இவருக்கா இந்த நிலைமை? மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சோயிப் அக்தர்.. ரசிகர்களுக்கு கோரிக்கை

ஆஸ்திரேலியா: பாகிஸ்தான் கிரிக்கெட் அணியில் ஒரு காலத்தில் அதிவேகமாக பந்துவீசி உலக சாதனை படைத்த சோயிப் அக்தர், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Recommended Video

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சோயிப் அக்தர்.. ரசிகர்களுக்கு கோரிக்கை

சோயிப் அக்தருக்கு பாகிஸ்தானில் மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் ரசிகர்கள் பட்டாளம் உள்ளனர். அதற்கு காரணம் அவர் பந்துவீசும் முறை தான்.

சோயிப் அக்தர் ஓடி வருவதை பார்த்தாலே, பந்தை எதிர்கொள்ளும் பேட்ஸ்மேன்களின் கால்கள் நடுங்கும். அந்த அளவுக்கு தனக்கு என்ற ஒரு பெயரை அவர் படைத்திருந்தார்.

3 முறை இந்தியா vs பாகிஸ்தான் மோத வாய்ப்பு.. ஆசியக்கோப்பையில் சூப்பர் சர்ஃப்ரைஸ்.. எப்படி தெரியுமா? 3 முறை இந்தியா vs பாகிஸ்தான் மோத வாய்ப்பு.. ஆசியக்கோப்பையில் சூப்பர் சர்ஃப்ரைஸ்.. எப்படி தெரியுமா?

அதிவேகம்

அதிவேகம்

பாகிஸ்தான் அணிக்காக 46 டெஸ்ட் போட்டியில் விளையாடிய சோயிப் அக்தர் 178 விக்கெட்டுகளையும், 163 ஒருநாள் போட்டியில் 247 விக்கெட்டுகளையும், 15 டி20 போட்டியில் 19 விக்கெட்டுகளையும் வீழ்த்தி இருக்கிறார். ராவல்பிண்டி எக்ஸ்பிரஸ் என்று ரசிகர்களால் போற்றப்படும் அவர், பாகிஸ்தான் அணிக்காக 14 வருடங்களாக விளையாடி இருக்கிறார்.

சக்கர நாற்காலி

சக்கர நாற்காலி

தற்போது 46 வயதான சோயிப் அக்தர், ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் உள்ள மருத்துவமனையில் அறுவை சிகிச்சை மேற்கொண்டு தற்போது ஓய்வில் உள்ளார். இது குறித்து ரசிகர்களுக்கு விடியோ ஒன்றை வெளியிட்டுள்ள சோயிப் அக்தர், பாகிஸ்தானுக்காக மேலும் 5 ஆண்டுகள் விளையாடி இருந்தால் தமது வாழ்நாள் முழுவதும் சக்கர நாற்காலியில் அமர்ந்து இருக்கும் நிலை ஏற்பட்டு இருக்கும் என்று கூறியுள்ளார்.

வலியால் துடித்தேன்

வலியால் துடித்தேன்

சர்வதேச கிரிக்கெட்டிலிருந்த ஓய்வு பெற்ற பிறகும், தாம் வலியால் துடிப்பதாக குறிப்பிட்ட அக்தர், 11 ஆண்டுக்கு பிறகும் வலியால் தான் தூக்கம் கழிகிறது என்று குறிப்பிட்டுள்ளார். வேகமாக பந்துவீசி, தமது எலும்பு மிகவும் பாதிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்ட சோயிப் அக்தர், பாகிஸ்தானுக்காக இதை செய்ததில் மகிழ்ச்சி தான் என்றார்.

ரசிகர்களுக்கு கோரிக்கை

ரசிகர்களுக்கு கோரிக்கை

நாட்டுக்காக இன்னும் எத்தனை வலியையும் தாங்கி கொள்வேன் என்று குறிப்பிட்டுள்ள சோயிப் அக்தர், ரசிகர்கள் தனது உடல் நலத்துக்காக பிரார்த்தனை செய்து கொள்ளுமாறு கோரிக்கை விடுத்துள்ளார். சோயிப் அகத்ருக்கு மேற்கொண்டுள்ள அறுவை சிகிச்சை வெற்றிக்கரமாக முடிக்கப்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
Pakistan Ex cricketer Shoaib akthar admitted in hospital released a video இவருக்கா இந்த நிலைமை? மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சோயிப் அக்தர்.. ரசிகர்களுக்கு கோரிக்கை
Story first published: Monday, August 8, 2022, 18:39 [IST]
Other articles published on Aug 8, 2022

Latest Videos

  + More
  POLLS
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Yes No
  Settings X