வைஸ்

ஹாமில்டன்: இந்திய பந்து வீச்சாளர்கள் இப்போது இருப்பதை விட இன்னும் அதிகமாக மூளையைப் பயன் படுத்த வேண்டும், அப்போது தான் சிறப்பாக செயல்பட முடியும் என தெரிவித்துள்ளார் இந்திய அணித் தலைவர் டோணி.

நியூசிலாந்துக்கு எதிரான 4-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் இந்தியா தோல்வியடைந்தது. அத்துடன் ஒருநாள் போட்டித் தொடரையும் இழந்தது. இதனால் கடும் அதிருப்தியடைந்த அணித்தலைவர் டோணி, தோல்விக்கான முக்கியக் காரணமாக பந்துவீச்சாளர்களின் குறையை சுட்டிக் காட்டியுள்ளார். மேலும், இனி வரும் போட்டிகளில் அவர்கள் எவ்வாறு சிறப்பாக விளையாட வேண்டும் என அவர் அறிவுரையும் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் தெரிவித்துள்ளதாவது :-

திறமைசாலிகள் தான்....

திறமைசாலிகள் தான்....

நமது பந்துவீச்சாளர்கள் திறமைசாலிகள்தான். ஆனால் மோசமான பந்துவீச்சின் காரணமாகவே இத்தொடரை இழந்துள்ளோம்.

புவனேஷ்வர்...

புவனேஷ்வர்...

இத்தொடரில் சமி மட்டுமே நிலையான ஆட்டத்ததை வெளிப்படுத்தி வருகிறார். புவனேஷ்குமார் இத்தொடரில் ஜொலிக்காவிட்டாலும் அவர் சிறந்த பந்துவீச்சாளர் ஆவார்.

மூளைய யூஸ் பண்ணுங்கப்பா...

மூளைய யூஸ் பண்ணுங்கப்பா...

ஆனால் தங்களது முழுத்திறமை யையும் வெளிப்படுத்த மூளையை அதிகமாக பயன்படுத்தி சிறப்பாக செயல்பட வேண்டும்.

கவனமா இருங்க...

கவனமா இருங்க...

கடைசி நேரத்தில் ரன்களை வாரி வழங்குவதை பந்து வீச்சாளர்கள் நிறுத்தவேண்டும். புதுப்பந்தைக் கையாளும் போது கவனமாக இருப்பது அவசியம்''என இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Story first published: Wednesday, January 29, 2014, 15:16 [IST]
Other articles published on Jan 29, 2014
English summary
It’s important to bowl according to what we plan. We did not do that,” rued India captain M.S. Dhoni after the ODI series defeat here on Tuesday.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X